Tuesday, October 23, 2012

எகிப்தியர்கள் பாலியல் வெறியர்களா?

 

நேற்று எகிப்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடந்த கால சம்பவங்களின் நீட்சியாகவே  பலரால் கருதப்படுகிறது .நேற்றிரவு எகிப்தின் கெய்ரோ நகரின் தாகிர் சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரான்சின் தொலைக்காட்சியான பிரான்ஸ் –24 ஆனது தனது பெண் அறிவிப்பாளரை அனுப்பி இருந்தது .சோனியா திதிரி என்கிற அப்பெண் அறிவிப்பாளர் தனது நேரடி ஒளிபரப்பை தொடர்ந்தபோது அவரை சுற்றியிருந்து பார்த்துக்கொண்டிருந்த  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் ரீதியிலான தாக்குதல்களை அவர்மேல் நடத்த தொடங்க ,முத்தமிட முயற்சிக்க அது நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பாக உலகெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது .

பின்பு ஒருவாறு அவருடைய இன்னுமொரு பத்திரிகையாளர் நண்பர் மூலமாக அவர் இத்தாக்குதலில் இருந்து மீண்டு கொண்டாலும் இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் அவர் காணப்பட்டாராம் .பின்பு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது .அவர் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவத்தினை அவர் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்போது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது .

இது மட்டும் அல்ல கடந்த காலங்களில் பல பெண் நிருபர்களின் மீது பாலியல் ரீதியான பல தாக்குதலகள் இடம்பெற்றுள்ளன .எகிப்தின் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் (கோஸ்னி முபாறுக்) போது அரசு தரப்பாலும்,எதிர் தரப்பாலும் பல பாலியல் ரீதியான பல சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன .அப்போது உள்நாட்டு ,வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல பல உள்நாட்டு பெண்கள் மீதும் சந்தடி சாக்கில் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டன .

இணையத்தில் தேடினால் நிறைய சம்பவங்கள் காணக்கிடைக்கிறது .அமெரிக்க பெண் நிருபர் ,இங்கிலாந்து பெண் நிருபர் ,இப்படி பட்டியல் நீளுகிறது ,

சரி ஏன் இப்படி பெண் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையில் போய் நிற்கிறது .முக்காடு இல்லாமல் இப்படியான் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களுக்கு  அதிகாரத்தினை கொடுக்கிறது.

தாக்குதல் என்றால் என்னவகை என்று கேள்வி எல்லாம் கேட்ககூடாது .அது பாலியல் வகையான தாக்குதலாக கூட இருக்கலாம் .அதற்கும் ஆண்களுக்கு  அனுமதி உண்டு.

இப்போது உங்களுக்கு ஏன் தாக்குதல் நடைபெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை தானே .

சரி இவ்வளவு சொல்லிவிட்டேன் அந்த வீடியோவினையும் தந்துவிடுகிறேன் .

நேர்முக வர்ணனையில் பெண் அறிவிப்பாளர். .சிவனே????????என்று பின்னணியில் நிற்கும் கூட்டம்,அவர்களின் முகபாவனை .அறிவிப்பாளர் மீது திடீரென கை வைப்பவர் .செய்தியாளரை விட்டு விலகும் கமெரா .

ஏவ்பி செய்தி நிறுவனத்தின் செய்தி

நன்றி

4 comments:

சுதா SJ said...

என்னத்த சொல்லுறது பாஸ்... நம்ம நாடு, அண்டை நாடு என்று எங்கு போனாலும் பெண்கள் இதே பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியே இருக்கு.... :(((

நன்னயம் said...

எகிப்தியர்கள் மட்டுமல்ல அராபியர்களும் பாலியல்/காம வெறியகள் தாம்.

நன்பேண்டா...! said...

intha sambavaththai mathathudan mudichi poduvathai errukolla mudiyavillai

வேகநரி said...

சரியா சொன்னீங்க.
பெண்கள் என்றாலே அவர்கள் பதறியடித்து போய் பர்தாவால் மூடிவைக்கபட வேண்டிய பொருள் பெண் என்று அடித்து சொல்வதை கவனியுங்க. ஆனா பார்தா போட்டாலும் பர்ததாவுக்குள் இருப்பது வயோதிய பெண்ணாயிருந்தாலும் பஸ்கள் பொது இடங்களில் எல்லாம் பெண்களை இடித்து தள்ளி பாலியல் துன்புறுத்தல்கள் எகிப்தில் செய்வார்கள். இப்படி அவர்களை உருவாக்கியது அவர்களுடைய மதம் தான்.