Monday, November 19, 2012

துப்பாக்கி -- ஸிலிப்பர் கில்லர் - -சிறுவர்கள்

 

Terror: Children train with pistols

நன்றி ---மிரர்

ன்று வெளியான இங்கிலாந்தின மிரர் பத்திரிகையில் வெளிவந்த படத்தினையே மேலே பார்க்கிறீர்கள் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வாஸிரிஸ்தான் பகுதியில் சுமார் 5 வயதான இளம் சிறுவர்களை  மூளைச் சலவை செய்து, ஜிகாதி எனப்படும் தற்கொலைப் படையினராக அல்குவைதா தீவிரவாதிகள் மாற்றும் படமே இதுவாகும் .இந்தப்பகுதி ஆப்கானுக்கு மிகவும் அருகில் இருக்கும் பகுதியாகும்  

ஏற்கனவே இறந்த தீவிரவாதிகளின் ஆதரவற்ற குழந்தைகளை , தந்தையர் வழியிலேயே(ஜிகாதி) அவர்களும் செல்ல வேண்டும் என்று போதிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்களுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி தரப்படுகிறது. .

தலிபான்களுக்காகப் போராடும் கூலிப் படையினரைத் தயார் செய்து அனுப்பும் அமைப்பாக அல்குவைதா மாறியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதச் சதிச் செயல்கள் இந்த அமைப்பினால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அல்குவைதா அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்ப சிறுவர்களைத் தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தீவிரவாதம் குறித்த ஆய்வுப் பிரிவின் தலைவர் நீல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான இந்த செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துலக ஊடகங்களில்  இடம்பெற்றுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது .உணமையில் இது ஒரு கண்டிக்கப்பட வேண்டிய செயல்.உணமையில் இவ் சிறுவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாதவர்கள் .எது சரி எது  பிழை என உணரமுடியாதவர்களை தீவிரவாதிகள் தமது நலன்களுக்காக,மதத்திற்காக பயன்படுத்துவது என்பது அவர்கள் வணங்கும் இறைவனாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது .இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு செயல் ஆகும் .

மதம் என்பது மனிதனை வழிப்படுத்துவதற்கே  அன்றி மதமே வாழ்க்கை அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?

12 comments:

இக்பால் செல்வன் said...

மதம் மக்களுக்கு வழிக்காட்டாது சகோ. அது வழிதவறலே செய்யும். பச்சிளம் குழந்தைகளின் கைகளில் துவக்கு, மனம் வெம்புகின்றது

Annbhu said...

But itha Pathi Padam eduthal mattum ethirkirarkal.. Itharku avarkalin pathil enna..?

Krish said...

தங்கள் சுய லாபத்துக்காகவும், சுயனலனுக்க்காகவும் இவர்கள் மதத்தை பயன்படுதுகின்றர்கள், இலங்கையில் மொழியை பயன்படுத்தியது (பயன்படுத்துவது) போன்று . மத, இன வெறி ஓயும் பொது இவர்கள் ஆட்டம் தானாகவே அடங்கும். அதுவரை,,,,!!!!!!????

Mahathevan VK said...

மதத்தை நேசிக்கமுன் மனிதனை நேசிப்போம்

வேகநரி said...

தகவலுக்கு நன்றி. இஸ்லாம் மதம் அல்ல தடைசெய்யபட வேண்டிய வன்முறை பாதை. இப்போ ஏன் துப்பாக்கி படத்திற்க்கு தமிழ்நாட்டில் இவ்வளவு சவுண் விட்டார்கள் என்பது புரிந்திருக்குமே.

ராஜ நடராஜன் said...

My regrets to these young souls:(

கரிகாலன் said...

நன்றிகள் அனைவருக்கும் .
இக்பால் செல்வன் ,அன்பு கிறிஸ் ,மகாதேவன் ,வேகநரி ,ராஜ நடராஜன்
உங்கள் கருத்துகளுக்கு நன்றி .

கரிகாலன் said...

உணமையிலேயே கண்டிக்க கூடிய ஒரு விடையம் .

சீனு said...

'துப்பாக்கி' எதிர்ப்பு கோஷ்டிக்கு இந்த படத்தை அனுப்புங்கள். வால் பேப்பரா யூஸ் பன்னிப்பாங்க...

அன்பு said...

ஓய்வு கெடைக்கும்போது நம்ம பக்கம் இப்படி வந்துட்டு போங்க..

பதிவர்களை மிரட்டுகிறேன்..!!!???
http://anbu.blogspot.com/2012/11/blog-post_26.html

Alien A said...

அருமை கரிகாலன்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்