Friday, November 04, 2005

சு.ரா பற்றிய ஒரு வித்தியசமான மடல்!

சு.ரா வின் மறைவினையொட்டி பல பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்
பல அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
ரொரன்ரோவில் இருந்து வெளிவரும் முழக்கம் ஏட்டின் 21.10.2005 இதழின்
"மக்கள் களம்"
ஒரு வாசகர் எழுதிய சு.ராவைப் பற்றிய கடிதம் ஒன்று எனது கண்ணில் பட்டது.
சு.ரா வைப்பற்றி அறிந்துள்ளேனே தவிர அவரது நூல்களோ அல்லது அவரது
கருத்துக்களோ எனக்கு பரிச்சயமானவை அல்ல.பொதுவாகவே எனக்கு
இலக்கியத்தில் பெரிதாகவே ஈடுபாடு இல்லை.இங்கு இந்த முழக்கம் பத்திரிகை வெளியிட்டிருக்கும் வாசகரின் கருத்தினை நான் ஒரு வித்தியாசமான கருத்திலையே பார்க்கிறேன். .இப்படியான ஒரு விடயத்தினை இங்கு இதுவரையில்
யாரும் தொட்டதாக எனக்கு நினைவில்லை.கடிதம் இதுதான்.


'காலச்சுவடு" குழுவைச்சேர்ந்த சுந்தரராமசாமி அவர்கள் கடந்த கிழமை மறைந்துவிட்டார். அவருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிவாளிகள் வரிசையில் இருக்கின்றோம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் அவரின் ரொரன்ரோ ஆதரவாளர்கள்; சுந்தர ராமசாமியின் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடத்தி உள்ளனர். அந்த இரங்கல் கூட்டத்தின்போது மதுவருந்தி தங்கள் கவலையைப் போக்கியும் உள்ளனர். இந்த கிழமை இறுதிநாளிலும் ஒரு இரங்கல் கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதில் என்ன நடக்கப் போகின்றதோ... யாரறிவார்? சுந்தர ராமசாமி இறந்து விட்டார் இறந்தவரைப் பற்றி கெட்டது கூறுவது தமிழ் மரபுக்கு எதிரானது. ஆனால் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டவரை இன்று அல்லாவிடினும் என்றாவது வெளிப்படுத்தவேண்டுமே!

'காலச்சுவடு" கூட்டமானது தமிழகத்தில் நெடுமாறன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. சுந்தரராமசாமியின் மகன் கண்ணன் என்பவர் தமிழகத்திலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எங்காவது பேசினால் அந்தப் பேச்சை வைத்து அவர்கள் மேல் எந்த சட்டத் தொகுதி, நுணுக்க அடிப்படையில் வழக்குப் போடலாம் போன்ற வற்றை தமது உறவுக்காரரான சோ இராமசாமி நடத்தும் 'துக்ளக்" இதழில் போடுவார். மறுநாளே கைது இடம் பெறும். இதில் இருந்து வலைப் பின்னல்பற்றி யோசித்துப் பாருங்கள். இருக்க,ரொரன்ரோவில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்துபவர்களிலும்; பலர் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்களாக உள்ளார்கள். என்ன ஒற்றுமை..?

- அருண் கனகராஜா, ரொரன்ரோ.

முழக்கம் பத்திரிகை(21.10.2005) இதழுக்கான இணைப்பு

4 comments:

Boston Bala said...

---அவரது நூல்களோ அல்லது அவரது
கருத்துக்களோ எனக்கு பரிச்சயமானவை அல்ல---

கடிதத்தை மட்டும் பதிக்காமல், இந்த ஒப்புதலும் கொடுத்ததற்கு நன்றி.

Anonymous said...

'காலச்சுவடு" கூட்டமானது தமிழகத்தில் நெடுமாறன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. சுந்தரராமசாமியின் மகன் கண்ணன் என்பவர் தமிழகத்திலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எங்காவது பேசினால் அந்தப் பேச்சை வைத்து அவர்கள் மேல் எந்த சட்டத் தொகுதி, நுணுக்க அடிப்படையில் வழக்குப் போடலாம் போன்ற வற்றை தமது உறவுக்காரரான சோ இராமசாமி நடத்தும் 'துக்ளக்" இதழில் போடுவார். மறுநாளே கைது இடம் பெறும்

this is nothing but nonsense.
sundara ramaswamy was related
to the founder of dinamalar.
But Kalachuvadu has nothing
to do with Cho or Thuglak.
He and Kalachuvadu welcomed
the arrest of Jayendrar,
collected money for victime
of Gujrat genocide. Kalachuvadu
was anti-hindutva and anti jaylalitha all along.

Anonymous said...

//this is nothing but nonsense.//

முழக்கம் இந்தப் பதிலையும் பார்ப்பது நல்லது.

-/பெயரிலி. said...

/ சுந்தரராமசாமியின் மகன் கண்ணன் என்பவர் தமிழகத்திலுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எங்காவது பேசினால் அந்தப் பேச்சை வைத்து அவர்கள் மேல் எந்த சட்டத் தொகுதி, நுணுக்க அடிப்படையில் வழக்குப் போடலாம் போன்ற வற்றை தமது உறவுக்காரரான சோ இராமசாமி நடத்தும் 'துக்ளக்" இதழில் போடுவார். மறுநாளே கைது இடம் பெறும்./

??
காலச்சுவடு கண்ணன் ஈழப்பிரச்சனை பற்றி ஈழ ஆதரவாக நின்று பெரிதாக எதுவும் பதிக்கவில்லையென்பது உண்மையென்றே சொல்லலாம். குறைந்தபட்சம், ஈழம் குறித்த பதிவுகள் வருவதைக் காலச்சுவடும் உயிர்மையும் தமது எந்த இதழிலும் ஈழம் சம்பந்தமாக எதையேனும் ஆர்ப்பாட்டத்துக்கில்லாமல் வெளியிடுகின்றன என்பதையேனும் நாங்கள் கண்டுகொள்ளவேண்டும். அப்படியாக, விற்பனைக்கேனுங்கூட, பெருப்பித்தும் சிறுப்பித்தும் செய்வது குறைவாகத் தரும் சஞ்சிகைகளில் என்பதற்காகவேனும் நாம் அவற்றினை மதிக்கலாம்.

ஆனால், சுந்தரராமசாமிக்கும் சோவுக்கும் முடிச்சு இந்தவிதத்திலே போடுவதுபோன்ற பொய்யையோ அறியாமையையோ ஏற்றுக்கொள்ளமுடியாது. அவரும் ஐயர் இவரும் ஐயரென்ற விதத்திலே முடிச்சுப்போட்டால், கிருஷ்ணையரும் ஐயர்தான். அநியாயமான குற்றச்சாட்டு.