Wednesday, September 12, 2012

ஈராக் பெண்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய மத வெறியர்கள்!

 

அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னரும், அங்குள்ள ட்ரென்ட்,
அமெரிக்க நாகரீகத்தை ஒட்டியே உள்ளதால், தீவிர மத அமைப்பு ஒன்று ‘பேஷன் போலீஸ்’ என்று ஒரு கண்காணிப்பு பிரிவை அமைத்துள்ளது.
‘பேஷன் போலீஸ்’ முழு ஈராக்கிலும் இல்லை என்றாலும், இரு நகரங்களில் தீவிரமாக இயங்குகிறது.

இஸ்லாமிய கலாசார முறைப்படி உடை அணியாத பெண்களை குறி வைக்கிறது ‘பேஷன் போலீஸ்’.

கசிமியா நகரில் ‘பேஷன் போலீஸ்’ செயல்படுவது மட்டுமன்றி, வீதிகளில் அறிவிப்பு பலகைகளும் உள்ளன.
“மத கலாச்சாரத்தை பின்பற்றாவிட்டால் தண்டனை அடைய நேரிடும்’ என்கிறது ஒரு அறிவிப்பு பலகை. “‘அபயா’ அணிந்து வெளியே செல்லாத பெண்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்கிறது மற்றொரு அறிவிப்பு பலகை. அபயா என்பது, தோளில் இருந்து கால் வரை அணியப்படும் உடை.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு நகரமான திவானியாவில், போஸ்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளன. ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் போட்டோ ஒன்றை போட்டு, அதன்மேல் சிவப்பு வர்ணத்தில் பெரிய அளவு X ஒன்று போடப்பட்டுள்ள போஸ்டர் அது.
மற்றொரு போஸ்டர், பெண்கள் முழுமையாக தமது தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

மயாடா ஹமீத் என்ற 32 வயது பெண், தமக்கு ‘பேஷன் போலீஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்.
“அவர்கள் (‘பேஷன் போலீஸ்’) தொலைவில் இருந்தே என்னை வாட்ச் பண்ணியபடி இருந்தார்கள்.
அப்போதே புரிந்து விட்டது, விபரீதமாக ஏதோ நடக்க போகிறது என்று. சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு அருகே வந்து
, “இது முதல் எச்சரிக்கை. இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணியாவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை கிடையாது.
தண்டனைதான் வழங்கப்படும்” என எச்சரித்துவிட்டு சென்றார்” என்றார்.

‘பேஷன் போலீஸ்’ என்பது, சீருடை அணிந்த ஒரு பிரிவல்ல. அதிகாரபூர்வ காவல்துறையும் அல்ல. சாதாரண
மக்கள் போலவே அவர்கள் நடமாடுகிறார்கள். கலாசார உடை அணியாதவர்களை எச்சரிக்கும்போதுதான் அவர்கள் ‘பேஷன் போலீஸ்’ ஆள் என்று தெரியவருகிறது.

ஈராக்கிய அரசு, இந்த ‘பேஷன் போலீஸ்’ தமது போலீஸ் பிரிவு அல்ல என்கிறது. தலைநகர் பாக்தாத்தில்
செய்தியாளர் மாநாட்டில் பேசிய போலீஸ் பிரிவு தலைவர், “பெண்கள் உடை அணிவது தொடர்பான தடைகள்
அல்லது நடைமுறைகள் எதையும் நாம் அறிவிக்கவில்லை. எந்த உடை அணிவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதே அரசின் நிலைப்பாடு.

உடை அணிவது பற்றிய எச்சரிக்கைகளுடன் சில அறிவிப்பு பலகைகள் குறிப்பிட்ட சில நகரங்களில் யாராலோ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்
கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாக்தாத்தில் உள்ள ஷீட்டி பிரிவு மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “பேஷன் போலீஸ் நடமாட்டம் பற்றி
நாமும் அறிந்தோம். அது, எமது மதப் பிரிவால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதைதான் என்னால் கூறமுடியும்.
பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடை அணியும் சுதந்திரம் உள்ளது என்பதே, எமது பிரிவின் கொள்கை.

ஆனால், மத முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், மத சடங்குகள் நடைபெறும் இடங்களுக்கும் பெண்கள் கலாசார
உடை அணிய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இஸ்லாம் மட்டுமன்றி, மற்ற மதங்களும் அதைதான் சொல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நகரங்களிலும் உள்ள நிலைமை பற்றி குறிப்பிடும் மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “அந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், கலாசார உடைகளை அணியத் துவங்கியுள்ளார்கள் என அறிகிறோம். காலப்போக்கில் அனைவரும் காலாசார உடை அணிபவர்களாக இருப்பார்கள். அரசால் அதை தடுக்க முடியாது என்பதே அங்குள்ள நிலைமை” என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் பெண்கள் எப்படி உடை அணிவது என்பதை பெண்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .மதவாதிகள் அல்ல என்பதே எனது கருத்து .

2 comments:

Anonymous said...

அருமையான பதிவு சகோ... !!!

கலாச்சார காவலர்கள் எங்கும் உள்ளனர். குறிப்பாக மத்தியக் கிழக்கு - வடக்கு ஆப்பிரிக்கா - தெற்காசியா - தென் கிழக்காசியா இந்தப் பகுதிகளில் இவர்கள் மிக கடுமையாக இயங்குகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் கிளைத்துள்ள மத வெறியர்கள் - எங்கே தமது மதம் அழிந்துவிடும் என்ற பயத்தில் இப்படியான உடைக்கட்டுப்பாடுகளை போடுகின்றார்கள் .. !!!

குரானில் உடைக்கட்டுப்பாடு இருக்கா எனத் தேடினால் ஒன்றுமே இல்லை ... !!! ஆனால் இமாம்கள் செய்யும் பிரச்சாரங்களோ தலைகீழ் ..

ஆனால் சுதந்திரம் மறுக்கப்படும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்பது மட்டும் உண்மை. பார்ப்போம் மாற்றம் நிச்சயம் வரும்.

ஒரு சக கனடிய தமிழ் பதிவரைக் கண்டுக் கொண்டதில் மகிழ்ச்சி .. இணைந்திருப்போம்.

Unknown said...

That means....your wife...or ur sister walking to the street without the proper dress...! you will allow it? how you are saying like this.? suppose you are walking to the street with your wife with the proper dress code, no one will give disturbance unless your wife willnot wear the proper dress. please brother try to understand and follow the dress coding for your family also. your sister and mother is my sister and my mother. so if someone allowing to wear the wrong dress...you have to say something real and respectable words to the girls. if i hurt you sorry brother...