Thursday, January 01, 2015

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்,பாலசுப்பிரமணியம்

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்,பாலசுப்பிரமணியம்

 ரவு 12.00 மணிக்கு காரில் பயணித்துக்கொண்டிருந்த போது கேட்ட முதல்  பாடல்  சரியாக 12.00 மணிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் வானொலி.தொலைக்காட்சிகளில் ஒலித்த பாடல்களில் முதலாவதாக இருந்த ஒரு  பாடல் ..கடந்த முப்பது  வருடங்களுக்கு மேலாக  ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின்  தமிழ் தேசிய கீதம் .ஆம்  சகலகலாவலவனின் " இளமை இதோ இதோ".இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள இசையாலும் சரி மெட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும்
 இன்னும் ஒரு பாடல் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில்
 எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு  புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .

1982 ஆண்டளவில் வெளிவந்த சகலகலாவல்லவன் படத்தில்  இடம்பெற்ற  பல பாடல்கள் புகழ்பெற்றன இருந்தும் காலத்தை
கடந்து நிற்பது இந்த ஒரு பாடல் மட்டும் தான் .(மற்றைய பாடல்கள் பற்றி எழுத பதிவர் நம்பள்கிக்கு அழைப்பு விடப்படுகிறது ).


பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் முப்பது  ஆண்டுகளை கடந்தும்ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா மற்றும் பாலசுப்பிரமணியத்தின் பெயரினை சொல்லிக்கொண்டிருக்கிறது  என்பது மட்டும் நிச்சயம்..இந்தபாடல்  கமல்ஹாசனை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல் .பாடலில்  கமல்ஹாசன் பல விதமான வித்தைகளை செய்வதாகக் காட்டுவார்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக்  காலத்திலும் ஈடு கொடுத்து நிற்பதால் தால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.இப்போது நாற்பது  வயதுக்கு மேலே இருப்பவர்களுக்கு தெரியும் அந்த நாட்களில் இப்படம்,பாடல்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் ,பலருக்கும் பல மலரும்
நினைவுகளைக்கொண்டு வரும் இருந்தாலும் பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற  தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன்
படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசாட்டு  ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.

 பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் ,சந்தோசத்தினையும் தரவேண்டும் என இறைவனை
பிரார்த்திக்கிறேன் .குறிப்பாக ஈழத்திலே அல்லறும் எனது உறவுகளுக்கு

5 comments:

karikaalan said...

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Unknown said...

Sir,
சகலகலாவல்லவன் released in the year 1982, exactly now 33 years.
I'm watching this song for the last 30 years.......

கரிகாலன் said...

நன்றி பில்லா
தவறை திருத்திவிடுகிறேன் .

காட்டான் said...

நல்ல பாடல்.எல்லோருக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்.

காரிகன் said...

நீங்கள் சொல்வது உண்மைதான். அந்தப் படத்தில் இந்த ஒரு பாடல்தான் கொஞ்சம் சகித்துக்கொள்ளக்கூடியது. புத்தாண்டை வரவேற்கும் பாடல் போல இருந்தாலும் உண்மையில் கமலஹாசன் என்ற தனி மனிதனை கண்ணா பின்னாவென்று புகழ்ந்து எழுதப்பட்டது. பாடலின் துவக்கத்தில் வரும் ஹேப்பி நியு இயர் என்ற ஒரே வாழ்த்து இந்தப் பாடலை எதோ புத்தாண்டுப் பாடல் போல எண்ணவைத்துவிட்டது. இசை நன்றாகவே இருக்கும். அந்த ஓடும் ட்ரம்ஸ் இசை பொனிஎம் குழுவின் நைட் பிளைட் டு வீனஸ் பாடல் இசையின் சாயல் கொண்டிருக்கும்.