Tuesday, April 26, 2005

முட்டாள் தினமும் முட்டாள்களும்....

ந்த ஏப்பிரல் மாத முட்டாள்கள் தினம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. சிலர் மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கி இருப்பார்கள். சிலர் முட்டாள்கள் ஆகி இருப்பார்கள்.

நான் இந்த முட்டாள்கள் விளையாட்டில் பங்கு பற்றுவதில்லை எனெனில் நான் புத்திசாலி என நினைத்து விடாதீர்கள் சரியாக சொல்வதானால் நான் மற்றவர்களை முட்டாள் ஆக்கும் போது எனக்கு வரும் சந்தோஷம் நான் மற்றவர்களால் முட்டாள் ஆக்கும் போது எனக்கு வருவதில்லை (நற....நற..). இது போல தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதால் தான்.எது எப்படியோ முட்டாள்கள் தினம் என்றாலே எல்லோருமே எச்சரிக்கையுடன் இருப்பது வழமை.

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இம் முட்டாள்கள் தினத்தில் பல கருத்து கணிப்புக்கள் எடுப்பார்கள். யார் அவ்வருடத்தின் சிறந்த முட்டாள் என்று அவ்வாறு அமெரிக்காவில் இந்த வருடத்துக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 80 சதவீத வாக்குடன் "மிகச் சிறந்த முட்டாள்"ஆக முதலாவது இடத்துக்கு
இந்த வருடமும் ? தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் "குழந்தை மனசு" மைக்கல் ஜாக்சன். அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. இது மூன்றாவது முறை.

6வது இடத்தினை அவரின் தங்கை ஜேனட் ஜாக்சன் பெற (இவர் விருது பெற இவரின் தொலைக்காட்சி மேலாடை அவிழ்ப்பு காரணமாக இருக்கலாம்),
5வது இடத்தினை ஜோர்ஜ் புஷ் பெறுகிறார்.எனக்கு என்னவோ சரியாகத்தான் அமெரிக்க மக்கள் தெரிவு செய்திருக்கின்றனர் என விளங்குது.

இந்த முட்டாள்கள் தினத்தில் ஒருவர் என்னொருவரை முட்டாள் ஆக்கினால் விடயம் இரண்டு பேருக்கு இடையில்தான். ஆனால் சில பத்திரிகைகள்,வானொலிகள் மக்களை முட்டாள் ஆக்க முனைகின்றன.சில உணர்வுபூர்வமான விடயங்களில் சில வேளைகளில் இவை மக்களை முட்டாள் ஆக்க முனைந்தால் பெரும் கலவரமே ஏற்படும் அல்லவா?
அப்படி ஒரு சம்பவம் இம் முட்டாள் தினத்தில்குரோசியாவில் ஏற்பட்டுள்ளது.
ஏப்பிரல் 01ந் திகதி (முன்பு யூகோஸ்லாவியாவில் அங்கம் வகித்த) குரோசியா எனும் நாட்டின் ஒரு இணையத்தள செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட ஆயிரக் கணக்கான மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யதொடங்கி விட்டார்கள்.

குரோசியா முன்பு யூகோஸ்லாவியாவில்அங்கம் வகித்ததாக சொன்னேன் அல்லவா? ரஸ்யாவின் உடைவிற்கு பின்னர் யூகோஸ்லாவியாவும் பல நாடுகளாக உடைந்து போனது.அப்படி உருவான நாடுகளில் ஒன்று தான் குரோசியா.உடைந்தது என்றால் கத்தி இன்றி ரத்தம் இன்றி இல்லை.கொடும் யுத்தத்தின் பின்னர் தான்.

அப்படி நடந்த யுத்தத்தில் குரோசியா சார்பாக போர்குற்றங்கள் புரிந்ததாக அண்ட் கொற்ரோவினா என்னும் ஒரு தளபதி மேல் குற்றம் சாட்டப்பட்டு அவர் ஜரோப்பிய ஒன்றியத்தினால் தேடப்பட்டுவந்தார்.இந்த அண்ட் கொற்ரோவினாவை குரோசியா ஒப்படைக்காவிட்டால் 2006 ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள குரோசியா மீது தடை விதிக்கப்ட்டுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக மேற்படி இணையதளம் செய்தி வெளியிட உடனடியாக அண்ட் கொற்ரோவினாவுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் ஆரம்பமாகி கலவரம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த இணையத்தளம் முட்டாள்கள் தினத்தில் மக்களை முட்டாள் ஆக்கவே அச் செய்தி வெளியிட்டதாக கூறியதுடன் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

நான் முன்னரே கூறியபடி மக்களின் வாழ்வினில் பெரும்
தாக்கத்தினை செய்யும் இப்படியான ஊடகங்கள் மக்களை முட்டாள்கள் ஆக்க முனைவது வரவேற்கத்தக்கது அல்ல.
இது என்ன விடயம்? எங்கள் நாடுகளில் வருடத்தில் 365 நாட்களும் இந்த ஊடகங்கள் மக்களை முட்டாள்கள் என நினைத்தே செய்திகளை தருகின்றனவே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

No comments: