Friday, November 09, 2012

குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை

 

சில தினக்களுக்கு முன்னர் படித்த ஒரு ஜென் கதை எனது மனதுக்கு மிகவும் பிடித்தது .நல்லதொரு தத்துவத்தினை சொல்லும் அக்கதையினை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன் .

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

நிச்சயமான உண்மை .

Tuesday, November 06, 2012

நானும் ஒரு தாய் -----குறும்படம்

 

அண்மையில் ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது  .படத்தினை பார்த்த பின்பு தான் இயக்குனர் பற்றி தேடியபோது அவர் ஈழத்தினை சேர்ந்தவர், மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன்  இயக்குனர் பாலுமகேந்திராவின்  மாணவர் என்றும் அறிய முடிந்தது .அத்துடன் இக் குறும் படம் இந்தியாவில் பல விருதுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நான் படத்தினை பற்றி விமர்சனம் எழுதுவதை விட நிங்களே சில நிடங்களில் இப்படத்தினை பார்த்துவிட்டு விமர்சிக்க்லாமே.

நானும் ஒரு தாய்

 


கிழே இருக்கும்  இந்த வீடியோவினைப்பாருங்கள் இந்த மேற்கத்திய இசைக்கலைஞர் எவ்வளவு இலாவகமாக எமது தவிலை வாசிக்கின்றார் என்று .சினிமா இசையை தவிர வேறு இசைகளை ரசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதையும் ரசிப்பார்கள் ஏன் எதிர்பார்க்கலாம்.

 

தனிமையில் தவிலை எப்படி கையாளுகிறார் பாருங்கள் .

நன்றி /வணக்கம்

Sunday, November 04, 2012

முஸ்லிம்களின் சாபமா சான்டி புயல் ???

 

ட்வீடரில் கருத்து தெரிவித்துள்ள சில முஸ்லிம் மதப்பெரியவர்கள் அமெரிக்காவை தாக்கிய சாண்டி சுறாவளி முஸ்லிம்களின் சாபம் எனவும் அல்லாவை அவமதித்ததால் தான் சான்டி அமெரிக்காவை தாக்கியதாக கருத்து வெளியிட்டுள்ளனர் .

ஏற்கனவே அல்லவை பற்றி படம் எடுத்து அதனால் உலகெங்கும் அமெரிக்கா வினை எதிர்த்து கலவரங்கள் ஏற்பட்டதும் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதும் கடந்தகால சம்பவங்கள். இதனை மனதில் வைத்து சில மதப்பெரியவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர் ட்விட்டரில் .

எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் : அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்,ஆச்சரியப்படுகின்றனர் . நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் அமெரிக்கவை பழிவாங்கினான்?? என்பதே எனது கருத்து.

இவரது டுவீட்டுக்கு ஒருவர்  பதில்  தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும்  இந்தப் புனிதப் புயல்??? என்று கூறியுள்ளார்.

அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். எனவும் அவர் அந்த ட்வீட்டில் சொல்லியிருக்கிறார் .இனி இன்னொரு மத குருவின் செய்தி

சவுதியை   சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் ?என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.ஆனால்  அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி இறந்தவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் இதற்கு பதில்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது, என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதப்பெரியவர்களா?.

கனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் !

 

கனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்சில் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்ட நேரமானது இன்று இரவு இரண்டு மணியாகும் போது மீண்டும் பழைய நிலைக்கு அதாவது ஒரு மணித் தியாலமானது பின்னகர்த்தப்படும் .அதாவது இரண்டு மணியாகும் போது ஒரு மணியாகும் .எமது கைபேசிகளில் , தொலைகாட்சிகளிலும் இனையத்துடன் இணைக்கப்ட்ட  சில வீட்டு உபகரணங்களிலும் இவ் நேர மாற்றம் தானியங்கியாக மாறறமடையும். ஒரு சில நாட்களுக்கு இம் நேர மாற்றம் ஆனது சங்கடமாக இருந்தாலும் பின்னர் பழகிவிடும்  குளிர்காலத்தின் போது இரவு நேரத்தின் அளவு இங்கு அதிகமாக இருக்கும் .பகல் பொழுது குறைவு .

எனவே இவ் நேர மாற்றத்தின் காரணமாக ஒரு மணித்தியாலம் அதிகமாக நித்திரை கொள்ளலாம்.இன் நேரமாற்றம் ஆனது மின்சக்தியை சேமிக்கவும் ,மனித வலுவை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில்   கொண்டுவரப்பட்டது .

இன்றைய தினம் இது கனடா மற்றும் அமேரிக்கா நாடுகளில் இன்னும் சில நிடங்களில் அமுலுக்கு வருகிறது,கனடாவில் ஆறு விதமான நேர வலயங்கள் இருப்பது பலருக்கு தெரியாத ஒன்று .ரொறன்ரோக்கும் வான்கூவருக்கும் இடையே நான்கு மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உண்டு . பரப்பளவில் பெரிய கனடாவில் ஆறு நேர வலயங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை தானே .

நேரமாற்றம் ஆனது எப்படி யாரால் என்ற விபரங்கள் பின்னர் ஒரு பதிவில் தருகிறேன் .