Monday, November 12, 2012

வந்துட்டேன்யா…..வந்துட்டேன்யா …. மீண்டும் “வைகைப்புயல்” வடிவேலு

 

மிழ் சினிமாவுக்கு  1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமான வடிவேலு,கொஞ்சக்காலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் .ஆபாசமில்லாத அப்பாவி கிராமத்தானாக பல படங்களில் நடித்து பலருடைய  இதயங்களில் நகைசுவையால் கோலோச்சியவர்.வடிவேலுவின் மொழி நடை ,நடையுடை பாவனைகள் பலரையும் கவர்ந்தவை ,அவரின் நகைச்சுவை காரணமாகவே மதுரைத்தமிழ் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது .

இப்படி தமிழ் திரையுலகில் கோலோச்சிய வைகைப்புயலின் வாழ்வில் ஏற்பட்ட   அரசியல் தொடர்பால்  அவரின் திரை உலக பயணம் ஒரு முடிவிற்கு வந்தது .இது உண்மையில் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அடியாகும் .உண்மையில் அவர் கிழே உள்ள பேட்டியில் கூறியபடி அவருக்கு போட்டி அவர்தான் .இது உண்மையும்  கூட. அவரின் அரசியல் அவரின் தனிப்பட்ட விடையம் .நல்லதொரு நகைச்சுவை கலைஞன் அரசியலில் ஈடுபட்டு அரசியல் பண்ணப்பட்டதில் நொந்து போனது அவரின் நகைசுவையினை ரசித்த  ரசிகர்கள் தான் .அந்த ரசிகர்களின் வாதத்தினை போக்க வந்திருக்கும் ஒரு செய்தி இதுதான்

நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலு கூறுகையில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என்ற காமெடி கதையுடன் என்னை அணுகினார். அப்படத்தில் முக்கிய கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

கதை ஆப்பிரிக்காவில் நடப்பதுபோல் இருக்கும். எனவே படப்பிடிப்புக்காக அங்கு செல்ல இருக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதிலும் நான் நடிக்கிறேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல.

பூபதிபாண்டியன் இயக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.

அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை என்றும் சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

உணமையில் இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.இப்போதே  மேற்படி இரு படங்களை பற்றிய கற்பனை மனதினில் விரிகின்றது .வைகைப்புயலை மீண்டும் தமிழ்த்திரையுலகம் அழைத்துவரும் .எஸ் .ரவிக்குமாருக்கும் ,சிம்புதேவனுக்கும் வடிவேலுவின் ரசிகன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் .உண்மையில் எனது மனம் சோர்வுறும் வேளைகளில் எல்லாம் நான் எனது சோர்வை போக்க செய்வது வடிவேலுவின் நகைச்சுவைகளை பார்ப்பது ஆகும் .

நல்ல நடிகன் மட்டும் அல்ல நல்லதொரு பாடகனுமாகிய வடிவேலு பாடிய பல பாடல்கள் எம் மனதை மகிழ்விக்க வல்லன.அப்படிப்பட்ட சில பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன .கேட்க விரும்பின் இங்கே சுட்டவும் .

நன்றிகள்  .

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் வரட்டும்... தகவலுக்கு நன்றி...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சிகரம் பாரதி said...

Nalla padhivu. Enakkum mikka magilchi. Vadiveluvai meendum thiraiyil kaana aavalaai ullen. Thx 4visit my site. Sandhippom ullame!

குரும்பையூர் மூர்த்தி said...

நல்ல பதிவு...ஆனால் எனக்கு வடிவேலுவை விட விவேக்கின் காமேடிகள் தான் விருப்பம்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்