Monday, June 22, 2015

தமிழ்நாட்டின் அதிசய உண்மைகள்:!!


1)  வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2)  ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3)  நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4)  தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5)  முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6)  கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7)  வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8)  கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா   இருந்தாலும் 100 மதிப்பெண்.

9)  பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10)  ஒரு சினிமாவ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதே பாணியில் படம் எடுப்பது.

11)  பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.12)  மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது.

14)  கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15)  அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.

16)  பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17)  நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18)  இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும்பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19)  பரிட்சை எழுதாதவனுக்கு"பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20)  இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21)  Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.22)  இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும், இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23)  கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

24)  இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.

25)  குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு, சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

26) மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.

27)  வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது, தெற்கே படிப்பவனுக்கு ஜான்சிராணி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.

28)  சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும், அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

29)  இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.

30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.

31)  பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.

32)  நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது...

33) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என போஸ்டர் அடிப்பது


34) கண்ட  கண்ட இடங்களில் எல்லாம் கூ ச்சம் இல்லாமல்  ஒண்ணுக்கு
அடிப்பது

35) பல் விழுந்த பாட்டியானாலும் பஸ்ஸில் பக்கத்தில் அமர்ந்தால் கற்பே  பறிபோன மாதிரி கூ ச்சல் போடுவது


36) ஊழலில் ஊறித்திளைத்த  அதிமுகாவையும் ,திமுகாவையும்  இன்னமும்
நம்புவது .


37) எந்த வியாதிஎன்று  டாக்டரிடம் போனாலும்  ஊசி போட்டு அனுப்புவது .


38) வெத்திலையை போட்டுவிட்டு  பஸ்ஸின் ஜன்னல் வழியா துப்புவது


39) வருகின்ற படம் ஒன்னுவிடாம பாத்துட்டு  ஒரு வாட்டி பாக்கலாம்  என
அட்வைஸ் பண்ணுவது


40) காலை முதல் மாலை வரை பிச்சை எடுத்துவிட்டு மாலை ஆனதும் டாஸ்மார்க்கில்  ஏத்திக்கொண்டு தியேட்டர் வாசலில் படம் பார்க்க கியூவில் நிற்பது .


இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.. நான் இதோடு நிறுத்திக்கிறேன்.தேவைபட்டால் இன்னமும் வரும் 

Sunday, June 21, 2015

அப்பா!! எனக்கு இரண்டு டொலர் ($2) தருவீங்களா ?

நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடடுக்கு திரும்பினார்  ஒரு தந்தை வேலைக் களைப்பு மற்றும் குளிர் அவரை சோர்வடைய வைத்திருந்தது .கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த தந்தையை எதிர்கொண்டான் அவரது 12  வயதான மகன் .தந்தை எப்போது வருவார் என்ற தவிப்பும் நீண்ட நேரம் காத்திருந்தகோபமும் அவனது முகத்தில் இருப்பதை தந்தையால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

ஏன் அப்பா இவ்வளவு லேட் ?இன்றைக்கு என்றாலும் கொஞ்சம் வேளைக்கே வேலையால் வீட்டுக்கு வந்திருக்கலாமே என்றான் மகன்

"அலுவலகத்தில் ஒரு அவசரமான மீட்டிங் அதுதான் வர  தாமதம் ஆகி விட்டது" என்று சமாளித்தார் தந்தை.

உடனே மகன் கேட்டான் தந்தையிடம் அது சரி "நீங்கள் மீட்டிங்கில் இருக்கும் நேரத்துக்கும் உங்களுக்கும் சம்பளம் வருமா?" என்று

தந்தை சிறிது விறைத்த முகத்துடன் மகனை நோக்கி சொன்னார்  ஆம் என்றார்

உடனே மகன் கேட்டான் ஒரு மணித்தியாலத்துக்கு உங்கள் சம்பளம் என்ன அப்பா ?

