Saturday, October 06, 2012

த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த "ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு (Shahin Najafi) ஈரானிய ஷியா  முஸ்லிம்கள்  ம்ரணதண்டனை விதித்துள்ளனர்.
அவரது  த(கொ)லைக்கு 100,000 டொலர் விலை வைத்துள்ளனர். ஈரானிய மதகுருக்களுக்கு எதிராகப் பாட்டெழுதிப் பொது மேடைகளில் பாடி வருவதால் நாஜாஃபி மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் இத் தண்டனையானதுத ஈரானிய  ஷியா முஸ்லிம் சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய  இமாம்களைப்(மதகுரு) பற்றி கேலி செய்யும் பாடல்களை நாஜாஃபி பாடியதால் அவரிற்கு  ஈரானின் ஷியா சமயத் தலைவரான அயாதுல்லா சாஃபி (Ayatollah Safi) கோல்படுயகானி  மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. வெகுகாலமாக ஈரானிய சமயப் பெருமக்களோடு கருத்து வேறுபாடு கொண்டதனால் நாஜாபி 2005 முதல் ஜெர்மனியின் கோலோனில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த வருடம் மே மாதத்தில் “nagi” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் ஷாஹின் நாஜாஃபி. இப் பாடல் தொகுப்பில்  ஈரானிய சமூகத்தைப் பற்றியும் ஈரானிய அரசியலைப் பற்றியும் விமர்சித்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்தே ஃபத்வா எனப்படும் சமயத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியத் தீவிரவாதி யாராவது நாஜாஃபியைக் கொல்லும் ஆபத்து உள்ளது.
எனவே இவர் தற்போது  காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறார். ஈரானின் ஷியா மதகுருவான சஃபி மீது காவல்துறையில் முறையீடும் செய்துள்ளார். 

இது தொடர்பாக நாஜாஃபி  கூறும் பொழுது  தனக்கு சமயத்தை(இஸ்லாத்தினை) இழிவுபடுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றும், சமூக நடப்பையே தனது பாடலில் வெளிப்படுத்தியதாகவும், இதனைத் திரித்துக் கூறி தன் மீது வெறுப்பைப் பரவ விட்டிருப்பதாகவும் கூறினார்.
நான் இளைஞன், என்னால் இசைநிகழ்ச்சி நடத்தாமல் சும்மா இருக்க இயலாது என்றும்  ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் கருத்துக்களை வாளால் எதிர்கொ(ள்)ல்லும் சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.

இது தொடர்பாக பத்திரிகையில் ( Newyork Times) வந்த செய்தியின் சுட்டி:-

http://www.nytimes.com/2012/05/15/world/middleeast/shanin-najafi-iranian-born-rapper-faces-death-threats-over-song.html?_r=0

Tuesday, October 02, 2012

மூத்த வலைப்பதிவர் மறைவு !!!!!! கண்ணீர் அஞ்சலிகள்!!

 

ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த  வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமரணம் என்ற செய்தியே தான் அது .2007 ம் ஆண்டுக்கு பின்னர் வலை பதிபவ்ர்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் .அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டின் தொடக்கத்தில்    இருந்து  2007 ஆண்டுவரை வலைபதிவிலும். யாழ் இணையத்திலும் எழுதிவந்தவர். அபொழுது எல்லாம் திரட்டியே இல்லாத காலம்.மதி கந்தசாமியின் ஒரு வலைப்பதிவில் எல்லா வலைபதிவுகளும் தொகுகப்பட்ட காலம்

.கரிகாலன் ஆகிய நான் ,ஈழநாதன் ,சயந்தன் ,வசந்தன் .மதி கந்தசாமி இப்படி சிலர் தான் ஈழத்தினை சேர்ந்த பதிவர்கள் மற்றவர்கள் தமிழகத்தினை சேர்ந்த உறவுகள்.சண்டை சச்சரவு அற்ற பதிவுகள் ,விட்டுக்கொடுப்புகள் ,நாகரிகமான ஆரோக்கியமான் கருத்தாடல்கள் , இப்படி இருந்த காலம் .அப்பொழுது தனது நிறைந்த தமிழ் அறிவாலும் இலக்கிய திறனாலும் உதவி செய்யும் பண்பாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ,”ஈழநாதம்” அவரது பிரதான் வலைபதிவு ,அதை விட  மேலும் 4,5 வலைபதீவுகள் வைத்திருந்தார் .ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமான நூலகம் திட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.அதை விட யாழ் இணையத்தில் நிறைய பங்களிப்புகள் செய்தவராவார்.

2007ம் ஆண்டின்பின்பு எந்தொரு இடத்திலும் அவரது எழுத்துகள் காணப்படவில்லை.யாருடனும் தொடர்பில் இல்லை .சிங்கப்பூரில இருந்து எழுதிய அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது .நுலகம் சார்ந்தவர்களுடன்  கேட்டபோது தங்களுடன் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள் ..இப்படி  ஆட்கள் காணமல் போவது ஈழத்தவர் வாழ்வில் சகயம் என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை .

இப்போது செய்தி வந்திருகிறது தனது மனைவி ,பிள்ளை இவர்களை தவிக்கவிட்டு அகால மரணம் அடைந்திருப்பதாக .நல்லதொரு நண்பனை இழந்த துயரம் எனக்கு ,நல்லதொரு மகனை ,கணவனை தகப்பனை இழந்ததொரு துயரம் அவரின் குடும்பத்திற்கு .

அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த

அனுதாபங்கள்!

.நண்பனே உனக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள்!

தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது  தமிழக்காக உழைப்பவர் எல்லோரும்  அற்ப ஆயுளில் போவதென்பது  தமிழே நீ கொண்டுவந்த சாபமா ??

 

eelanathan

பட உதவி(நன்றி) :-யாழ் இணையம்