Wednesday, October 31, 2012

உங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.!

 

 1. அன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது
 2. தீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க  4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .
 3. ஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .
 4. வாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான  பொருளைக் கொண்டுள்ளது.
 5. கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது. 
 6. கட்டைவிரலின் நகத்தினைவிட  நடுவிரல் நகத்தின் வளர்ச்சி  அதிகமானது.
 7. குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .
 8. வெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .
 9. எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
 10. கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .
 11. நலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .
 12. 80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
 13. ஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .
 14. கேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener  கண்டு பிடிக்கப்பட்டன .
 15. ஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.
 16. தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .
 17. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17  சதுர மைல்கள்) சனத்தொகை  10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )
 18. ஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .
 19. 60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .
 20. வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .

Sunday, October 28, 2012

வெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்படும்!

வெண்டைக்காய் சாப்பிடும்படியும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் எனக்கு ஒரு மெயில் வந்தது .கண்டதையும் போர்வேட் செய்யும் நண்பர் அனுப்பிய மெயில் அது .உண்மைதான அது என சோதனை செய்து பார்க்க எனது தந்தைக்கு பரிந்துரைத்தேன் .அவரும் வெண்டைக்காய் உண்டு விட்டு இரத்தத்தில் வெல்லத்தின் அளவை பரிசோதித்துப்பார்த்த போது வெல்லத்தின் அளவு இரத்தத்தில் குறைந்து காணப்பட்டது .

சரி என்று சொல்லி அவர் சில தினங்கள் அம்முறையினை பின்பற்றி  வந்தபோது அவருக்கு தும்மல் தடிமன் வந்து விட்டது .எனவே அவர் இப்போது கிழமையில் முன்று தினங்கள் மட்டும் வெண்டைகாய் மருத்துவம் செய்து வருகிறார்.

சரி எப்படி அதைப்பின்பற்றுவது ? வழிமுறை இங்கே .உங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப எச்சரிக்கையோடு சொந்தப்பொறுப்பில் பின்பற்றவும். (ஹி..ஹி. நிதிமன்றம் கரிகாலனின் மனக்கண்ணில் )சரி ,இனி விபரங்கள்

 • ஒரு வெண்டைக்காய்  எடுத்து நன்கு கழுவிக் கொள்ள  வேண்டும். பின் அதன் இரு முனைகளையும்(அடி ,நுனி) நீக்கிவிட வேண்டும்.
 • முனைகளை நறுக்கியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
 • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வழவழ நீர் இருக்கும் , அந்த நீரை குடிக்க வேண்டும்.
 • இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
 • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
 • அடிக்கடி உங்கள் இரத்தத்தினை பரிசோதிக்க வேண்டும் .இரத்தத்தில் சர்க்கரை கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை .

இதன் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை .அத்துடன் மருத்துவ ரீதியில் வைத்தியர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .வெண்டைக்காய் போலவே சிறு குறிஞ்சா .பாவக்காய் ,வெந்தயம் சின்ன சீரகம் போன்றவையும் இரத்தத்தில் வெல்லத்தின் அளவை குறைப்பதாக நீரிழிவு நோயாளிகள் சொல்கிறார்கள் .ஏன் கொய்யாப்பழம் கூட நீரிழிவை குறைப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் இதனால் ஏதாவது பின்விளைவுகள் வருமா என்பது பற்றி அலோபதி வைத்தியர்கள் தான் சொல்லவேண்டும் .பாவற்காய் அடிக்கடி சாப்பிடுவது உடலில் நீர்சத்தினை குறைக்கும் என்பதாக ஒரு தகவலும் உண்டு

நன்றி .உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்ஹாசன்

 

இன்னும் சரியா இரு மாதங்களில் அதாவது டிசெம்பர் மாதம் 31 திகதி இரவு மணி 11.59. க்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிக்கப்போகும் ஒரு பாடல் .கடந்த இருபது வருடங்களாக ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின்  தமிழ் தேசிய கீதம் .ஆம்  சகலகலாவலவனின்” இளமை இதோ இதோ”.இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள   இசையாலும் சரி மேட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில் எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு  புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .

பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் ஆண்டுகளை கடந்தும் ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா இவர்களின் பெயரினை சொல்லும் என்பது மட்டும் நிச்சயம் .

ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக்  காலத்திலும் ஈடு கொடுத்து நிர்ற்பதால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.

பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற  தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன் படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசசாட்டு ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.