Tuesday, April 05, 2005

கனேடிய தொலைக்காட்சிக்கு இலங்கை அரசின் கட்டுப்பாடு.

னடாவில் சனல் 3 இல் இயங்கி வரும் குளோபல் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் இலங்கையில் சுனாமியின் பின்னரான மீளமைப்பு முயற்சிகள் குறித்து விவரணம் ஒன்றினைத்தயாரிப்பதற்காக இலங்கை விஜயம் செய்ய வீசாவுக்கு விண்ணப்பித்தபோது கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவருக்கு வீசா வழங்க கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

அவர் தயாரிக்கும் விவரணத்தினை அவர் இலங்கையினை விட்டு வெளியேறும் முன்னர் இலங்கைரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் ,இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திலும் கொடுத்து அனுமதிபெற வேண்டும் என்பதுடன் விவரணத்தின் இறுதிப் பிரதியினை கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சமர்பித்து அவர்களின் அனுமதியினை பெறவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

சுனாமி தாக்கத்தின் பின்பு கனேடிய ஊடகங்களில் இலங்கை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன் அதைவிட பாதிக்கப் பட்ட தமிழ் பகுதிகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளிவந்து விடலாம் என்பதுமே காரணமாக இருக்கலாம். குளோபல் தொலைகாட்சியின் இச் செய்தியாளர்ஒரு நடுநிலையான பக்கச்சார்பற்ற செய்தியாளர் என்பதினை இதைக் கொண்டே ஊகிக்கலாம்.இலங்கை அரசுக்கு சார்பான செய்திகளை கொடுப்பவராக இருந்தால் இப்படி நிபந்தனைகளுக்கு இடமே இருந்திருக்காது. இலங்கை அரசினை பொறுத்தவரை வெளிநாட்டு பணம் வேணும் ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தேவையில்லை அவை நடுநிலையாக இருக்கும் பட்சத்தில்.