Wednesday, June 10, 2015

கொத்துரொட்டி --006

ண்மையில் சாருநிவேதிதாவின் நாவல்கள் சிலவற்றை  அண்மையில் தெரியாதனமாக படித்து தொலைத்துவிட்டேன் .நாவல்களை  படித்து முடித்ததும் உண்மையிலேயே கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது .எப்படி இவரின் நாவல்களை எல்லாம் படிக்கிறார்கள் .கிட்டத்தட்ட ஆபாசத்தின் எல்லை எதுவோ அதை தொட்டுவிடுகிறார் .நாவல்களில்

இடையிடையே உலகில் இருக்கும் பெயர் தெரியாத நாவலாசிரியர்கள் அல்லது இசைஅமைப்பாளர் அல்லது இசைக்கலைஞர்கள் இவற்றில் எதோ ஒன்று அல்லது எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார் .நாவலை படித்து முடித்ததும் ஒரு வெறுமையே மனதில் நின்றது .இவரின் எழுத்து புகழ் பெற்றது ஆபாசத்தினாலா  அல்லது அதில் சிறிதளவில் இருக்கும் விடயத்துக்காகவா?

இவரின் சில நாவல்களை  படித்தபின்னர்  எனக்கும் மனதினில் ஒரு தெம்பு நானும் ஒரு எழுத்தாளராக வரலாம் என்று .சரி நான் இங்கு சொல்லப்போவதை கவனமாக படியுங்கள் .ஒரு நாவலில் சொல்கிறார் தமிழ்நாட்டில்  பெரும்பாலான ஆண்களுக்கு சர்க்கரை வியாதி .பிரஷர் இரண்டுமே இருக்கிறது  அப்போது  எப்படி அவர்களின் மனைவிமார்கள் பாலியலில்  திருப்தி அடைவார்கள் என்று கேட்கிறார்  .என்ன செய்வது இந்திய பெண்கள் என்பதால் மனதினில் குமைந்தாலும் அவர்கள் வெளியில் அதுபற்றி கதைப்பதில்லை என்கிறார். எந்த நாவல் என்று மறந்துவிட்டேன் ,சாருவின் மூளை  எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சில தினங்களுக்கு முன்னர் நானும் நண்பரும் "ரிம் ஹோட்டனில்" இருந்து கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் .ரிம் ஹோட்டன் என்றால் புரியாதவர்களுக்காக இது    ரிம் ஹோட்டன் என்பது கனடாவின் பிரபல்யமான "காப்பி சாப்". கனடாவில் அமெரிக்காவின் ஸ்ரார் பக் எல்லாம் இதற்கு கிட்ட வரமுடியாது  .ஒவ்வொரு சந்திக்கு சந்தி இக்கடை இருக்கும்.பொதுவாகவே கனேடியர்கள் கோப்பி பிரியர்கள் விளக்கம் போதுமா .

இனி விட்ட இடத்தில இருந்து நாங்கள் இருவரும் கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா ?இப்படி இருக்கும் போது எமக்கு பக்கத்து மேசையில் மூன்று பேர்  வந்து அமர்ந்தார்கள் .மூவரும் இங்கு கனடாவில் இயங்கும் ஒரு வானொலி நிலையத்தினை சேர்ந்தவர்கள் .ஒருவர் அதில் அறிவிப்பாளர் மற்றவர்கள் அதன் உயர் அதிகாரிகள் .அவர்களின் வானொலி நிலையத்துக்குரிய வாகனம்  வெளியே நிற்பதையும் அவதானிக்க முடிந்தது

.முன்று பேரும்  சான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு  கோப்பியும் அருந்தியவாறு
அளவளாவிக்கொண்டிருந்தார்கள்.இதில் மறைய இருவரும் இயல்பாக இருக்க இந்த அறிவிப்பாளர் மட்டும் அடிக்கடி எம்மைப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது .

அவரால் இயல்யாக இருக்கவே முடியவில்லை .அவர்களுடன் கதைப்பது அடிக்கடி எம்மைப்பார்ப்பது இப்படியே போகவே அவரின் மனநிலை எனக்கு தெளிவாகவிளங்கியது .என்னடா எதிரில் இரண்டு தமிழர்கள் இருந்தும் பிரபல்யமான தன்னை கண்டு கொள்கிறார்கள் இல்லையே  என்பது தான் அவரின் பிரச்சனை .புகழ்பெற்ற
பலரின் பிரச்சனையும் அதுதான் .மற்றவர்கள் தம்மை கவனிக்கிறார்களா ,அங்கீகாரம் தருகிறார்களா என்பதை கவனிப்பதே அவர்களின் வேலை .இதில் முன்னாள் பிரபலங்கள் என்றால் இந்த பிரச்னையின் வேகம் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் .அறிவிப்பாளருக்கு ஒரு ஹாய் சொன்னதோடு சிரித்தும் வைத்தேன் .அதன் பின்னர் தான் அவரால் இயல்பாய் இருக்க முடிந்தது .

