Sunday, June 07, 2009

எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரம் வழங்க மாட்டோம். ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம்.

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதை விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி- புதினம் இணையத்தளம்.

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.//

இது இந்தியாவிற்கும் தேவைதான்.. ராஜதந்திரத்தில் இன்றுவரை வெல்வது இலங்கைதான். இதை நன்றாக இந்தியா புரிந்துகொண்டால் சரி.. இந்திராகாந்தி ஒருவர்தான் இதுவரை சாமாளித்த இந்திய பிரதமர் ஆவார்..

ரங்குடு said...

இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களையும், பயிற்சியும் அளிக்காமல் இருந்தாலே போதும். ஈழத்தமிழர்கள் தனி ஈழம் பெற்றுவிடுவார்கள்.

அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ரவுடிக் கும்பலை அனுப்பியதும் தவறு. அதற்கான தண்டனையை ராஜிவ் அடைந்தார்.

இப்போது பயங்கர வாதத்தை அடக்குகிறோம் என்று இரண்டாவது முறை தவறு செய்துள்ளது இந்தியா.

ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் அழிவுக்கு முக்கிய மறைமுகக் காரணமாக நிற்கின்றது இந்தியா.

இன்று ஈழத்தில் போர் நின்று விட்டாலும், ஈழத்தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத ச்ச்ழ் நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா போன்ற நேற்று பெய்த மழையில் முளைத்த ஈசல்கள் பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

ஈழத் தமிழர்களுக்கு 'உதவு' வதை இத்துடன் நிறுத்திக் கொண்டாலே அது அவர்களுக்கு செய்யும் பெரிய உதவியாகும்..

poovalingam said...

இப்போது பயங்கர வாதத்தை அடக்குகிறோம் என்று இரண்டாவது முறை தவறு செய்துள்ளது இந்தியா.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)