Tuesday, May 29, 2012

ஆப்கானில் பெண்கள் பள்ளியில் விஷவாயு பரப்பி தலிபான்கள் தாக்குதல்: 600 பள்ளிகள் மூடல்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளியில் விஷவாயுவை பரப்பி தலிபான்கள் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது.
கடந்த 24ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகாணத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை பரவவிட்டனர். இதனால் 3 பள்ளி ஆசிரியைகள் உள்பட 122 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
தற்போது இதே போன்ற ஒரு கொடூரச் செயலை தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். இதே மாகாணத்தில் உள்ள பெண்கள் பயிலும் பள்ளி ஒன்றில் விஷவாயுவை பரவ விட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட 160 மாணவிகளுக்கு மூச்சு திணறலும், மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில தலிபான் தீவிரவாதிகள் தடையாக உள்ளனர். பெண்கள் பள்ளிகளை குண்டு வீசி தகர்த்து வருகின்றனர்.
அதையும் மீறி அங்கு பெண்கள் கல்வி கற்கின்றனர். எனவே சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பள்ளியில் குடிநீரில் விஷம் கலந்தனர். அதை குடித்த மாணவிகள் வாந்தி- மயக்கத்தால் அவதிப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமாகினர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து, சுமார் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



www.

3 comments:

TAMILARASAN said...

கரிகாலனே! இந்த பதிவின் மூலம் என்ன சாதிக்க எண்ணுகிறாய்? எங்கே உன் பார்வை? எதை நோக்கி செல்கிறாய்?

முதலில் நாறிக்கொண்டிருக்கும் நம்ம குண்டிகளை கழுவ யோசிப்பதை விட்டுவிட்டு மற்றவர்களின் குண்டிகளில் கரிகாலனின் மூக்கை நுழைக்கலாமே?

முதலில் நம்ம குறைகளை வெளிக்கொணர்ந்து அவைகளை நீக்க பாடுபடு.

Anonymous said...

//முதலில் நம்ம குறைகளை வெளிக்கொணர்ந்து அவைகளை நீக்க பாடுபடு//

உங்கள் குறைகளைவெளிக்கொணர்ந்து அவைகளை. நீக்கவே பாடுபடுகிறேன் .

கரிகாலன்

TAMIL rajan said...

TAMILARASAN said...

கரிகாலனே! இந்த பதிவின் மூலம் என்ன சாதிக்க எண்ணுகிறாய்? ,/////


கல்வி என்கிற அடிப்படை விஷயத்தை பெற கூட மதமும், பயங்கரவாதமும் எவ்வளவு தடையாக உள்ளது என்பதை கூட புரிந்து கொள்ள இயலாதா?