Sunday, March 05, 2006

பொடா நாயகனின் "மெகா பிளான்"

"க்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன்''. இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

''தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்''.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.


''தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்..'' போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே 'பொடா நாயகன்' வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.
திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.


ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.
வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.


அவரது கட்சியின் கொள்கை வரிகளான 'லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை' என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்....................................................................


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://thatstamil.oneindia.in/news/2006/03/05/plan.html

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்