Tuesday, October 02, 2012

மூத்த வலைப்பதிவர் மறைவு !!!!!! கண்ணீர் அஞ்சலிகள்!!

 

ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த  வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமரணம் என்ற செய்தியே தான் அது .2007 ம் ஆண்டுக்கு பின்னர் வலை பதிபவ்ர்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் .அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டின் தொடக்கத்தில்    இருந்து  2007 ஆண்டுவரை வலைபதிவிலும். யாழ் இணையத்திலும் எழுதிவந்தவர். அபொழுது எல்லாம் திரட்டியே இல்லாத காலம்.மதி கந்தசாமியின் ஒரு வலைப்பதிவில் எல்லா வலைபதிவுகளும் தொகுகப்பட்ட காலம்

.கரிகாலன் ஆகிய நான் ,ஈழநாதன் ,சயந்தன் ,வசந்தன் .மதி கந்தசாமி இப்படி சிலர் தான் ஈழத்தினை சேர்ந்த பதிவர்கள் மற்றவர்கள் தமிழகத்தினை சேர்ந்த உறவுகள்.சண்டை சச்சரவு அற்ற பதிவுகள் ,விட்டுக்கொடுப்புகள் ,நாகரிகமான ஆரோக்கியமான் கருத்தாடல்கள் , இப்படி இருந்த காலம் .அப்பொழுது தனது நிறைந்த தமிழ் அறிவாலும் இலக்கிய திறனாலும் உதவி செய்யும் பண்பாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ,”ஈழநாதம்” அவரது பிரதான் வலைபதிவு ,அதை விட  மேலும் 4,5 வலைபதீவுகள் வைத்திருந்தார் .ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமான நூலகம் திட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.அதை விட யாழ் இணையத்தில் நிறைய பங்களிப்புகள் செய்தவராவார்.

2007ம் ஆண்டின்பின்பு எந்தொரு இடத்திலும் அவரது எழுத்துகள் காணப்படவில்லை.யாருடனும் தொடர்பில் இல்லை .சிங்கப்பூரில இருந்து எழுதிய அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது .நுலகம் சார்ந்தவர்களுடன்  கேட்டபோது தங்களுடன் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள் ..இப்படி  ஆட்கள் காணமல் போவது ஈழத்தவர் வாழ்வில் சகயம் என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை .

இப்போது செய்தி வந்திருகிறது தனது மனைவி ,பிள்ளை இவர்களை தவிக்கவிட்டு அகால மரணம் அடைந்திருப்பதாக .நல்லதொரு நண்பனை இழந்த துயரம் எனக்கு ,நல்லதொரு மகனை ,கணவனை தகப்பனை இழந்ததொரு துயரம் அவரின் குடும்பத்திற்கு .

அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த

அனுதாபங்கள்!

.நண்பனே உனக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள்!

தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது  தமிழக்காக உழைப்பவர் எல்லோரும்  அற்ப ஆயுளில் போவதென்பது  தமிழே நீ கொண்டுவந்த சாபமா ??

 

eelanathan

பட உதவி(நன்றி) :-யாழ் இணையம்

5 comments:

வவ்வால் said...

தமிழ்ப்பதிவர்களில் மூத்தவராக இருப்பினும், இளம் வயதில் அகால மரணம் அடைந்தது ,மிகவும் வருத்தமடைய செய்கிறது.

எனது ஆழ்ந்த அனுதாபங்களும், வருத்தமும்.

கரிகாலன் said...

thanks for u comment

Avargal Unmaigal said...

அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இளவயது மரணச் செய்தி கேட்ட எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரின் குடும்பத்திற்கு கடவுள் தான் மிக மனப்பலத்தை தர வேண்டும். இச்செய்தியை த்ற்போதுதான் தமிழ் மணத்தில் பார்த்தேன், உங்கள் தளத்தில் மிக விபராமாக அறிந்து கொண்டேன்

தங்க முகுந்தன் said...

இளங்கோவின்(ஈழநாதனின்) மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

♔ம.தி.சுதா♔ said...

என்றும் என் மனதில் வாழ்பவர்...

அவர் நினைவுச் சுவட்டைத் தாங்கிய என் பதிவு இது தான்..

http://www.mathisutha.com/2012/10/blog-post.html