Saturday, June 11, 2005

ரொரன்ரோவில் எஸ்.வி.சேகரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.

ரொரன்ரோவில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியினை
புறக்கணிக்கும்படி தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே இங்கு இது போன்ற ஒரு புறக்கணிப்பு விசுவுக்கு எதிராக கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் மேற்கொள்ளப்பட்டதும் அது முழு வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஒரு பதிவு கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன்.
தற்போது இடம்பெறும் இப் புறக்கணிப்பு தொடர்பான கருத்துக்களை
அடுத்த பதிவில் தருகிறேன்.

( ஆகா எனது இந்தவலைப் பூ ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டதே)
வெற்றிகரமான 365 ஆவது நாள். ஆனால் என்னஎழுதிக் கிழிச்சனி எண்டு
மட்டும் கேட்கவேண்டாம். ஜாதி,மதம்,தனிமனிதர் மீதான தாக்குதல்கள்,மாறுவேட பின்னூட்டங்கள்,வம்பு வழக்கு இப்படி எதிலும்
சிக்காமல் 365 நாள் வலைப்பூ நடத்தியதற்கு யாராவது "பட்டம்"
தரமாட்டார்களா? ஆனால் என்ன எழுதிக் கிழிச்சனீர் எண்டு யாராவது கேட்கக்
கூடாது.

13 comments:

மாயவரத்தான்... said...

மேற்படி விழாவில் கலந்து கோள்ளப் போவதில்லையென்று எஸ்.வி.சேகர் அறிவித்திருக்கிறார். (தகவல் நன்றி : ஜூனியர் விகடன்)

சுந்தரவடிவேல் said...

தமிழ் வணிகர் சங்கமோ ஏதோ நடத்தும் விழா இல்லையா இது? டொராண்டோவுக்கு வந்திருந்தபோது இதன் விளம்பரத்தைப் பார்த்துக் கொதித்துப் போய் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். எஸ்.வி.சேகர் மட்டுமென்றில்லை அதிலிருக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே மேட்டுக்குடி ஜல்லியடிப்புகளாகவே எனக்குப் படுகின்றன. இந்தக் கூத்தாடிகளைக் கூப்பிட முடிகின்றவர்களால் ஒரு தமிழிசைக் கலைஞரையோ, தமிழ்க்கூத்தாடிகளையோ கூப்பிட முடியாதா என்ன? எது மேன்மை என்று கருத வைக்கப் பட்டிருக்கிறார்கள் பாருங்கள், அங்குதான் அரசியல் இருக்கிறது.

மாயவரத்தான்... said...

ஓ... எஸ்.வி.சேகர் ஆங்கில கூத்தாடியோ?!

மாயவரத்தான்... said...

'மேட்டுக்குடி ஜல்லியடிப்பு' என்றால் என்ன? வெளிநாட்டில் போய் உட்கார்ந்து கொண்டும் இப்படி சிந்தித்துக் கொண்டிருப்பது எந்தவிதமான ஜல்லியடிப்பு?! இதே ரீதியில் நீங்கள் வசிக்கும் நாட்டவர் நினைத்தால் உங்கள் கதி?! இலங்கை தமிழர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பவர் (?!) என்கிற காரணத்தினால் எஸ்.வி.சேகரை புறக்கணிக்கச் செய்ய அவர்கள் கோரிக்கை வைப்பது மிக நியாயம். ஆனால் அங்கேயும் இப்படிப்பட்ட ஜல்லியடிப்புகளை வைக்கிறீர்கள் பாருங்கள், உண்மையில் இஙே தான் 'அரசியல்' இருக்கிறது.

Anonymous said...

anionmass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|மாயாவரத்தான் கரிகாலருக்கு முந்திக்கொண்டார். நடந்து விழுந்து மீசையிலே மண்படாமல் இருக்க, நடக்காமலே இருப்பதுதான் கௌரவமானது என்கிறார்.

வெளிநாட்டிலே இருந்தால் பாரின்சரக்கு உள்நாட்டில் இருந்தால் பட்டைச்சாராயம் என்பது தப்பல்லவா? சுந்தரவடிவேல் தமிழிசை தமிழ்க்கூத்தாடிகளை வெளிநாட்டுக்கு அழைக்காமல் க்ரேஸி மோகன், விசு, எஸ். வி. சேகர் ஆகியவர்களையே அழைக்கின்றவர்களைச் சொல்கிறார். அவர்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்வதைத்தான் ஜல்லியடிப்பு என்று சொல்கிறார். தெலுகுசங்கீதம் பாடும் தமிழகப்பாடகர்களை அழைக்கின்றவர்களும் இந்த ஜல்லியடிப்பாளர்கள்தான்.|

wichita said...

