Friday, September 02, 2005

முகமூடிகள் கிழிகின்றன...மூக்குகள் அறுக்கப்படுகின்றன...

புலிகள் தமிழ்நாட்டிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி தமது இயக்கத்துக்கு நிதி திரட்டுகிறார்கள்.என இன்று நேற்றல்ல பல காலமாகவே இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில புலிகள் மேல் புழுதிவாரி தூற்றிவந்தன, வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள் யாராவது போதை பொருள் கடத்தி பிடிபட்டாலும் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு மட்டும் புலியாக தெரிவார்கள்.செய்தி வெளியிடுவார்கள்.

இங்கு அவர்களின் நோக்கம் புலிகளை இழிவுபடுத்துவது மட்டுமே.இவர்களுக்கு எப்படியாவது என்ன வழியிலாவது புலிகளை தூற்றவேண்டும்.சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஒரு சுங்க அதிகாரியின் விடயத்தில் கூட அவரின் வீட்டில் புலிகள் பற்றிய புத்தகங்கள் கிடந்தன என்பதை சம்பந்தபடுத்தி புலிகளுக்கு சார்பானவர்கள் என்றால் அவர்கள் சிறுமிகளை வன் புணர்பவர்கள் என்றோ அல்லது புலிகள் என்றால் இப்படியான சம்பவங்களை செய்பவர்கள் என்றோ ஒரு தோற்றப்பாட்டை பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இவ் ஊடகங்கள் முயல்கின்றன.மொத்தத்தில் புலியெதிர்ப்பு என்னும் தமது அரிப்பை தாமே இப்படி செய்தி வெளியிடுவதன் மூலம் தடவிவிட்டுக் கொள்கின்றன.

இதற்கு எவ்வையிலும் குறைந்ததல்ல இந்தப்பதிவு 40தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் யாழ்ப்பாண புலி என்னும் இத்தலையங்கத்தின் மூலம் இதனை எழுதியவரின் முகமூடி கிழிந்துவிட்டது.இங்கு இவர் பேசியது பாலியல் துஸ்பிரயோகம் பற்றியல்ல.இவரின் நோக்கமும் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றியல்ல. புலியெதிர்ப்பே இங்கு முன்னிலை வகிக்கிறது. மனநலம் பற்றி கதைக்கும் இவரின் மனநலம் பற்றி மற்றவர்கள் சந்தேகப்படும் படி இருக்கிறது.கண்டிப்பாக இச் செயலை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

இவரின் பதிவுகளில் பொதுநலம் என்பர்.மக்கள் என்பர்,ஜனநாயகம் என்பர்,பொருள்முதல் வாதம் என்பர்.மர்க்சிசம் என்பர்,சோசலிசம்என்பர்,இலக்கியம் என்பர்,இலக்கணம் என்பர்.போரெதிர்ப்பு என்பர் அழகாக வார்த்தையாடுவார்..இவை யாவும் முகமூடிகள். நிஜமுகம் புலியெதிர்பு.நிஜமுகத்தினை மறைப்பதற்காக இந்தமுகமூடிகள்.இந்தபதிவுடன் கிழிந்தன முகமூடிகள்,நிற்பது அவரின் நிஜமுகம் அல்லது அவரின் மனம்.வேண்டாம அய்யா முகமூடிகள்.நீங்கள் எதை எழுத விரும்புகிறீர்களோ அதை பாசாங்கு இல்லாமல் எழுதுங்கள் நீங்கள் எதை எழுதினாலும் பார்க்க படிக்க பலர் இருக்கின்றனர்.ஏன் நான்கூட படிப்பேன்.ஏனெனில் பதிவுகள் படைப்பது யாராக இருந்தாலும் தீர்மானிப்பது நான்தானே.
யாரும் எதையும் எழுதலாம்.அது அவரவர் சுதந்திரம் நான் வேண்டுவது
எல்லாம் பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்.

இதைப் போலதான் இன்னுமொருவிடயத்தில் சில இலங்கை இந்திய ஊடகங்களின் மூக்கறுக்கப்பட்டிருக்கிறது.முதலாவது பந்தியை படியங்கள்.இனி விடயத்தினை சொல்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு கடத்தப்படுகிற போதைப் பொருள்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசின் போதைப் பொருள் தடுப்புத்துறையின் மண்டல இயக்குநர்சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையிலிருந்து வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள்களை கடத்தியதற்கான எதுவித சான்றும் இதுவரை இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. புலனாய்வுத்துறை தரப்பு தகவலும் கூட இது தொடர்பில் இல்லை என்றார்.அந்த நாளேட்டில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள்:

கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை போதைப் பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் இந்தியர்கள்.

இந்த ஆண்டு காலத்தில் 72 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. இதில் 275 கிராம் மட்டும்தான்
மாலத்தீவிற்கு கடத்தப்பட இருந்தது. மற்ற அனைத்தும் சிறிலங்காவுக்குத்தான் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.போதைப் பொருள் கடத்தலில் சிறிலங்கா கேந்திரமாக விளங்குகிறது.
இதுவரை நிலப்பரப்பில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில் படகு மூலம் சிறிலங்காவுக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருளை இந்திய கடற்படை உதவியுடன் முதன் முறையாக இந்தியபோதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் சில ஊடகங்களின் மூ........க்கு அறுக்கப்பட்டிருக்கிறதுதானே.

7 comments:

Anonymous said...

/இது தொடர்பாக சென்னையிலிருந்து வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:/
இதை நாங்கள் நாங்கள் நம்ப மறுக்கிறோம். த க்ரேட் இந்துவும் சன் டிவி இண்டர்வியூவும் சொல்லும்வரை நாங்கள் 'டெக்கான் குரோனிக்கல்' இன் பயங்கரவாதச்செய்திகளை நாங்கள் வம்ப வறுக்கிறோம்... அடச்சீ! நம்பமறுக்கிறோம்

Anonymous said...

I intended to write about this. Cho used to accuse tigers for the drug traffic in the Tamil Nadu shores. But he never showed any evidence. This news also confirms there are no unproved inteligence reports on this blame. Thanks.

-/பெயரிலி. said...

கரிகாலரே,
September 20, 1878 இலே தொடங்கின மதராஸி ப்ரஸிடண்ஸிக்குரிய அசல்சென்னப்பசவன்பட்டண த இந்துவை நம்புவீரா, அல்லது, March 28, 2005 இலே திருப்பதி எடுத்த ஆந்திராவிலிருந்து வந்திறங்கிய டெக்கான் க்ரோனிக்கலை நம்புவீரா?

Anonymous said...

/I intended to write about this. Cho used to accuse tigers for the drug traffic in the Tamil Nadu shores. But he never showed any evidence./
ஆண்டவன் இருக்கிறானென்பதற்கு நம்பிக்கை மட்டுமே முக்கியம்; வேத/தேவவிசுவாசிகள் தேவையானாலுங்கூட, சாட்சிகள் தேவையில்லை. துக்ளக் ராமர், இந்து ராமர், கல்கி ராஜேந்திரர், ஜனதா ஸ்வாமிகள் எல்லோரும் ஆண்டவர்களும் இன்னும் தாங்கள் ஆள்கின்றவர்களாக வேதவிசுவாசிகளை நம்ப வைத்துக்கொண்டிருப்பவர்களுமே.

ஆயிரத்து நூற்றிருபத்தைந்து ஆண்டுக்கால தேவதாசிமுறையை நம்புவீரா, அல்லது அதை ஒழித்துக்கட்டின எழுபத்தைந்தாண்டுகளை நம்புவீரா?
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லாவுக்கு துவா! ராமன், நாராயணன் பேரில் உமக்கு நாமம்!!

கரிகாலன் said...

பெயரிலி,அனானிமஸ்

அப்படி போடுங்க அரிவாளை!

-/பெயரிலி. said...

/அப்படி போடுங்க அரிவாளை!/
இந்தப்பக்கம் போடவேணாம்! அரிவாளை அந்தப்பக்கம் போடுங்கோ அண்ணை; -/பெயரிலி. சாத்வீகமான ஆள்; வாளையும் அரிவாளையும் வாட்டர் தரமாட்டேன் என்று ஊழிக்கூத்தாடுகிற வாட்டாள் மேலே வேண்டுமெண்டால் போடுங்கள்.

கரிகாலன்-karikaalan said...

வணக்கம் பெயரிலி.
///அப்படி போடுங்க அரிவாளை!/
இந்தப்பக்கம் போடவேணாம்! அரிவாளை அந்தப்பக்கம் போடுங்கோ அண்ணை; -/பெயரிலி. சாத்வீகமான ஆள்; வாளையும் அரிவாளையும் வாட்டர் தரமாட்டேன் என்று ஊழிக்கூத்தாடுகிற வாட்டாள் மேலே வேண்டுமெண்டால் போடுங்கள்.///


நீங்கள் சாத்வீகமான ஆள் சரி.ஆனால்
நீங்கள் சொல்கிறவிடயம் தான் உதைக்குது.நான் வாட்டர் தராத வாட்டாள் மீது உங்கள் நன்மைக்காக அரிவாளைப் போடப்போக பின்பு இந்துவும் தினமலரும் அரிவாள் கலாச்சாரத்தினை தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் அறிமுகப்படுத்தி வைத்த்வரே கரிகாலன் தான்???? என்று
வீரப்பன் ரேஞ்சுக்கு எழுதித்தள்ள தேவையா இது எனக்கு.
பேசாமை அரிவாளை எங்க வீட்டு கொல்லைப் புறத்திலேயே போட்டிர்ரன்.
அது நல்லது உங்களுக்கும் எனக்கும்
அருவாளுக்கும் கூட.கரிகாலனை அருவா தூக்க சொன்னதாக உங்கள்
பேரும் பத்திரிகையில் வராது பாருங்கோ.