Sunday, October 28, 2012

வெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்படும்!

வெண்டைக்காய் சாப்பிடும்படியும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் எனக்கு ஒரு மெயில் வந்தது .கண்டதையும் போர்வேட் செய்யும் நண்பர் அனுப்பிய மெயில் அது .உண்மைதான அது என சோதனை செய்து பார்க்க எனது தந்தைக்கு பரிந்துரைத்தேன் .அவரும் வெண்டைக்காய் உண்டு விட்டு இரத்தத்தில் வெல்லத்தின் அளவை பரிசோதித்துப்பார்த்த போது வெல்லத்தின் அளவு இரத்தத்தில் குறைந்து காணப்பட்டது .

சரி என்று சொல்லி அவர் சில தினங்கள் அம்முறையினை பின்பற்றி  வந்தபோது அவருக்கு தும்மல் தடிமன் வந்து விட்டது .எனவே அவர் இப்போது கிழமையில் முன்று தினங்கள் மட்டும் வெண்டைகாய் மருத்துவம் செய்து வருகிறார்.

சரி எப்படி அதைப்பின்பற்றுவது ? வழிமுறை இங்கே .உங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப எச்சரிக்கையோடு சொந்தப்பொறுப்பில் பின்பற்றவும். (ஹி..ஹி. நிதிமன்றம் கரிகாலனின் மனக்கண்ணில் )சரி ,இனி விபரங்கள்

  • ஒரு வெண்டைக்காய்  எடுத்து நன்கு கழுவிக் கொள்ள  வேண்டும். பின் அதன் இரு முனைகளையும்(அடி ,நுனி) நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வழவழ நீர் இருக்கும் , அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
  • அடிக்கடி உங்கள் இரத்தத்தினை பரிசோதிக்க வேண்டும் .இரத்தத்தில் சர்க்கரை கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை .

இதன் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை .அத்துடன் மருத்துவ ரீதியில் வைத்தியர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .வெண்டைக்காய் போலவே சிறு குறிஞ்சா .பாவக்காய் ,வெந்தயம் சின்ன சீரகம் போன்றவையும் இரத்தத்தில் வெல்லத்தின் அளவை குறைப்பதாக நீரிழிவு நோயாளிகள் சொல்கிறார்கள் .ஏன் கொய்யாப்பழம் கூட நீரிழிவை குறைப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் இதனால் ஏதாவது பின்விளைவுகள் வருமா என்பது பற்றி அலோபதி வைத்தியர்கள் தான் சொல்லவேண்டும் .பாவற்காய் அடிக்கடி சாப்பிடுவது உடலில் நீர்சத்தினை குறைக்கும் என்பதாக ஒரு தகவலும் உண்டு

நன்றி .உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

3 comments:

சுதா SJ said...

சாப்புட்டா போச்சு :)))))

Unknown said...

எதை சாப்பிட்டாலும் மருத்துவர் ஆலோசனையின்றி சர்க்கரை நோய் மாத்திரைகளை எடுப்பதை நோயாளி நிறுத்தக்கூடாது. அவ்வாறு பலரின் ஆலோசனைகளை கேட்டு தானே மாத்திரைகளை நிறுத்தி கஷ்டப்பட்டவர்கள் நிறைய பேர் உண்டு.

வேகநரி said...

வெண்டைக்காய் பலருக்கு பிடிக்காத காரணத்தால் அதை சாப்பிடபண்ண இப்படியான கதைகள் சொல்கிறார்கள் என்று நண்பர் சொல்கிறார். பிற்காலத்தில் நோய் வரும் போது வெண்டைகாய் மருத்துவம் செய்து பார்க்க வேண்டிது தான். பாவற்காய் கறி சுவையானதல்லவா அதனால் பிரச்சனையா!