நடிகை பத்மினி ரொறன்ரோவில் வந்த போது நடந்த சம்பவங்களை வைத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் .படிக்காதவர்கள் படித்துப்பாருங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது  கடந்தவாரம் இலங்கையில் நடந்த சம்பவம் .
தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் ஒரு நபர் தனது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி  சண்டை பிடிப்பாராம் .இப்படியான சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் அவர்களின் வளர்ப்பு  நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டிம்  வந்துள்ளதாம்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் இந்த நபர்   மனைவியுடன் சண்டைபிடித்ததுடன் மனைவியை பலமாக தாக்கினாராம் இந்நிலையில்  குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.
படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக தெரிய வருகிறது .

இதனால் ஆகப்பட்டது நண்பர்களே .மனைவியுடன் ண்டைபோடும் அன்பர்களே நாய் மேல் கவனம்.முக்கியமாக கட்டி இருக்கிறதா என சண்டைக்கு முதல் உறுதிப்படுத்திக்கொண்டு சண்டை தொடங்கவும் .இரண்டாவதாக நாய்க்கு மனைவிதான் உணவு வைப்பார்கள் என்றால் இன்னும் கவனம் தேவை நல்ல சங்கிலியால் கட்டவும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துகொள்ளவும்.முக்கியமாக் இப்படியான செய்தியை மனைவியின் கண்களில் படாமல் மறைத்து வைக்கவும் .நல்ல காலம் எங்கட வீட்டில் நாய் இல்லை .ஒரு முறை மகன் கேட்டதுக்கு மனைவி  சொன்ன பதில் ஒன்றை வளக்குறது காணாதோ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


டெல்லியில்  ஒரு அமைச்சரை கைது செய்திருக்கிறார்கள் .போலியாக
 சான்றிதழ் கொடுத்ததுக்காக இங்கு கைது செய்தது  சரிதான் என்றாலும் எனது மனதில் ஒரு கேள்வி இந்தியாவில் அல்லது இலங்கையில் வேலைக்கு விண்ணப்பித்தால்  அடிப்படை தகுதி இருக்கவேண்டும் ,சான்றிதழ் காட்டவேண்டும் .ஆனால் அதே இலங்கை ,இந்தியாவில் ஒரு அரசியல்வாதி பாராளுமன்றம் ,அல்லது சட்டசபை  செல்ல  அல்லது அதற்கும் மேலே ஏதும் பதவி வகிக்க எந்த அடிப்படை தகுதியும் இருக்கவேண்டியதில்லை .(இங்கு கனடாவில்  பட்டதாரியாக இருக்கவேண்டும்) .ஏன் இப்படியான பதவிகளுக்கு வருபவர்களுக்கு (இலங்கை இந்தியாவில் ) அடிப்படை தகுதியை  நிர்ணயம்
செய்யக்கூடாது . எனது கேள்வி என்னவென்றால் அடிப்படை தகுதி தேவை இல்லை என்ற நிலையில் என் டெல்லி அமைச்சர்  போலி சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கொண்டார் ? வெறும் சவுடாலுக்கா ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கீழே இருக்கும் இந்த வீடியோவை பாருங்கள் .ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் படிப்பிக்கும் இந்த நபரை பாருங்கள்  சிரித்துவிட்டு வயிற்று வலிக்கு மாத்திரை அனுப்பவும் என்று எனக்கு பின்னூட்டம் இடக்கூடாது .இப்பவே சொல்லிப்போட்டேன் .இது உண்மையில் சிரிப்புக்கிடமாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அந்த நபரின் முயற்சியை,திறமையை ,துணிவை பாராட்டுகிறேன் .ஆங்கிலம் தெரியாது என தயங்காமல் தெரிந்தவரையில் கதைக்கும் அவரது துணிவுக்கு ஒரு பாராட்டு .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்துரொட்டி பலருக்கும்  ரசிக்கும்படியாக இருக்கிறது என நினைக்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
மேலும் விடையங்களுடன்  சந்திக்கறேன்




Monday, June 08, 2015

கொத்துரொட்டி 005

ன் தொலைகாட்சி  ஊடக வலையமைப்பு பற்றி வரும் செய்திகள் ஒரே ஒரு கருத்தை மட்டுமே எனக்குள் எழுப்புகின்றன .இன்று தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சிதான் அனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மாறன் சகோதரர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடையம்தான் .தங்கள் தொலைக்காட்சியை முன்னேற்றி கொண்டே  மற்றைய  சானல்களை எல்லாம் தலைதூக்க  விடாமல்  பல அடாவடிகளை செய்தார்கள் .

