Friday, February 12, 2016

கறுப்பின மக்களிடம் இனவெறியுடன் நடந்துகொள்ளும் இந்தியர்கள்!

இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times  இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம் , அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே…


ஜேசன்
                            black

மிக அன்பான நாடு என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இத்தனை இனவெறியை நான் இந்தியாவில் எதிர்பார்க்கவில்லை. எங்களை பார்த்தவுடன் கைக்குட்டையினால் முகத்தை மூடி கொள்கிறார்கள். எங்களுக்கு தீராத நோய் இருப்பதை போல, எங்களிடம் துர்வாடை வீசுவதை போல. ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல, ஒன்றுகூடி நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.


ஜேனதன்black01


மெட்ரோ ரயிலில் நாங்கள் அமர்ந்தால், அருகிலிருப்பவர் சட்டென்று வேறு இடத்திற்கு மாறி விடுகிறார். அது மட்டுமல்லாமல், வேறு திசையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முறை சொன்னார் “ஆப்பிரிக்கர் என்று தெரிந்தாலே போதும். அவன் குற்றம் செய்யாவிட்டாலும் கூட அவன் மீதுதான் குற்றம்சாட்டப்படும் என்று. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், என்ன ஏது என்று விசாரிக்காமலே ஏராளமான மக்கள் ஒன்று கூடி தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு மாலில், தன்னை மிகவும் தொந்தரவு செய்த குழந்தையை, என்னை காண்பித்து ஒரு தாய் மிரட்டினார். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
என்ன மாதிரியான வளர்ப்பு இது ? இந்த குழந்தை வளரும்போது எந்த கருப்பு நிற மனிதனுடனும் பழக விரும்பாது இல்லையா ???


ஜோனதன்:black05


எங்களை பார்த்தாலே ஓடுகிறார்கள். நட்பு வேண்டி, நாங்களே வலிய போய் பேசினால் கூட “உங்களிடம் என்னால் நட்பாக முடியாது” என்று சொல்லுகிறார்கள். நாங்கள் ஏதாவது எதிர்செயல் புரிய வேண்டும் என்று தூண்டுகிறார்கள். ஒருவேளை, நாங்கள் எதிர்த்தால், கும்பலாக கூடி அடிக்கிறார்கள்.


நுராblack04


எங்களை முகத்திற்கு நேராக பார்த்து, உரக்க சிரிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்கர்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறார்களா என்ன ???. எங்களை பார்த்தவுடன் “சிகரட், கஞ்சா” இருக்கிறதா என்று கூசாமல் கேட்கிறார்கள்.


ஏனாblack03

பொது இடத்துக்குச் சென்று உணவருந்த முடியவில்லை. மொத்தக் கூட்டமும் எங்களைப் பார்த்து சிரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். its Just Bad

டெமிடோப்black02


ன்னுடைய தோழிகள் சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் சென்ற போது, சில இந்திய ஆண்கள் அவர்களிடம் “ஒரு நாள் இரவுக்கு எவ்வளவு ரூபாய்” என்று கேட்டிருக்கிறார்கள். சிலர் எங்களைப் பார்த்த உடனே , காறித் துப்புவார்கள்.

இந்தியாவில் உங்களை அவமானபடுத்திய நபர்கள் , உங்கள் நாடுகளுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ? என்று, மேலே பேசிய ஆப்பிரிக்க மக்களிடம் பேட்டி எடுத்தவர்கள் கேட்டிருக்கிறார்கள் .

அதற்கு அவர்கள் இப்படி பதில் அளித்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடு அவர்களுக்கு அளித்து கொண்டிருக்கிறது.

நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே.

நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நிறங்களை மறந்து விடுங்கள்.

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று உரைத்த நம் மண்ணிலா இப்படி
வேதனையாக இருக்கிறது நண்பரே

காரிகன் said...

----நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே.
நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நிறங்களை மறந்து விடுங்கள்.----


இவ்வளவுல்லாம் நம்மாளுங்க செய்வாங்களா?

நா.முத்துநிலவன் said...

'நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே'காந்தியின் நாடு இந்தியாவா, ஆப்பிரிக்காவா என்று சந்தேகம் வருகிறது. அல்லது ஆப்பிரிக்காவில் இருந்தபோதுதானே காந்தியின் பெருமை வெளியுலகிற்குத் தெரியவந்தது? அவர்கள் வாழ்க!

Avargal Unmaigal said...


வெள்ளைதோல் கொண்ட அயோக்கியர்கள் நம் நாட்டிற்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து அவர்கள் காலில் விழுபவர்கள் அல்லவா நம் இந்தியர்கள். அதனால் கருப்புதோல் கொண்ட நல்லவர்களை இந்தியர்களுக்கு பிடிக்காது என்பதில் அதிசயமில்லை

iK Way said...

Perception is reality is perception.

புள்ள குட்டிகள படிக்க வைக்கலாம்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

வேகநரி said...

சரியான பதிவு. மதுரை தமிழன் சொன்னது உண்மை.
வெள்ளைதோல் கொண்ட அயோக்கியர்கள் நம் நாட்டிற்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து அவர்கள் காலில் விழுபவர்கள் அல்லவா நம் இந்தியர்கள்.

Anonymous said...

இந்தியர்கள் எல்லா நாடுகளிலும் நிற வெறியோடே இருக்கிறார்கள். உதாரணமாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் தங்களை வெள்ளைக்காரர்களோடுதான் ஐக்கியப்படுத்தி, அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அமெரிக்கக் கறுப்பர்களை "கல்லு (இந்தியில் கறுப்பு)" என்று அழைப்பார்கள். கறுப்பர்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு வாங்க மாட்டார்கள். கறுப்பு இனத்தவரோடு திருமண உறவு கொள்ள மாட்டார்கள். அமெரிக்க வெள்ளையர்களை விட மோசமான இனவாதத்தோடு இருப்பது இந்தியர்கள். வெள்ளைத் தோல், கருப்புத் தோல் வித்தியாசத்தில் ஊறி வளர்ந்ததுதான் இந்திய மனோநிலை. வேதனை. இது மாற வேண்டும்.

காரிகாலன் said...

கருத்துக்கள் உரைத்த கரந்தை ஜெயகுமார் ,காரிகன்,நா.முத்துநிலவன் ,அவர்கள் உண்மைகள் ,
ய்கே வே ,வேகநரி ,பெயரிலி அனைவர்க்கும் எனது நன்றிகள் .உடனடியாக பதில் தர முடியவில்லை .இந்தியா ,இலங்கையில் நிறம் செலுத்தும் செல்வாக்கு மிகவும் பெரியது .வெள்ளையாக இருகிறவன் பொய் சொல்லமாட்டான் ,கறுப்பாக இருப்பவர்களுக்கு ஆங்கிலம்
தெரியாது போன்ற கருது கோள்கள் இந்த கொள்கை ஒட்டி வந்தவைதான் .நிறவெறி எல்லா நாட்டிலும் இலைமறைகாயாக இருப்பது உண்மைதான் .அனால் இப்படி கண்ணெதிரே காட்டுவது
என்பது எந்த வகையில் சேர்க்கலாம் .என்பதுதான் எனக்கு விளங்கவில்லை .

அவர்கள் பேட்டியின் இறுதியில் சொல்லியிருப்பதுதான் மிகப்பெரிய நெத்தியடி .
நிறத்தில் ஒன்றுமே இல்லை என்பதை உணர்வார்களா ?

Alien said...

Sad to hear.