மாயவரத்தான் இந்தத் தகவலை உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவர் எஸ்.வி.சேகர் வழக்குப் போட உதவுவார் அல்லது தன் வலைப்பதிவிலாவது சேகர் வரக்கூடாது என்று சொன்னவர்களை மிரட்டுவார், அப்புறம் நீங்களும் அன்புடன் பாலாவும் ஆமாம் சாமி போடலாம்.

முகமூடி said...

// தமிழிசைக் கலைஞரையோ, தமிழ்க்கூத்தாடிகளையோ கூப்பிட முடியாதா // விளம்பரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை... தமிழிசை கலைஞரோ இல்லையா என்பது முக்கியமல்ல, விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்/தமிழ் தேசியவாதத்தை எதிர்ப்பவர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு புறக்கணிப்புத்தான்....

enRenRum-anbudan.BALA said...

wichita,
//அப்புறம் நீங்களும் அன்புடன் பாலாவும் ஆமாம் சாமி போடலாம்.
//
The only problem with people like you is that they tend to think they are the only ones having unbiased views and great intelligence. You are becoming too incorrigible. You tend to form opinion about persons too quickly (from one or two statements) and that is a faulty approach. Pl. realize that.

I ask you not to comment about me unnecessarily, when I am not involved in the discussin here. Please allow good sense to prevail !!!

மாயவரத்தான்... said...

விசிதா... இதை நீங்கள் ஜோக்கிறகாக எழுதியிருந்தீர்கள் என்றால் பரவாயில்லை.. சிரித்துவிட்டுப் போகிறேன். ஆனால் இதே போன்ற கருத்தை வெவ்வேறு இடங்களில் மூன்று பேர் தொடர்ந்து பரப்பி வருவதைப் பார்த்தால் அதன்பின் உள்ள விஷமத்தனம் பல்லைக் காட்டுகிறது. பரவாயில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு காமெண்ட் அடியுங்கள். உங்களால் முடிந்ததது அவ்வளவு தானே?! சரியோ, தப்போ... ஒவ்வொரு பின்னோட்டத்திலும் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்றோர் இப்படிப்பட்ட பின்னோட்டங்கள் மூலம் சம்பந்தப்பட்ட விவாதத்தை திசை திருப்பிவிட முயலுகிறீர்கள். எப்படியோ 'காரியத்தில் கண் வையடா தாண்டவ்க்கோனே' என்பதில் தடம் பிறழாமல் நடப்பதற்காக உங்களையும் உங்களுக்கு(ம்) ஆமாம்சாமி போடும் இருவரையும் பாராட்டுவதில் தப்பேயில்லை!!

Anonymous said...

I am a first time visitor & have problems with the font. Pls help. skarthikb4u@gmail.com

ரவிசங்கர் said...

சேகரை புறக்கணிக்க கூறியது சரி. இது மாதிரி உணர்வுகள் தமிழ்நாட்டிலும் வர வேண்டும்

Thamizhan said...

தமிழால் பிழைப்பு நடத்திக் கொண்டு,தமிழை,தமிழ் உணர்வைக் கொச்சைப் படுத்தி வருபவர்களைத் தமிழர்கள் என்று சொல்லாமல் ஒதுக்க வேண்டும்.உலகத் தமிழர்கள் அனைவருன் இந்தப் பச்சோந்திகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.கானடாத் தமிழர்கட்கு வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒதுக்கும் நாள் விரைவில் வரட்டும்.

Anonymous said...

சுனாமி அடித்து உலகமே கண்ணீர் கடலில் மூழ்கியிருந்த போது, அமீர்ரக்த்தில் (Jan 7 ) தனது நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியவர் எஸ்.வி. சேகர். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் தலித் ஒருவர் சங்கர மட சாமியார் ஆகலாம் எனும் தெரு நாடகத்தை தடுத்து நிறுத்தியதில் இவ்ரின் பங்கும் உண்டு என படித்ததாக நினைவு.