Saturday, February 10, 2007

"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து
வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி
லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது
பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று
பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்
எண்டு நம்புகிறேன்.

சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு
பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று
யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.
பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.

வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ரேடியோ கேட்க:-http://www.oruradio.com/

கொசுறு:-

எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை
பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு
பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்
7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து
உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.

ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே
கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய
பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப
ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை
நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்
போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........

4 comments:

Anonymous said...

கரிகாலன் தம்பி
"ஒரு பேப்பர், ஒரு ரேடியோ
பல பதிவு, பல உருவு"
என்பதுதான் மோட்டோவாமே?
உண்மையா?

:)

அனானி பாவம் ஸ்மைலி போட்டாப் போச்சு

Anonymous said...

வணக்கம் அண்ணா.

நீங்கள் சொல்லுவதிலும் "பல பதிவு பல
உருவு" உண்மையில்லாமல் இல்லை.
இருந்தாலும் சொந்த சரக்குகளையும்
நிறைய தருகிறார்கள்.இங்கு புலத்தில்
வெளிவரும் பல பத்திரிகைகளுடன்
ஒப்பிடும் போது 75 புள்ளிகள் தரலாம்

:))

சினேகிதி said...

\\இந்த பத்திரிகைகளை
ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........\\

:-) :-)

Anonymous said...

ok. but dont ask money from People.
IS RADIO STATION a COTTAGE INDUSTRY of CEYLON TAMILS?