Tuesday, March 20, 2012

ரொறன்ரோவில் இருந்து வணக்கம் எவ்.எம் தமிழ் வானொலி

ரொறன்ரோவின் scarborough பகுதிக்கென ஒரு வானொலி அனுமதியினை கனேடிய
வானொலி தொலைக்காட்சி ஆணையம்
கொடுத்துள்ளது .தமிழ் 60 வீதம் பஞ்சாபி 20 வீதம் ,பிலிபினோ 10வீதம் நிகழ்சிகளை வழங்க வேண்டும்
என்பதுதான் நிபந்தனை .

scarborough பகுதிக்கு என வழங்கப்பட்டுள்ள இந்த வானொலி அனுமதி "தமிழ் வண்" தொலைக் காட்சி நிறுவனர் களுக்கு கிடைத்துள்ளது . தனது பரிட்சார்த்த ஒலிபரப்பினை 105.9 F.M இல் ஆரம்பித்துவிட்ட இவ் வானொலியினை ரொறன்ரோவின் பல பகுதிகளிலும் தெளிவாக கேட்க முடிகிறது , பிறாம்ரன் பகுதியிலும் ஓரளவு
கேட்க முடிகிறது .வணக்கம் எவ் .எம் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு என்கிறார்கள் .பார்ப்போம்.

தூள் கிளப்ப்பும் பாடல்கள் வடிவேலுவின் வசனம் ,விஜயின் வசனங்கலுடன் ஆரம்பம் நல்ல தான் இருக்கிறது ,
இது இப்படி இருக்க அடுத்த தமிழ் எவ்.எம் வானொலியில் கொஞ்சம் சலசலப்பு,விறுவிறுப்பு இருக்கிறமாதிரி தெரிகிறது .பாப்பம் கீரைக்கடைக்கும் எதிர்கடை வேண்டும் தானே .

அதைவிட சிறப்பு அலைகளில் நடை பெறுகின்ற வானொலிகள் என்ன செய்ய போகின்றன ?எப்படி போட்டிகளை
சமாளிக்க போகின்றன . சிறப்பு அலைகளில் நடைபெறுகின்ற வானொலிகள் குறிப்பிட்ட அளவு நேயர்களை வைத்திருக்கின் றன .பொதுவாக முதியோர்களை .ஆனால் மேலே குறிப்பிட்டவை வாலிபர் ,யுவதிகளை
குறிவைகின்றன , பார்ப்போம் .முன்பு தமிழ் வானொலி என்பது கனவு ,பின்பு சிறப்பு அலையில்24மணிநெர தமிழ் வானொலி ,இப்போது எ வ்.எம்இல் 24 மணி வானொலி .பார்ப்போம்

இவறிற்கெல்லாம் காரணம் தமிழனின் முயற்சி ,விடா முயற்சி