ஏற்கனவே களைப்புடன் வந்த தந்தைக்கு மகனின் இக் கேள்வி கோபத்தை ஏற்படுத்தி விடவே மிகக் கோபத்துடன் சொன்னார் மகனைப் பார்த்து "இது உனக்கு தேவைஇல்லாத விடயம் .வயதுக்கு மீறி கதைக்கக்கூடாது இனி இப்படி என்னிடம் கேள்வி கேட்காதே என்று இரைந்தவர் சரி நேரம் ஆகிவிட்டது .படுக்கைக்கு போ ,நாளை உனக்கு பாடசாலை அல்லவா என்று சொல்லவே முகத்தினை தொங்கப்போட்ட வாறு எழுந்த மகன்  தனது அறைக்குள் புகுந்து கொண்டான் .

தந்தையார்  முகம் எல்லாம் கழுவிவிட்டு சாப்பாடு மேசையில் வந்து அமர்ந்த தந்தைக்கு மகனின் கேள்வியும் தான் சத்தம் போட்டதும் மீண்டும் மனதில் நிழலாடகொஞ்சநேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருந்தவர் .எழும்பி மகனின் அறைக்கு சென்றார் .அங்கே மகன் கட்டிலில்  குப்புற படுத்தபடி அழுதுகொண்டிருப்பதைகண்டவுடன் துணுக்குற்ற தந்தையார் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் மகனின் தலையை கோதிவிட்டவாறு கட்டிலில் அமர்ந்தபடி  சொன்னார்

மகனே நீ என்னுடைய மணித்தியால சம்பளம் பற்றிக்கேட்டவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது ,எனக்கு வேலைக்களைப்பு ,பசி வேறு அதனால் தான் அப்படி நடந்துகொண்டேன் என்றவர்.

அது சரிஎதற்காக அப்படிஎன்னிடம் கேள்வி கேட்டாய்? என்றார்.

எந்த ஒரு பதிலும் சொல்லாத மகன் எழுந்து தன்னுடைய அலுமாரியை திறந்து ஒரு உண்டியலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு "இப்போது சொல்லுங்கள் அப்பா

உங்கள் ஒரு மணித்தியால சம்பளம் என்ன" ? என்று கேட்டான் .

சரி மணித்தியாலத்துக்கு ஒரு இருபது டொலர் என்று வைத்துகொள் என்றார் தந்தை இரக்கத்துடன்

சரி அப்படி என்றால் எனக்கு ஒரு இரண்டு டொலர்கள் தருவீங்களோ அப்பா என்றான் மகன்

கண்டிப்பாக தருகிறேன் ,நீ எதுக்கென்று காரணம் சொன்னால் என்றார் தந்தை

இல்லை அப்பா ,எனது உண்டியலில்  வெறும் பதினெட்டு டொலர்தான்  இருக்கிறது.நீங்கள்  இன்னும் இரண்டு டொலர்கள் எனக்கு தருவீர்கள் அனால் நான்

எல்லாவற்றையும் சேர்த்து இருபது டொலர்களாக உங்களுக்கு தருவேன் என்றான் மகன்

சிரித்துக்கொண்டே தந்தை கேட்டார் "ஏன் எனக்கு நீ இருபது டொலர்கள் தரப்போகிறாய் என்பதை அறிந்துகொள்ளலாமா"?

இல்லை அப்பா. நாளைக்கு ஒரு மணித்தியாலம்  முன்பாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து என்னோடு சேர்ந்து  டின்னர் சாப்பிடவேண்டும்

செய்வீர்களா?அப்பா என்றான்  மகன் .

துணுக்குற்ற தந்தையின் கண்களில் இருந்து நீர் ததும்ப தொடங்கிற்று .தந்தை ஏன் கண்ணீர் விடுகிறார் என புரியாமல் திகைத்த மகனை அணைத்து முத்தமிட்டவாறே  தந்தை நீண்ட நேரம் அந்த கட்டிலில் அமர்ந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார் .


இது ஒரு ஆங்கில கதை நீண்டகாலத்துக்கு முன்னர் படித்தது .தமிழில் சிறிது மெருகூட்டி தந்திருக்கிறேன் .ஜூன் 21 திகதி தந்தையர் தினம் .

