Tuesday, August 25, 2015

கொத்து ரொட்டி -007

ங்கு கனடாவில் கோடைகாலம் நிறைவுக்கு வந்து கொண்டிருக்கிறது .கலைநிகழ்சிகள் ,ஒன்று கூடல்கள்,களியாட்ட நிகழ்வுகள் போன்ற இன்னபிற நிகழ்வுகளும் ஓய்வுக்கு வந்து கொண்டிருகின்றன.இறைச்சியை சுட்டு சுட்டு சாப்பிட்டு உடல் நிறைதான் அமோகமாக ஏறி விட்டது .இனி அதில் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும்.  உடல் நிறையை குறைக்கவேண்டும் .

எப்படி கோடைகாலம் போனது என்றே தெரியவில்லை .கனடாவில் வரும் ஒக்ரோபர் மாதம் பொதுத்தேர்தல் வர இருக்கிறது .கடந்த இருமுறை பதவிக்கு வந்த அடிப்படைவாத கட்சி இம்முறை பதவிக்கு வருவது கடினம் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன ,கனேடிய பொருளாதாரத்தின் இறங்கு முகம் அக்கட்சிக்கு பாதகமாக போகிறது .

தாராளவாத கட்சி இம்முறை புதிய தலைவரின் கீழ் தேர்தலில் போட்டி இடுகிறது .பழைய தலைவர் கடந்த முறை தேர்தலில் தோல்வி  அடைந்தவுடன் துண்டை உதறிக்கொண்டு தன்னுடைய சொந்த வேலையை கவனிக்க போய்விட்டார் .இங்கு யாரும் 90 வயது வரை ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை .இம்முறை ஆளும்கட்சியை சேர்ந்த 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் தேர்தலில் போட்டி இடுவதில்லை
என் அறிவித்துள்ளனர் .காரணமாக தெரிவித்துள்ளது தமது குடும்பத்துடன் தாம்  போதிய நேரத்தினை செலவழிக்க வேண்டும்  என்பதாக  சொல்லி யிருக்கிறார்கள் .

இங்கு அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் மட்டுமே கிடைக்கும் கிம்பளம் எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது .கனேடிய அரசியல் ,தேர்தல்  பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் .

சரி சரி இதையும் பார்த்து தொலையுங்கள்
செய்தி : மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் கௌரி ஷங்கர் ஷெஜ்வார் விதிஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உரையை வாசித்த பிறகு கிட்டத்தட்ட கீழே விழ பார்த்தார்.

###############################################################################


வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை காத்திருக்காமல் அந்த சந்தர்ப்பத்தினை நாமே உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு குட்டிக்கதை அண்மையில் படித்ததது 

அந்த இராணுவப்படை அணியில் இருக்கும் ஜோனுக்கு யுத்த முனைக்கு  செல்வதற்கான உத்தரவுடன் மேலதிகமான பயிற்சியும் எடுக்கும்படி உத்தரவு வந்தது .பயிற்சி நாள் வந்தது  ஜோன் பயற்சிக்கு வரவில்லை .இது பற்றி விசாரிக்க  வந்த பயிற்சி அதிகாரி  ஜோன் அறைக்கு சென்றார் .அங்கு ஜோன் சில காகிதங்களை எடுப்பதும் உற்றுப் ,பார்ப்பதும் இது இல்லை இது இல்லை என்று எறிவதுமாக இருப்பதைக் கண்டு குழம்பிப் போனவராக என்ன நடக்கிறது என்று ஜோனின் சகபாடிகளிடம் கேட்க  சில நாட்களாக ஜோன் இப்படிதான்  செய்கிறான் .அவனின் நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிறது என சொன்னார்கள் .

சில நாட்களில் ஜோனுக்கு மருத்துவ பரிசோதனை க்கு அழைப்பு வந்துது .சென்றுவந்த சில நாட்களில் மனநலம் சரி இல்லாததால்  இராணுவத்தை விட்டு விலக்கப் படுகிறாய்  என ஜோனுக்கு கடிதம் வந்தது .கடிதத்தினை வாசித்த ஜோன் "இதுதான் அது", "இதுதான் அது" என துள்ளிக்குதித்தான் ,இப்போது சொல்லுங்கள் 

ஜோன் எப்படி சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக உருவாக்கினான் என்று ?

################################################################################

கனடாவில் அண்மையில் ஒரு புள்ளிவிபரம் எடுத்தார்கள்  குறிப்பாக பெண்களிடம். நீங்கள் "உறவு" கொள்ள எந்த இடத்தை விரும்புவீர்கள் என்று கேட்டார்கள் .பெரும்பாலான பெண்கள் காரில் வைத்து உறவு கொள்ள பிடிக்கும் என சொன்னதுடன் இன்னும் கணிசமான பெண்கள் சமையலரையில் வைத்து உறவு கொள்ள பிடிக்கும்  எனவும்  சொல்லியிருந்தனர் . இது ஜேர்மனியை சேர்ந்த ஒரு செய்தி ஜெர்மனியைசெ சேர்ந்த ஒரு   இணைய தளம்  சாலையில் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் முடிவுகள் ஆவன   56 சதவிகிதத்தினர் தங்களின் காரில் ஒருமுறையாவது காம விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் 10 சதவிகிதத்தினர் கார்கள் நிறுத்துமிடத்தில் மட்டுமே தாங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.இதே போல் 47சதவிகிதத்தினர் தங்களது கார்கள் வசதியாகவும் கதகதப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியாக வசிப்பவர்களை விட கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் தான் இது போன்று வாகனங்களில் காம விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது .

சில காலத்துக்கு முன்னர் இங்கு கனடாவில் ஒரு ஜோடி ஆற்றம் கரைக்கு அருகினில் இரவு நேரம் காரை நிறுத்திவிட்டு இருவரும் 
"உல்லாசமாக"(தமிழக பத்திரிகைகள் சொல்வது போல ) இருக்க ஆண் கடமையே கண்ணாக  இருந்த வேளையில்  எதேச்சையாக கார் நகர்ந்து ஆற்றினுள் விழ இதன் பின்னர் மீது அணியினர் வந்து மீட்டபோது  பெண் இறந்துவிட ஆண் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார் .

################################################################################

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது என்பது  அவர்கள் சபை சென்று தமது பிரதிநிதியாக செயற்படவேண்டும் என்பதற்காக தான் .உண்மையில் பதவியால் கிடைக்கும் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு சட்டசபைக்கு போகாமல் இருப்பதும் அதற்கு பல காரணங்களை சாட்டாக சொல்வதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழகு அல்ல .போகமுடியாவிடால் இனி தேர்தலில் போட்டி போடாதீர்கள் 

அதே போல சட்டசபைக்கு வருபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஆளும்கட்சி செய்து கொடுக்கவேண்டும்  இது தான் உண்மையாக ஜனநாயகம் .எதிர்கட்சிதான் ஒழிய எதிரிக்கட்சி அல்ல என்பதையும் சம்பந்தப்படவர்கள் உணரவேண்டும் .யார் யாரைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் 

##############################################################################கொத்துரொட்டி ஏழினை ரசித்திருப்பீர்கள்  என் நம்புகிறேன் .மீண்டும் உங்களை  விரைவினில் சந்திக்கிறேன் -------கரிகாலன் -------------


No comments: