Friday, September 02, 2005

சத்தம் தமிழனுக்கு ரொம்பப் பிடித்தது!

டந்த வார இறுதியில் இங்கு நடந்த இரண்டு நிகழ்வுகளுக்கு போகவேண்டி ஏற்பட்டது.இரண்டுமே தமிழர்களின் விழாக்கள் முற்றுமுழுதாக தமிழர்களே கலந்து கொண்டனர்.முதல் விழாகாலை 10.00 மணிக்கு என்று சொல்லியிருந்தனர்.சரி என்று நானும் துணைவியாருமாக புறப்பட்டு போனால் விரைவு நெடுஞ்சாலையில்அந்த விழாவுக்கு செல்லவேண்டிய வெளியேற்றத்தினை(exit) தவறவிட்டுவிட்டேன்.

சரி என்று போட்டு வேறு வெளியேற்றம்? வாயிலாக வெளியே வந்து விழா மண்டபத்தினை சென்றடைந்தபோது நேரமோ 10.30 மணியாச்சு விழா தொடங்குவதற்கான அறிகுறியே காணவில்லை.ஒவ்வொருவராக வரத்தொடங்கி விழா ஆரம்பித்தது காலை 11.30 மணிக்கு.விழா ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தொல்லை தரத் தொடங்கிவிட்டதுஒலிபெருக்கி.200பேர் கூடியிருக்கும் ஒரு சிறிய மண்டபத்தில் இவ்வளவு சவுண்டில் ஒலிபெருக்கியை வைத்தால் எப்படி இருக்கும்.இரண்டுதடவை ஒலிபெருக்கி இயக்கிக் கொண்டிருந்தவரிடம் சொன்னேன் ஒலியளவு அதிகமாக இருக்குதுகொஞ்சம் குறையுங்கோ எண்டு.அவரும் சிறிது குறைப்பார் பின்னர்சில நிமிடங்களின் பின்னர் ஒலியளவு பழையபடி வந்துவிடும்.இப்படி அன்றையவிழா தொல்லையாக கழிந்தது.

இங்கு பல தமிழர்களின் விழாக்களுக்கு போயிருக்கிறேன்.அங்கு தொல்லைதருவது இந்த ஒலிபெருக்கியாகவே இருக்கும்.தமிழர்களின் விழாக்கள் என்றால்அலறிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி.மற்றைய நாட்டவர்களின் நிகழ்வுகளில்பார்த்தால் நிகழ்வின் தேவையொட்டியே இருக்கும் ஒலிபெருக்கின் ஒலி அளவு.ஏன் இப்படி வதைக்கிறார்களோ தெரியவில்லை.ஒலியளவு தேவையான நிகழ்வுகள் என்றால் பரவாயில்லை.எல்லா நிகழ்வுகளுக்கும்அல்லவா அப்படி செய்கின்றனர்.

தமிழர்களுடன் பிறப்பில் தொடங்கும்"சத்தம்" அவர்களின் வாழ்வெங்கினும் தொடர்கிறது.பிறந்தால் "சத்தம்" பெரியவள் ஆனா"சத்தம்" திருமணத்தில் "சத்தம்"இறந்தால"சத்தம்" நல்ல காலம் முதலிரவை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்.இனி கோயிலில் போனால் "சத்தம்".அது இறைவனை கூட சத்தமிட்டுதுயில் எழுப்பி வணங்க சொல்கிறது. இது சமயம்.இப்படி தமிழனுக்கு சப்தம் இடுவது,சத்தம் கேட்பதும் பிடித்துப் போயிறு போலும்.

நல்ல காலம் பனையின் உச்சியில் லவுட்ஸீக்கர் கட்டி பாட்டு போட்ட பரம்பரையில் வந்த எம் தமிழர் இங்கும் அதையே செய்திருப்பர்.நல்ல காலம் இங்கு பனைகள் இல்லாமல் போனது.அத்துடன் அங்கு மாதிரி இல்லாமல் இங்குள்ள சட்டங்கள்.அந்த மட்டில் எமது காதுகள் தப்பித்ன போங்கள்.

1 comment:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லா சொன்னீங்க. அதுவும் கோயில்களில அடிக்கிதற கூத்து சொல்லிமாளாது.

-மதி