Wednesday, October 10, 2012

மதவாதிகளின் வெறிச்செயல்! பெண் கல்வியை ஊக்குவித்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு !!

 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சேர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு  பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்தவரும், சமாதானத்துக்கான சர்வதேச விருது ஒன்றுக்காக பரிந்துரை செய்யப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இச் சிறுமி தனது சேவையினால் பாகிஸ்தானில் மட்டும் ல்ல ,உலகெங்கிலும் புகழ்பெற்றவர்.

 

இந்நிலையில் சம்பவத்தினை தாமே செய்தோம் என்று இஸ்லாமிய கடும் கோட்பாளர்கள் ஆகிய தலிபான்கள் சொல்லி இருக்கின்றனர் .அவர் ஒரு தலிபான் எதிர்ப்பாளர் மேற்கத்திய ஆதரவாளர் அதனால் தான் சுட்டோம் என்று காரணம் சொல்லிருக்கின்றனர்.அனால் என் இச்சிறுமி சுடப்பட்டார் என்பதன் காரணத்தினை வாய்க்குள் விரலை வைத்திருக்கும் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் .

பெண்கள் கல்வி கற்பதனை எதிர்க்கும் தீவிர மத வெறியரான தலிபான்கள் பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும்  சிறுமியை சுட்டதன் பின்ணணி யாருக்கும் விளங்க முடியாது அல்ல .ஏற்கனவே ஆப்கானில் பெண்கள் பள்ளிகளை மூடி,இயங்கும் பள்ளிகளில் விஷம் கலந்து பெண் பள்ளிப் பிளைகளை,ஆசிரியைகளை கொன்று இப்படி பல வழிகளில்  பெண்கள் கல்வியை முடக்கும் தலிபான்கள் பெண்களை முக்காடு இட்டு வீட்டுக்குள்ளே முடக்கவே இதனையும் செய்திருக்கின்றனர்.எனது முன்னைய பதிவு ஓன்றினை பார்க்கவும் மேலதிக தகவல்களுக்கு.

சரி நடந்த சம்பவம் இதுதான்

ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளிக்கூடத்திலிருந்து பெண் குழந்தைகள் வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய தாடி வளர்த்த  மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து, மலாலா யூஸுஃப்ஸாய் இருக்கிறாரா என்று கேட்டு விட்டு பின்னர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக பார்த்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

தலையில் காயம் பட்டுள்ளதாகவும்  , ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இச்செயல் பலத்த கண்டனத்தினை எழுப்பியுள்ளதுடன் பலரும் இச்சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்..நாமும் மதவாதிகளால் சுடப்பட்ட இச்சிறுமி பூர்ணகுணமடைய இறைவனை வேண்டுவோம்

மேலாதிக வாசிப்புக்கு சுட்டிகள் :-

http://www.guardian.co.uk/world/2012/oct/09/taliban-pakistan-shoot-girl-malala-yousafzai

http://www.nytimes.com/2012/10/10/world/asia/teen-school-activist-malala-yousafzai-survives-hit-by-pakistani-taliban.html

http://www.facebook.com/malalayousafzaiofficial

3 comments:

Unknown said...

வணக்கம் நண்பரே,

நல்ல பதிவு. காட்டுமிராண்டிகால கலாச்சாரங்களை கையிலெடுப்பதால் விளையும் விளைவு என்பதை மறுபடியும் நினைவூட்டுகின்றது. இப்படிப்பட்ட பிற்போக்குவாத சிந்தனையுள்ளவர்களால் உலகம் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் கண்டனத்திற்குறியது மற்றும் வேதனைக்குறியது. நன்றி!!!

இனியவன்...

Anonymous said...

பழமைவிரும்பிகள் பெண்களை வீட்டுக்குள் முடக்கி வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாகவும், படுக்கை சுகம் தரும் செக்ஸ் டாயாகவும், பிள்ளை பெறும் மெசினாகவுமே விரும்புகின்றார்கள் .. இதில் மத பேதங்கள் இல்லை .. என்ன இஸ்லாம் வெளிப்படையாக செய்கின்றது,

நிச்சயம் மலலா யூசப்சாயின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை மீண்டும் ஒருமுறை இங்கு கண்டிக்கின்றேன் ... பழமைவிரும்பிகள் அழிக்கப்பட வேண்டிய இக்கட்டான காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியம் .. அதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமே.

வேகநரி said...

சமூகப் போராளி மலலா யூசப்சாய் இஸ்லாமிய தலிபான்களால் சுடப்பட்டதை பற்றி ஒரு பதிவு எழுதிய உங்கள் சமூக அக்கறைக்கு பாராட்டுகள். தொடர்க பணி.