அரசியல் ,அதிகாரம் ,பணபலம் .அடியாட்கள்.குழிபறிப்பு  என வழிகளில் மற்றைய சானல்களை எல்லாம் "தூக்கி அடித்தார்கள் "திமுக பதவியில் இருக்கும் வரை அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பலவருடங்களின் முன்பு ஒரு சனலின் பொங்கல் ஒளிபரப்பினை நிறுத்த தெருவைக்
கிண்டி கேபிள்களை எல்லாம் துண்டித்து தங்கள் பராக்கிரமத்தை காட்டியவர்கள் .சுமங்கலி கேபிள்விசன்  தொடங்கிய கதை ,வளர்ந்த கதை,மற்றைய சானல்களை எல்லாம் ஒதுக்கிய கதை  எல்லாம் பழங் கதை .

ஆசியாவில் இன்று அவர்கள் பெரும் பணக்காரர்கள் .ஆனால் இன்று
அவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.வானொலிகளுக்கு அனுமதி மறுப்பு இப்போது தொலைக்காட்சிக்கும்   வந்து விட்டது .ஏற்கனவே சொத்து முடக்கம் .இனி என்ன நடக்கப்போகிறது  .பணம் பாதாளம் வரை பாயப்போகிறதா ? அல்லது நடுவண் .அரசு  நேர்மையுடன் நடந்து கொள்ளுமா? பொறுத்திருந்து பார்க்கலாம் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இன்றைய தினம் இங்குநான் வசிக்கும்  ரொரன்ரோ மாநகரில் ஒரு இசை வெளியீடு நடைபெறுகிறது .‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’  தமிழகத்தின் கடைக்கோடி கடலோர கிராமங்களில் ஒன்றான இடிந்தகரை. அங்குள்ள பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளின் விளையாட்டுத் திறனையும், அந்த ஐவரில் ஒருவரான கிருஷாந்தி குமாரசாமியின் ஈழத்துப் பின்னணியையும் சுற்றிச் சுழல்கிறது கடல் குதிரைகள்.

 ஈழத்து பெண்ணான  கிருஷாந்தி, இடிந்தகரைக்கு வந்து சேர்ந்த கதையை துயரத்துடன் சித்தரிக்கும் கடல் குதிரைகள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கனடா வருகை தந்துள்ளதாகவும் அறியமுடிகிறது

இசை வெளியீட்டு விழாவில், ‘கூண்டுக்குள்ள விடுதலையை அடைக்க முடியுமா’ பாடலை,சுப்பர் சிங்கர் புகழ்  செல்வி ஜெசிகா ஜுட் நேரடியாகப் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மகி நூடில்ஸ் விவகாரம் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாக  உருவெடுத்து இப்போது ஒரு நிலைக்கு வந்துவிட்டது .இங்கு  இந்திய ,இலங்கை கடைகளில் டொலருக்கு நாலு மகி நூடில்ஸ் என விற்பதை சில காலங்களுக்கு முன்னர் கடைகளுக்கு போனபோது கண்டு இருக்கிறேன்

.இப்போது எப்படியும் கடையில் இருந்து அகற்றி இருப்பார்கள் .அது அல்ல நான் சொல்ல வந்த விடயம் .சாராயம் ,சிகரெட் என்பவற்றில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்  என எழுதி  விற்பது போல மகி நூடில்ஸ் பக்கற்றின் மீதும் இதை சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கலாம் என பொறித்து விற்காமல் விட்டார்களே என எண்ணி சந்தோசம்
அடைகிறேன் .என்ன சொல்கிறீர்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கனடாவை   இன்று ஆளும் அரசாங்கம் ஆனது பாதுகாப்பு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .இதில் ஒரு அங்கமாக இனி நாட்டுக்குள் வருபவர்கள்
விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது  பயணிகள் பயோமற்றிக் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையானது குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது  . இந்த பயோமற்றிக் சோதனை ஒரு உடலியல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கியதாக அமையும். கைரேகை பதிவு, முக அடையாளம், கை வடிவியல், கருவிழி அங்கீகாரம், விழித்திரைக்குரிய ஸ்கான் போன்ற பல இதற்குள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து உள்ளிட்ட 30 நாடுகளின் பயணிகளிற்கு இந்த சோதனை நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எனினும்  மேலதிகமாக 148 நாடுகள் இந்த வரிசையில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோமற்றிக் சோதனை ஒருவர் கனடாவிற்குள் நுழைய முன்னர் செயற்படுத்தப்படும் எனவும் விசாக்களுடன் வரும் வெளிநாட்டு பிரசைகளிற்கு மாத்திரமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வர வேணும் என்றால் முகத்திரையை கழட்டித்தனே  தீரவேண்டும் 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் இந்தியாவுக்கு வந்த நாட்களில் எனக்கு ஆச்சரியம் அளித்த பல விடையங்கள்  இருந்தன .அதில் ஒன்று அப்போதெல்லாம் நான் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்.நான் படித்தது வசித்து எல்லாம் பெரும்பாலும் திருச்சிதான் .காலேஜில் படித்த காலங்களில் எல்லாம் நண்பர்களிடம் படங்கள் பற்றி விமர்சனம் கேட்டல் உடனடியாகவே ஒரு பதில் வரும் பாருங்கள் "ஒரு வாட்டி பார்க்கலாம் " 

