Friday, October 26, 2012

அல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா? எதை உச்சரிப்பது!

 

லங்கையில் ஒரு ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் அமைச்சரும் கூட அண்மையில் பாராளுமன்றத்தில் மகிந்தவை அளவுக்கதிகமாக் புகழப் போய் சிக்கலில் மாட்டுப்பட்டுப்போய் இருக்கிறார் .இலங்கையின் முஸ்லிம் சமய கலாசாரதுறை அமைசசர் ஏ.எச் .எம் .அஸ்வர் என்பவரே அவராவார்.

News Service

இவர் நீண்டகாலமாக ஜக்கிய தேசிய கட்சியில் இருந்துவிட்டு கதிரை ஆசையால் ஆளும்கட்சி பக்கம் தாவியவர்.அத்துடன் இவர்  இப்போது முஸ்லிம் சமய ,கலாசார அமைச்சராகவும் இருக்கிறார் .மதம் மாறியவர் ஏற்கனவே அம்மதத்தில் இருந்தவரை விட அதிக  சீன் காட்டுவார் .அதைப்போல இவரும் விசுவாசத்தில் சீன் காட்ட போய் அவர் சார்ந்த மதத்தினரால்  மதரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார் .

இலங்கை பாராளுமன்றத்தில் கிரிக்கெட் ஆட்ட சதி பற்றி நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது உரையாற்றிய அஸ்வர்

இலங்கை கிரிக்கெட்டில் ௭ந்தவித ஊழலும் மோசடியும் கிடையாது. தற்போது இலங்கையில்  விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். வடக்கு, கிழக்கிலும் கிரிக்கெட் துறை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, ஜனாதிபதி மஹிந்தவின் நாமத்தை மந்திரமாக உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும். வெற்றிக்கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை உச்சரியுங்கள் என விளையாட்டு வீரர்களுக்கு  அறிவுரையும் தெரிவித்தார் அஸ்வர்.

அதுதான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.அவரின் உரையானது முஸ்லிம்களின் ,இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி கருத்து  தெரிவித்துள்ளது.

அஸ்வரின் மகிந்தவின் நாமத்தினை உச்சரிப்பது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மை கிடைக்கும் என்றும் இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.

இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏ எச்.எம். அஸ்வர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் அவர் இஸ்லாத்தை வேண்டுமென்றே அவமதித்துள்ளதோடு தனது எஜமான விசுவாசத்துக்காக இறைவனைக்கூட உதாசீனம் செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும். என்றும் சொல்லியுள்ளார் .அத்துடன் அவர் மேலும்

நாடாளுமனறம் என்பது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதற்குமான உயரிய இடமாகும். அப்படியான இடத்தில் பேசப்படும் அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இக்கூற்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய அழுக்காகவே பதிவு செய்யப்படும்.என்பதுடன் இவருடைய கூற்றை பார்க்கும் போது இவர் உணவு உண்ணும் போதும் பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் போல இருக்கின்றது. இத்தகைய ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறோம்.

இன்றைய பதவிகள் என்பன உலகின் இன்பங்களாகவும் சோதனைகளாகவுமே உள்ளன. அப்பதவிகளுக்காக இஸ்லாத்தையே அவமதிப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகவே அஸ்வர் தனது இணைவைப்பு கருத்திற்காக மன்னிப்பு கோருவதோடு இதற்கெதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பகிரங்க தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. என்று தனது அறிக்கையில் கேட்டுள்ளார் .

அமைச்சர் பாவம் . பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காய் வந்ததற்கு என்ன பண்ணுவார்.அமைச்சரின் நிலை யாருக்கு தெரியும்?எனக்கு ஒரு சந்தேகம் அமைச்சர் அடிக்கடி “அம்மாவின்” அமைச்சர்களின் அறிக்கைகளை இணையத்தில் படிப்பாரோ?

சரி இது இலங்கையில் பெரிய பிரச்னையாக வரும் என்று நினைக்கின்றிர்களா?இலங்கை விடையமே தெரியாத ஆளாக இருப்பிர்கள் போல் உள்ளதே ஒரே ஒரு வெள்ளை வாகனம் போதும் எல்லாவறையும் சமாளிக்க..

4 comments:

Anonymous said...

அருமையான பதிவு சகோ. மதம் / அரசியல் இரண்டும் என்ன பாடு படுத்துகின்றது பாருங்கள். நம்ம சுபி கூடத்தான் ஒரு பின்னூட்டத்தில் நாரயணா என்றார், அதற்கும் எதாவது எதிர்ப்பு வருதோ என்னவோ !

வேகநரி said...

நல்ல ஒரு இன்ரஸ்ரிங்கான காமடி செய்தி தந்தீர்கள்.
சகோ இக்பால் செல்வன், தமிழ்நாட்டு இஸ்லாமிய பெரியவர் நாரயணா என்றழைத்தார். ஆனா இஸ்லாமிய சட்டம் என்ன சொல்கிறது என்றால் கரிகாலன் சொல்வதன் படி இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். இலங்கை இஸ்லாமிய அமைச்சர் நம்பி உச்சரித்தது இறைவன் அல்லாத ஒரு மனிதன் மகிந்தவின் பெயரை. ஆனா தமிழ்நாட்டு இஸ்லாமிய பெரியவர் நாரயணா என்று உச்சரித்தது இணைவைத்தது இன்னொரு இறைவனை. ஸோ இஸ்லாத்தின் அடிப்படையை அவர் மீறவில்லை.

சுதா SJ said...

ஹீ ஹீ....
மஹிந்தாவுக்கு செமையாத்தான் ஜால்ரா அடிச்சு இருக்காரு போல.....

மஹிந்தாவை விட இப்படியான ஜால்ரா கூட்டங்கள் தான் நாட்டிற்க்கு மிக ஆபத்தானவை.......

Anonymous said...

பணம் பதவிக்காக தன் இனத்தையே விற்று உண்ணும் கூட்டமிது. வாக்களித்த மக்களை வஞ்சித்தவர் மதத்தையா மதிக்கப்போகிறார்கள்?