Monday, January 11, 2016

கொத்துரொட்டி --009

கனடாவில் இருக்கும் மக்மாஸ்டர்  பல்கலைக்கழகத்தினை சேர்ந்த இரு மொழியியலாளர்கள் இருவர் ஒரு வித்தியாசமான
ஆய்வு ஒன்றினை மேற்கொண்டனர் .அதாவது ஆங்கிலமொழி பேசும்  மக்களைக் கொண்ட அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் ருவிற்றர் பயன்படுத்தும்போது  என்னமாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என ஒரு ஆய்வினை கடந்த வருடம் பெப்ரவரி தொடக்கி ஒக்ரோபர் வரை மேற்கொண்டதில் அமெரிக்கர்களை விட கனேடியர்கள் ருவிற்றரில் மிகவும் நம்பிக்கை , மிகவும் உற்சாகமான ,மகிழ்சியான எண்ணம் கொண்டவர்களாகவும்  சாதகமான மனநிலை கொண்டவர்களாக காணப்பட்டது  கண்டுபிடிக்கப்பட்டது .

சரி கனேடியர்கள் அதிகம்   “great,” “amazing” மற்றும் “beautiful”  போன்ற சொற்றொடர்களை உபயோகிக்கின்றனரென தெரிய வந்திருக்கிறது மாறாக அமெரிக்கர்கள் “hate,” “hell,” “tired,” “hurt” and “annoying.” போன்ற எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

 அமெரிக்கவும் கனடாவும் அயல்நாடுகள் என்பதோடு இருவரின் கலாச்சார ,பண்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்றாலும் பல வகைகளில் அமெரிக்காவை விட கனடா  வேறுபடுகிறது .கனடாவின் உற்பத்தி பொருட்களின்  எண்பது வீதம் அமெரிக்கா சென்றாலும் கனடா அமெரிக்காவின் சொல்படி ஆடும் ஒரு நாடு அல்ல.

      can2@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@அண்மையில் யூடியுப்பில் உணவு தயாரிப்பது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை தேடும் போது தான் நியூஸ்7 தமிழ்  தொலைக்காட்சியின் "சுற்றலாம் சுவைக்கலாம் " எனும் ஒரு நிகழ்ச்சியை காணமுடிந்தது .தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும் சென்று அந்தந்த ஊர்களுக்கே உரிய சுவையான உணவுகளையும் அந்த உணவுகளை தயாரித்து வழங்கும் உணவகங்களையும் படம்பிடித்து காட்டுவதுடன் அல்லாமல் தயாரிப்பு முறைகள், பேட்டிகள்  என சிறப்பாக செய்கிறார்கள் உண்மையில் ஒரு சிறப்பான ஒரு நிகழ்ச்சி 

.தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று  சென்று நிகழ்சிகளை வழங்கும் அவர்களின் பாங்கு சிறப்பாக இருக்கிறது .அத்தோடு "பேசும் தலைமை " என்று இன்னொரு நிகழ்ச்சி தமிழகத்தின் பிரபலமான பலதுறை சார்ந்தவர்களை பேட்டி காணும் ஒரு நிகழ்ச்சி .மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி பல்துறை. ட்ரம் சிவமணி ,கே .பி .என் அதிபர் அபிராமி ராமநாதன் இப்படி பலரையும் பேசவைக்கும் நிகழ்ச்சி பேட்டி காணும் விதம் அருமை .பேட்டி காணும் தொகுப்பாளர் விஜயனுக்கு பாராட்டுக்கள் அவரின் தமிழுக்கு பாராட்டுக்கள் .விரைவில் முன்னுக்கு வரக்கூடிய ஒரு இளைஞர் விஜயன் என்பது இப்போதே தெரிகிறது அது சரி யாருடைய தொலைகாட்சி நிறுவனம் அது ?@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் படித்து ரசித்த ஒரு  நீதிக்கதை .எமக்கு பலருக்கு பாடமாக இருக்கவேண்டிய ஒரு கதை ,இனி கதையை படியுங்கள் 

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் ” கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள் !!

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@கடந்த வருடம்(2014 )மிக அதிகமாக இணையத்தில் இருந்து சட்ட விரோதமாக ,தரவிறக்கப்பட்ட  ஹொலிவூட் திரைப்படங்கள்  தொடர்பான ஒரு கட்டுரையை  இன்று ரொறன்ரோவில்  வெளிவந்த ஒரு பத்திரிகையில் வந்திருந்தது .உங்களுக்காக அந்த விபரங்களை தருகிறேன் Interstellar திரைப்படம் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது கிறிஸ்ரோபர் நோலன் இயக்கி இரண்டாயிரத்து பதினாலாம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம்  46 மில்லியனுக்கு அதிகமாக சட்டவிரோத தரவிறக்கம் செயயப்பட்டு முதல் இடத்தில இருக்கிறது .இரண்டாவதாக Furious 7 திரைப்படம் 44 மில்லியன் தடவை சட்டவிரோதமாக  தரவிறக்கம் செய்யப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது .மற்றைய திரைப்படங்களின் விபரம் கிழே தந்துள்ளேன்

1) Interstellar  (2014) 46,762,310 

2) Furious 7     (2015) 44,794,877 

3) Avengers: Age of Ultron  (2015)  41,594,159 

4) 3 Jurassic World (2015) 6,881,763 

5) Mad Max: Fury Road (2015)  36,443,244

6) American Sniper (2014) 33,953,737 

7) Fifty Shades of Grey (2015) 32,126,827 

8) The Hobbit: Battle Of The Five Armys (2014)    31,574,872  

9) Terminator: Genisys (2015) 31,001,480 

10) The Secret Service (2014) 30,922,987 

11) Focus              (2015) 26,792,863 

12) San Andreas   (2015) 25,883,469 

13) The Minions   (2015) 23,495,140

14)  Inside Out (    2015) 22,734,070


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@வலைபதிவர் ராஜ நடராஜன் மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன .எனது  பதிவுக்கு வந்து கருத்துக்கள் இட்டிருக்கும்  ஒரு அன்பு உறவு,சக வலைபதிவர்  என்ற வகையில் தான் அவரைத் தெரியும் .இருந்தும் அவரது மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது அன்னாரின் ஆத்மா  சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினர் ஆறுதல் அடையவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


புது வருடம் பிறந்து பத்து நாட்கள் கடந்து விட்டது . இங்கு காலநிலை  பூச்சியத்துக்கு கீழே சென்று விட்டதுடன் பனிப்பொழிவும் தொடங்கிவிட்டது .கொண்டாடங்கள் எல்லாம் ஓய்ந்து  இயல்பான வாழ்க்கைக்கு எல்லோரும் திரும்பி விட்டார்கள் .
தைப்பொங்கல் பண்டிகை வருகிறது .எல்லோரும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள் .பிறந்திருக்கும் இந்த புது ஆண்டு அனைவருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.அத்துடன் புது வருடத்தில் நிறைய சொந்தச்சரக்குகளை எழுத எண்ணி இருக்கிறேன் .பல யோசனைகளை இருக்கின்றன .பார்ப்போம் .கடவுள் அனுக்கிரகம் மட்டும் அல்ல மனைவியின் அனுகிரகமும் வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது அல்ல .
மீண்டும் சந்திக்கின்றேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#####################