Friday, August 05, 2005

சனி,ஞாயிறு வந்தால் முகத்தில் சிரிப்பு


ந்த வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை இங்கு கனடாவில் விடுமுறை பாருங்கோ .சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று தினங்கள் விடுமுறை.அதை இங்கு லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்.ஏப்பிரல் மாதத்தின் பின்னர் 4,5 மாதங்களிற்கு இந்த லாங்வீக்கெண்ட் வரும்.திங்கட்கிழமை எண்டு இல்லை.வெள்ளிக்கிழமையும் வரும்.ஆனால் பொதுவாக வார இறுதிநாட்களை ஒட்டியே வரும்.கனடாவில் விடுமுறை நாட்களை எண்ணினால் இரண்டு கைகளில் எண்ணலாம்.அப்படி மிகவும் குறைவு. இதனால் எல்லோரும் இப்படியான விடுமுறை தினங்கள் எப்போது வரும் என்று எதிர் பார்த்திருப்பார்கள்.ஜந்து நாள் வேலை இரண்டு நாள் ஓய்வு இது சரிதான்.அனால் இங்கு 7 தினங்களும் கடுமையாக உழைபவர்களும் இருக்கின்றனர்.இப்படிஉழைப்பவர்கள் பொதுவாக கனடாவிற்கு வந்தேறுகுடிகளாக வந்தவர்களாக இருப்பதை காணலாம்.

எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் புதன் கிழமை எண்டால் சொல்லுவான் அப்பாடா புதன் கிழமை வந்திட்டுது.ஒருமாதிரி இந்த வாரமும் போய்விடும் எண்டு.இனி திங்கட்கிழமை இழுத்து பறித்துக் கொண்டு அலுவலகம் வந்துவிடுவான்.பின்பு புதன்கிழமை வர அதுமாதிரி சொல்லிக் சொல்லிக் கொண்டு ,இப்படியே சொல்லி சொல்லியே 14 வருடங்களாக கனடாவில் இருக்கிறான்.இப்படி பலர் இருக்கின்றனர். சரி நீங்கல் எப்படி எண்டு யாரோ கேக்கிறமாதிரி காதில் விழுது.சும்மா என்னைப்பற்றி எல்லாம் சொல்ல கூடாது.சரி பரவாயில்லசொல்லுறன்.நான் போனவாரமே திங் பண்ணீட்டன் திங்கட்கிழமை விடுமுறை.இந்தவாரம் 04 நாள்தான் வேலை அதனால் இந்த வாரம் ஒரு சோர்ட் வாரம் எண்டு. இது என்னைபோல சிலரின் கவலை

இப்படி சிலருக்கு அலுவலகம் வருவது பிரச்சனை எண்டால் இன்னும் சிலருக்கு சனி,ஞாயிறுகளில் அலுவலகம் இல்லை என்பது கவலை.என்ன கடும் உழைப்பாளியோ எண்டு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கவேற. கடுமையா "அவவுடன்" கடலை போடுற பலருக்கு இழப்புதானே பின்ன.இது இளந்தாரி
மாரின் கவலை.

இதிலே இன்னொரு வகையான ஆக்கள் இருக்கினம் பாருங்கோ.அவைக்கு அலுவலக கணினிக்கு முன்னால் இருந்தால் தான் கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுமாம்.வலைப்பதிவு,பின்னூட்டம் எல்லாம் அலுவலக கணினியில்தானாம்.வீட்டில்கணினி பார்க்க நேரமே இல்லையாம்.அப்படி இருந்தாலும் கற்பனை வராதாம்.இப்படியான் ஆட்களை வேலைக்கு வச்சிருக்கிற முதலாளிமார் இப்படி லீவுகள் வாறபடியால் தான் ஒருமாதிரி தப்பி பிழைக்கினம் பாருங்கோ.
ஆரது அந்தநாலெழுத்து வலைபதிவாளரின் பெயரெல்லாம் சொல்லுறது

கனடாவந்த பிறகுதான் லீவின்ற அருமைதெரியுது.இலங்கையில இருகேக்க வருசத்திலே பாதி நாள்தான் வேலை பாருங்கோ.மீதி நாள் என்ன ஆச்சு எண்டு கேக்கிறியளோ?அது எல்லாம் லீவுகள் பாருங்கோ.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாள் பெளர்ணமி விடுமுறை வரும் பாருங்கோ.சிங்களத்திலை போயா எண்டு சொல்லுவினம். இலங்கையிலே இருக்கேக்க நித்திரையில எழுப்பி கேட்டாலும் எந்தமாதத்தில் என்ன தினத்தில் பெளர்ணமி விடுமுறை
வரும் எண்டு கலண்டரை பாக்காமலே சொல்லுவனாக்கும்.

