Wednesday, May 20, 2015

முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை!


விகடன் தளத்தில்   வாசகர் பக்கம் எனும் பகுதியில் சிவா ( திருத்தணி)  என்னும் வாசகர் எழுதிய ஒரு விடயத்தினை இங்கு பகிர்ந்திருக்கிறேன் .
அனந்த விகடன் மற்றும் வாசகர் சிவா (திருத்தணி) அவர்களுக்கு   எனது நன்றிகள் .

மூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் பலரும் சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும், புதுப்புது கோணங்களில் கூறி தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த வாட்ஸ் அப் மெசேஸ் ஒன்று இது. 

முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள். 

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம். 

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம். 

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.
தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. 
    
- சிவா ( திருத்தணி) 

2 comments:

சேக்காளி said...

அம்மாவ சமையல் காரியா சித்தரிச்சதுக்கு இருக்கு ஆப்பு.

Anonymous said...

b