அப்போது எல்லாம் நான் எண்ணிக்கொள்வேன் ஒரு படத்தை  ஒரு வாட்டிதானே பார்ப்பது எதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று .பின்னர் தான் எனக்கு விளங்கியது ஒரே படத்தினை பலதடவைகள் பார்க்கும் நபர்களும் இருக்கிறார்கள் என்று .உண்மையில் "அந்த "ஒரு வாட்டி பார்க்கலாம்" என்பதன் அர்த்தம் தான் என்ன ? இன்று ஆளும் வளர்ந்து அறிவும் வளர்ந்துவிட்டது தமிழ் படங்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதாகிவிட்டது என்னைப் பொறுத்தவரையில் .இப்போது எல்லாம் "ஒரு வாட்டி பார்க்கிறமாதிரி படம் எடுக்கிறார்களா என்ன ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவை பற்றிய சர்ச்சை ஓய்வுக்கு வந்தபின்னர் நான் எழுதுகிறேன் .உண்மையில் தப்பும் தவறுமா நாம் எழுதும் பதிவுகளையே !!!!!!! மற்றவர்கள் சுடும்போது எமக்கே கோபம் வரும் போது தான் இசையமைத்த பாடல்களை மற்றவர்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தும் போது படைப்பாளிக்கு வரும் கோபம் தார்மிக அடிப்படையில் நியாயம் ஆனதே .முன்னைய காலங்களில் விபரம் இல்லாமல் தான்   செய்த காப்புரிமை தவறுகளை இப்போது இளையராஜா சீர் செய்வதில் எந்த தவறும் இல்லை .தற்கால இசையமைப்பாளர்கள் புத்திசாலிகள் விபரமாக இருக்கிறார்கள் .சரி வேண்டுமானால் எம் .ஸ் .விசுவநாதனிடம் கேளுங்கள்  இளையராஜாவினைவிட பெரிய ஒரு பெரு மூச்சினை விடுகிறாரா இல்லையா பாருங்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராகுல் காந்தி புதுக்கச்சையோடு பாஜகா எதிராக களத்தில் குதித்திருக்கிறாராம் .உண்மையில் இந்தியாசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பெரும்பாலான காலங்களில் ஆட்சியில் இருந்தது கொங்கிரஸ் கட்சிதானே .இந்தியா இன்று இப்படி இருக்கிறது ,அப்படி இருக்கிறது என்று சொல்லும் ராகுல் காந்தி இந்த நிலைக்கு தனது
கட்சிதான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வாரா ? காந்தி சொன்னபடி கட்சியை கலைத்திருந்தால் இன்று இந்தியா இப்படி இருந்து இருக்குமா ஊழலை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தே உங்கள் கட்சிதானே  அய்யா ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் ஒரு அன்பர் என்னை கேட்டார் கொத்துரொட்டி என்றால் என்ன என்று ஈழத்தில் கொத்துரொட்டி என்பது தமிழகத்தில் கொத்து பரோட்டா .விளக்கம் சரியா 
ஆனால் காரம் மிக அதிகமாக இருக்கும் .சில வருடங்களுக்கு முன்னர் தாம்பரம் பகுதியில் ஒரு கடையில் இலங்கை சுவையில் கிடைத்தது.கடைக்கு வெளியே 
விளம்பரம் இருக்கும் சிலோன் கொத்து பரோட்டா என்று இப்பொது இருக்கிறதா என்று  தெரியவில்லை .திருச்சிக்கு சென்றால் சிறீனிவாச நகர் ,சுந்தர் நகர் பகுதிகளில் ஈழத்தவர்களின் கொத்துரொட்டி கடைகள் இப்போதும் இருக்கின்றன .சாப்பிடலாம் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி  மீண்டும் சந்திப்பேன் .புதுப்பதிவுடன் !