அதைவிட இந்து,முஸ்லிம்,பெளத்த விடுமுறை எண்டு சொல்லி பல விடுமுறைகள்.இதனால் உலகத்திலே ஆகக்கூடிய விடுமுறைகள் கொண்ட நாடு எண்டு சொன்னால் அது இலங்கை தான் பாருங்கோ.கிட்டடியிலேபாராளுமன்றத்திலே விவாதம் கொண்டுவந்தவை இப்படி விடுமுறையளை குறைக்கிறது சம்பந்தமாக ஒரு விவாதம்.
அமைச்சர்கள், உறுப்பினர்கள் சொல்லிப்போட்டினம் லீவுகளை குறைக்கவேண்டாம் எண்டு.அவைக்கு தெரியும் தானே வேலைக்கு வாறதும் ஒண்டுதான் வீட்டில் இருக்கிறதும் ஒண்டு தான் எண்டு.ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் தானே.


இஞ்ச இந்த படத்தை ஒருக்கா பாருங்கோ.சரியாக சனி,ஞாயிற்றுக்கிழமை
கிழ்மைகளில் தான் முகத்தில் சிரிப்பே வருகுது.
இதில் எனதும் உங்களினதும்?? மனச்சாட்சி தெரிகிறதோ?
ஆராருக்கு தொப்பி(முகமூடி) அளவா இருக்கோ அவரவர் போட்டுக்கொள்ளுங்கோ.நான் மேல சொன்ன மாதிரி..முகமுடி அண்ணாச்சி தப்பா எடுக்காதீங்கோ. உங்களை ஒண்டும் சொல்லேல்ல அண்ணாச்சி.

முதலாவது படத்திலை பாத்திங்களோ.
அய்யாமருக்கும் தம்பிமாருக்கும் இடையே
நடக்கிற போட்டியை .என்ன யோசிக்கிறியளோ?
எனக்கென்னவோ இதுவும் சரியாகவே படம் போட்டிருப்பதாக தோன்றுகின்றது.நீங்கள் என்ன சொல்றிங்கள்?

2 comments:

இளங்கோ-டிசே said...

கரிகாலன், நல்ல நகைச்சுவையான பதிவு!
என்னுடைய முகத்தையும் உங்கள் பதிவில் காண்கின்றேன். ம்...நீங்கள் கூறியதுபோல ஈழத்தில் எண்ணமுடியாத அளவுக்கு விடுமுறை. இங்கே கோடை வந்தால் மட்டும் இந்தா பிடி என்று ஒன்றிரண்டு நாள்களுக்கு விடுமுறை தருகின்றார்கள்.
//ஆரது அந்தநாலெழுத்து வலைபதிவாளரின் பெயரெல்லாம் சொல்லுறது//
பாவம் அவர் கொஞ்ச நாள் விடுப்பு எடுத்துப்போனாலும் சும்மா விடுவதில்லை என்று இருக்கின்றீர்கள் போல :-)
//இப்படி சிலருக்கு அலுவலகம் வருவது பிரச்சனை எண்டால் இன்னும் சிலருக்கு சனி,ஞாயிறுகளில் அலுவலகம் இல்லை என்பது கவலை.என்ன கடும் உழைப்பாளியோ எண்டு கேட்கிறமாதிரி இருக்கு.நீங்கவேற. கடுமையா "அவவுடன்" கடலை போடுற பலருக்கு இழப்புதானே பின்ன.இது இளந்தாரிமாரின் கவலை.//
இப்படி ஒரு காலம் வராதா என்று நானும் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன். காசு வந்த மாதிரியும் இருக்கும், பொழுதுபோனது மாதிரியும் இருக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க என்ரை வைரவர் அருள் பாலிப்பாராக.:-).

துளசி கோபால் said...

அன்புள்ள கரிகாலன்,

நல்ல பகிடி::-)))))

இதுலே எது என்னோடது?

கவனிச்சுப் பாக்கோணும்:-)))

துளசி.