நீங்கள் ஒருதந்தையானால் கண்டிப்பாக இந்தக்கதை உங்களை பாதித்திருக்கும் .இந்த கதையை படித்த காலங்களில்  இதன் பாதிப்பு எனக்கு நிறையவே  இருந்தது .விளைவு நான் பிள்ளைகளுடன், மனைவியுடன் செலவளிக்கும்  நேரத்தினை அதிகரித்திருந்தேன் என்னை அறியாமலேயே .

இன்றைய காலங்களில் பெரும்பாலும், தாய் ,தகப்பன் இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலைதான் பெரும்பாலும் உலகெங்கும் .விளைவு பிள்ளைகளுடன்
செலவிடும் நேரம் குறைவடைகிறது .இதனை நிவர்த்திசெய்யஇதனால் ஏற்படும்   ஒரு குற்ற உணர்வுடன் பிள்ளைகள் எது கேட்டாலும் அல்லது கேட்காமலேயே பலதையும் பிள்ளைகளுக்கு  வாங்கிகொடுப்பதுடன் பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக் பணத்தினையும் கொடுத்து பிள்ளைகளை பழுதாக்குகிறார்கள் .நான் எனது பிள்ளைகள் கேட்பதை உடனடியாக வாங்கிக்கொடுப்பதில்லை அவர்களுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்தி ,பொருட்களின் பெறுமதியை உணர்த்தியபின்னரே வாங்கிக்கொடுப்பேன் .நாலு கடைகளுக்கு கூட்டிச்சென்று பொருட்களின் விலை வித்தியாசங்களை உணரச்செய்திருக்கிறேன் .மொத்தத்தில் பணத்தின் பெறுமதியை அவர்களை  உணரச செய்திருக்கிறேன் .என்பதில் பெருமிதம் அடைகிறேன் .

.அந்தந்த வயதில் கேட்டதை எல்லாம் நிறைவேற்றியே வந்திருக்கிறேன் .ஒரு பிள்ளை அந்தந்த பருவங்களில் கேட்பதை வாங்கிக் கொடுப்பதில் தவறில்லை .
அந்தந்த பராயங்களில் விளையாடுவதை அல்லது அனுபவிப்பதை வளர்ந்து பெரியவன் ஆனதும் அதை சொந்தமாக  வாங்க வசதி இருந்தாலும் அனுபவிக்க முடியாது அதை அதை அந்தந்த பராயங்களில் தான் செய்முடியும் .சிறு வயதில் பலூன் கேட்கும் பிள்ளைக்கு அந்த வயதில் தான் பலூன் வாங்கிகொடுக்கவேண்டும் .இருபது வயதில் பலூன்களை வாங்கிக்கொடுத்து விட்டு விளையாடு என்றால் எப்படி இருக்கும் ?

மொத்தத்தில் நான்  என் பிள்ளைகளிடம் கண்டது எத்தனை ஆயிரத்துக்கு பொருட்களை வாங்கிக்கொடுத்தாலும் நாங்கள் பிள்ளைகளுடன் செலவளிக்கும்மணித்துளிகள் தான் பிள்ளைகளை சந்தோசமாக வைத்திருக்கும் இது எனது அனுபவம் .மேலே உள்ள கதை உணர்த்துவதும் அதையே .

நீங்கள் எப்படி? ஒரு  நல்ல ஒரு தந்தையா? அல்லது கதையில் வரும் தந்தையை போன்றவரா ? எப்படி என்று கண்டிப்பாக  உங்களுக்கே தெரிந்திருக்கும் .இந்த கதையில் வரும் தந்தை போல என்றால்  கண்டிப்பாக உங்களை திருத்திக்கொள்ளுங்கள் .

இன்றைய தந்தையர் தினம் ஒரு ஆரம்பமாக  இருக்கட்டும் .நீங்கள் ஒரு நல்ல தந்தை என்றால் கண்டிப்பா நீங்கள் உங்கள் சட்டை கொலரை உயர்த்திவிட்டுக்கொள்ளலாம்.

இறுதியாக :எந்தக் குழந்தையும் நல்ல  குழந்தைதான் மண்ணில் பிறக்கையில் ,அது நல்லவராவதும் தீயராவதும் "தந்தை" வளர்ப்பினிலே

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் '

கரிகாலன் .