Thursday, January 03, 2013

என்ன ஆச்சு ? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு !!!!!!!!

 

நேற்றைய  தினம் முன்னர் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் அவமானத்துக்கு உள்ளாக வேண்டிய ஒரு நிலை ஒரு செய்தியால் ஏற்பட்டிருக்கிறது  .

பல்வேறு புகார் குற்றச்சாட்டுகளுக்காக பிரிட்டனில் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்ட, அல்லது சஸ்பென்ட் செய்யப்பட்ட வெளிநாட்டு டாக்டர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள், இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள். என்ற ஒரு தகவலை  பிரிட்டனின் ரெலிகிராப் பத்திரிக்கை புள்ளிவிபரம் சகிதம் வெளியிட்திருக்கிறது.இது கடந்த ஜந்து ஆண்டு கால புள்ளிவிபரம் .அந்த பத்திரிகை வெளியிட்ட அந்த புள்ளிவிபரம் பின்னர்  ஜி.எம்.சி.யால்  உறுதி செய்யப்பட்டுள்ளது.(பிரிட்டன் மெடிக்கல் கவுன்சில் )

இவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணங்கள், பற்றி அப்பத்திரிகை தெரிவித்திருப்பவை   நோய்கள் பற்றிய தவறான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முடிவுகளை எடுத்தல், போதிய ஆங்கில புலமை இல்லாமையால் நோயாளிகள் சொல்வதை புரிந்து கொள்ளாமை, மற்றும் பாலியல் ரீதியான சேஷ்டைகள் (sexual misbehaviour)

கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டன் மெடிக்கல் கவுன்சிலினால்  நடவடிக்கை எடுக்கப்பட்ட டாக்டர்களில் 63 சதவீதமானோர், வெளிநாடுகளில் படித்துவிட்டு பிரிட்டனுக்கு வந்த டாக்டர்கள். இவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்திய டாக்டர்கள், அதற்கு அடுத்த இடத்தில், நைஜீரியா, மற்றும் எகிப்து நாட்டு டாக்டர்கள் உள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் படிப்புக்கும் பண்புக்கும்  எதாவது  சம்பந்தம் இருக்குதா என்று ?




இனி அடுத்த செய்தி

சென்னையை சேர்ந்த தமிழரான  எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர்  கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின்  உயரிய விருதான,   ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக  கனடாவின்  கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார்.ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக  வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக  கூறியுள்ளார்.   சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில்  பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர்  அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன்  பல்கலை.யில் மேல்படிப்பை முடித்தார்.இந்த செய்தியால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

.

கனேடிய பிரதமர் ஸ்ர்ரிபன் காப்பருடன்  வெங்கடேஷ் மன்னார் .



கடந்த முறை பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி பின்னர் காலநிலையால் ஒத்தி வைக்கப்பட்ட இளையராஜாவின்  எங்கேயும் எப்போதும் ராஜா இசை நிகழ்ச்சி தற்போது மீண்டும் பெப்ரவரி பதினாறாந்திகதி மீண்டும் இடம்பெற இருக்கிறது ரொறன்ரோவில். .பல நுற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ,நடிகர்கள் கலந்து கொள்வதாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் காண முடிகிறது .சர்ச்சைகள் இல்லாமல் சுபமாக நடந்து முடியும் என் நம்புகிறேன் .

 

பிறந்திருக்கும் இப் புதிய ஆண்டு எல்லோருக்கும் நல்லதொரு ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.