Monday, September 07, 2015

கொத்துரொட்டி -- 008

நீண்ட காலங்களுக்கு முன்னர் நான் பின்தொடர்ந்த ஒரு இணைய விவாத
தளத்தில் நடந்த சம்பவம் இது .அந்த தளத்தில் எந்த நாட்டு மாம்பழங்கள்
 சுவையானவை என்பது தொடர்பாக பெரும் விவாதம் தொடர்ந்து வந்தது. ஒரு
தமிழ்நாட்டுக்காரர் வந்து சேலம் மாம்பழத்தின் பெருமைகளை சொன்னார் .

உடனே இன்னொரு தமிழ்நாட்டுக்கரர் வந்து மல்கோவா மாம்பழம் தான் சிறந்தது என மறுத்துரைக்க  இடையே ஒரு யாழ்ப்பாணத்துக்காரர் வந்து  யாழ் கறுத்தக்கொழும்பானுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்ல இன்னொரு

இந்திய பெண்மணி  வந்து அல்போன்சா மாம்பழதுக்கு  நிகர் எதுவுமே இல்லை
 என்று ஒரே போடாக போடா இன்னொரு மெக்சிக்கன் நாட்டு பெண்  வந்து
எனது நாட்டு பழம்தான் சிறந்தது என்று சொல்ல ஒரு ஆபிரிக்கர் வந்து தமது

நாட்டுபழம் தான் சிறப்பானது என்று சொல்ல இப்படியே சில நாட்களுக்கு
விவாதம் களை கட்டியது

இப்படி விவாதம்  தொடர இடையே வந்தார்  ஒரு அமெரிக்கப் பெண்மணி
அவர்  அமெரிக்க மாம்பழம் தான் சிறந்து என்று சொல்லவில்லை .சுருக்கமாக அவர் சொன்னது வேறு .

நீங்கள் மாம்பழங்களை பரிசோதிப்பதற்காக இலங்கை இந்தியா ,மெக்சிக்கோ ,ஆபிரிக்கா எல்லாம் செல்ல தேவையே  இல்லை .உன் பிராவுக்குள் இருக்கும் மல் கோவாவை  எடுத்து லேசாக காட்டிப்பார் ,பாதிப்பேர் சும்மவே  சொக்கிப் போய்விடுவார்கள் அப்போது தெரியும் உண்மை உங்கள் எல்லோருக்கும் என்றார் குறும்பாக

உன்மைதானா  சொல்லுங்கள் நண்பர்களே .


மாம்பழம் சாப்பிடுவது  "அதுக்கு" மிகவும் நல்லது என்று ஆய்வுகள்

சொல்கின்றன . வாலிப வயோதிக அன்பர்கள் சாப்பிட்டு  பயன்பெறுக .நம்பள்கி  உங்கள் ஆலோசனை இந்த விடையத்தில் தேவைப்படுகிறது .


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$நேதாஜியை பற்றிய ஒரு தகவல் அண்மையில் படிக்க கிடைத்து ,உண்மையில் காந்தியை விட நான் மிகவும் மதிக்கும் ஒரு தலைவர்  நேதாஜி . அவரைபற்றிய தகவலை பெருமையுடன் இங்கு பகிர்நதுள்ளேன் .

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு.

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!


அபூர்வமான ஒரு புகைப்படம் .

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும்

இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.

இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.


வந்தாறு மூலையில் இருக்கும் இந்த கிணறு இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்கிறார் பத்மநாதன்
இந்த கல்லும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்று கருதப்படுகிறது$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


நன்றாக படித்த ஒருவன் கிராமத்துக்கு  போனான்

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கொண்டு இருந்தது.

அவனுக்கு ஒரே ஆச்சரியம். பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி

உணவு அருந்திக் கொண்டு  இருந்தார்

விவசாயிடம் படித்தவன் கேட்கிறான்

படிச்சவன் : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?

விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,

படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா..? எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்.

படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : இதுக்குதான் தம்பி., நான் என் மாட்டை கல்லூரிக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரஜனியின் அடுத்த படம்  வரப்போவதாகவும்  இதுதான் அடுத்த படத்தின்
கெட்டப் என்று ஒரு புகைப்படத்தையும்  கண்டத்தின் விளைவு ,நான் கமலின்
ரசிகனுமல்ல ரஜனியின் ரசிகனும் அல்ல .தமிழ் படங்கள் பார்ப்பது மிகவும்

குறைவு . இது  நகைச் சுவைக்காக  மட்டும்.முக நூலில்  கண்டது உங்களுக்காக  தந்திருக்கிறேன் .சரி சரி ரஜினி ரசிகர்களே  உணர்ச்சி வசப்படவேண்டாம்.இதனையும் பாருங்கள் .
 கொத்துரொட்டி  எட்டு உங்களை  மகிழ்வித்து இருக்கும் என நம்புகிறேன் மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .