இங்கு ரொரண்டோவில் ஒலிபரப்பாகும் தமிழோசை வானொலியினை நான் அடிக்கடி கேட்பதுண்டு.இரவு 12.00 முதல் அதிகாலை 6.00மணிவரை இந்த வானொலி நிகழ்சிகள் இடம்இடம்பெறும். நேற்றைய தினம் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் அறிவிப்பில் 12.00 மணிதொடங்கி 1.00 மணிரையிலான நிகழ்சிகள் இளமைத்துடிப்புடன் களை கட்டியிருந்தன.இரவு 1.00 மணிவரை நல்ல பாடல்கள் பலவற்றை நேயர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.நானும்
உறக்கம் வரும்வரை கேட்டுக்கொண்டிருந்தேன்.
அந்நிகழ்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ராரா பாடலை ஒலிபரப்புமாறு கேட்டபோது அறிவிப்பாளர் கஜன் சொன்னார் இந்த ராராபாடலை தான் தமிழில் தரப்போவதாகவும் நீங்கள் இதுவரையில் கேட்டிருக்கமுடியாது என்று சொல்லி அந்தப்பாடலை ஒலிபரப்பினார்.
நான் சந்திரமுகி படத்தை இதுவரையில் பார்க்கவில்லை.பாடல்கள் தான் கேட்டிருக்கிறேன்.இந்த ராரா பாடல் தெலுங்கில் ஒலிப்பதைத்தான் இதுவரையில் கேட்டிருக்கிறேன். படத்திலும் தெலுங்கில் தான் இடம் பெற்றிருப்பதாக படித்திருக்கிறேன்.நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா? இப்படி வேறு சில பாடல்கள் பின்னாளில் இசைத்தட்டில் சேர்த்திருக்கின்றனர்.எப்படி இருந்தாலும் கர்நாடக இசையில் அமைந்த இந்த பாடல் தெலுங்கில் கேட்டாலும் சரி,தமிழில் கேட்டாலும் சரி இனிமையாகவே இருக்கிறது. மனதை கொள்ளை கொள்கிறது.
10 comments:
//நான் அறிய விரும்புவது இந்த பாடல் படத்தில் தமிழில் உண்டா? அல்லது இப்போது தமிழில் தயாரித்து புதிய இசைத்தட்டில் சேர்த்திருக்கிறார்களா?
//
தமிழ் சந்திரமுகி படத்தில் தெலுங்கில் இருப்பதாகத்தான் கேள்விப்பட்டேன் ஆனால் தெலுங்கு சந்திரமுகியில் இதே பாடல் தமிழில் இருப்பதாக கூறினார்கள் எனவே நீங்கள் தெலுங்கு சந்திரமுகியின் தமிழ் ராராவை கேட்டிருப்பீர், ரசிகர்களே நான் கூறியது சரியா??
தலைவா,
தமிழ் படத்துல தெலுங்கு பாடல் .ஆனால் தெலுங்கு மொழி மாற்ற படத்தில் தமிழ் பாடல் .அதாவது தெலுங்கு 'சந்திரமுகி' யில் சந்திரமுகி தமிழில் பாடுகிறார் ..நீங்கள் கேட்டது தெலுங்கு சந்திரமுகியில் உள்ள தமிழ்ப்பாடல்.
ஆஹா! குழலி ..உம்ம தொல்லை தாங்க முடியல்ல .தூங்காம என்னையா பண்ணுறீர்? (திருப்பி என்ன கேக்காதீரும்)
மிகவும் அவசியமான தேசியப்பிரச்சனை
//மிகவும் அவசியமான தேசியப்பிரச்சனை //
நீங்க மத்திய திட்டக்கமிஷன் தலைவர் வழி தவறி இங்க வந்துட்டிங்களோ?
குழலி மற்றும் ஜோ!
நன்றிகள்
விடயத்தினை அறியத் தந்ததுக்கு.
அண்ணா,
நீங்கள் கேட்ட பாடல் அநேகமாக மணிச்சித்ரதாழ் என்ற மலையாளப் படத்தில் சித்ரா பாடிய பாடலாக இருக்க வேண்டும் என நம்புகிறேன்.
மணிச்சித்ரதாழ் தெலுங்கா என்பது பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது.
கீழே உள்ள சுட்டியை சுட்டுவதன் மூலம் நீங்கள் அந்த பாடலை கேக்கலாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.saniyan.com/songy/Oru%20Murai%20Vanthu.mp3
உங்களுக்கு எல்லாம் வேற வேலையா இல்லையா?
கண்டறியாத பாட்டுக் கேட்டு கொண்டு இருக்கிறியள்.
ஏதாச்சும் உருப்படியான வேலைய பாருங்கப்பா.
ராகுலன்.
ஜோ சார் மத்திய திட்டக்கமிஷன்னா என்ன?
இது தெலுங்கு சந்திரமுகியிலே வர்ற தமிழ்ப்பாட்டு.
எனக்கு இது தோணவே இல்லை நீங்க குறிப்பிடறதுக்கு முன்னாலே!
http://www.musicindiaonline.com/l/27/s/movie_name.7836/
இதுலே கேக்கலாம்.
வித்யாசாகரின் இசையில் இந்த தெலுங்கு 'சந்திரமுகி'யில் வரும் பாடலை பாடியவர் நித்யஸ்ரீமகாதேவன், எழுதியவர் கவிஞர் திலகம் வாலி.
Post a Comment