Monday, May 22, 2006

நீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......

னடாவைப் பொறுத்தவரை குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம்.சைபர் வீதம் ஆல்ககோல் உடலில் இருந்தாலே போதும் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம் .அல்லது இவை இரண்டுமே நடைபெறலாம்.இங்கு வாகனம் ஓட்டுவதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரம்
எடுக்கும் சிரமம் பலருக்கும் தெரிந்ததே.

அப்படியும் எத்தனையோ பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அமெரிக்காவைப் போலல்லாது
கனடாவில் ரோட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு குறைவு என்பதால் பலரின் தலை தப்புகிறது.

1999 ம் ஆண்டு புதுவருட தினத்தன்று இரவு விருந்தொன்றில் பங்கு பற்றிவிட்டு வந்த இருவரின் கார்கள் விபத்துக்குள்ளானதில்
ஒரு காரில் வந்தவர் இறந்துவிட அவரின் நண்பி நடமாடமுடியாதபடி காயம்பட்டார்.

இரண்டாவது வாகனத்தில் வாகனத்தை செலுத்தி வந்தவர் மதுபோதையில் இருந்தபடியால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விபத்தில் உயிர்தப்பிய பெண் தான் 17வது முதல் சக்கர நாற்காலியில் நடமாடுவதற்கு காரணம் குடிபோதையில்
வந்த சாரதி மட்டுமல்ல அவரை விருந்துக்கு அழைத்து குடிக்க கொடுத்த வீட்டுக்காரரும் தான் என்றும் கூரி அவர்களிடம் இருந்து நட்ட ஈடு
கேட்டு வழக்கு தொடந்திருந்தார்.

அந்த வழக்கு முன்னரே ஒட்டாவா நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றம் கொண்டு சென்றார்.
மேல் நீதிமன்ற தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர்வந்தது .அதாவது வழக்கு தொடுத்த பெண்மணிக்கு பாதகமாக
"விருந்தை நடத்தியவர்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது" என்று .

அதாவது மதுபோதையில் விபத்து நடந்தால்
அதற்கு விருந்து வைத்தவர் பொறுப்பு அல்ல என்று.

இங்கு இப்படி நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்பது என்பது சாதாரண விடயமே.ரிம் கோட்டன் என்பது கனடா ,அமெரிக்காவில்
உள்ள ஒரு கோப்பிக்க்டையின் பெயர்.இங்கு ஒரு பெண்மணி கோப்பி( காப்பி) வாங்கியிருக்கிறார் .கோப்பி கொண்டுவந்து
கடைச் சிப்பந்தி வைக்கும் போது அப் பெண்ணின் தொடையில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுவிட்டதாம்.அதன் பின்னர் அப்பெண்மணி
அக்கடைக்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து பெரும் தொகையை பெற்றதாகவும் ஒரு கதை.
இப்போது கோப்பி கப்புகளில் எச்சரிக்கை- மிகவும் சூடானது என்று ஒரு வாசகம் பொறிக்கப்பாட்டிருப்பதை காணலாம்.

இப்படிதான் எனது உறவினர் ஒருவர் எப்படியாவது ஏதாவது ஒன்றின் மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாம் என்று
கனடா வந்ததில் இருந்து அலைகிறார்.ஆனால் இன்னமும் ஒன்றும் மாட்டவில்லை அவருக்கு.

No comments: