Sunday, July 16, 2006

தமிழகத்தில் இருந்து ஒரு எதிர்வினை.

தமிழ்நாதம் இணையதளம் ஈழத்தவர் மத்தியில்ஒரு பிரபல்யமான இணைய தளம்.

உலகெங்கிலும் இருந்து வெளிவரும் பல்வேறு இணையத்தளங்களையும் ,வானொலி,பத்திரிகைதொலைக்காட்சிகள்,சஞ்சிகைகள் போன்றவற்றின் இணைப்புக்களையும் ஒருங்கே தரும் ஒரு இணைய தளம். பல ஒலி வடிவிலான செய்திகளையும் தருவது அதன் சிறப்பம்சம்.

அண்மையில் அத்தளத்தில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வீரகேசரி வாரவெளியீட்டில் "நிலாந்தன்" எழுதிய "ஈழத்தமிழர்களின் போராட்டமும் மாறிவரும் தமிழக ஊடகச்சூழலும்" என்ற கட்டுரையே அது.

அதற்கு சில தினங்கள் கழித்து அக்கட்டுரைக்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் இருந்து "சேவியர் அந்தோனி" என்பவர் எழுதி அனுப்பிய "தமிழக ஊடகங்களின் நிலையினை புரிந்துகொண்டு அடக்கி வாசியுங்கள்" கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாதம்.

தமிழ் நாட்டின் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன.அதன் நோக்கங்கள்,செய்தி நிறுவனங்களின் தன்மைகள்,அங்குள்ள ஊடகவியலாளர்களின் மனநிலை போன்றவற்றினை புட்டுப் புட்டு வைத்திருக்கின்றது அக்கட்டுரை.

தமிழ்நாட்டு ஊடகங்களின் தன்மைபற்றி பலரும் பலவற்றை எழுதியிருக்கின்றனர். அண்மையில் வசந்தன் கூட ஒரு பதிவு போட்டிருந்தார். நானும் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
1500 கிலோ மீற்றர் தாண்டியிருக்கும் கனடாவில் கூட சரியான செய்திகள் கிடைக்கும் போது 25 கிலோ மீற்றரில் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களில்" கொழும்புக்கு அருகே இருக்கும் வல்வெட்டித்துறை"என்று செய்தி வருவது சென்னைக்கு அருகே இருக்கும் ராமேஸ்வரம் என்று எழுதுவதற்கு ஒப்பானது .

எப்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படி செய்திகள் திரி?வடைகின்றன? தூங்குகின்றவனை எழுப்பலாம்.ஆனால் தூங்கின்றவன் மாதிரி நடிப்பவனை........