சில தினங்களுக்கு முன்னர் இந்தப்படம் எனக்கு மெயிலில் கிடைத்தது.உண்மையில் எடுக்கப்பட்ட படம் என்பது பார்த்தவுடன் விளங்கினாலும் யார் எடுத்தது என்பது உடனடியாக புரியவில்லை .இணையத்தினை மேய்ந்ததில் நதி மூலம் கிடைத்தது .
மத்திய புளோரிடாவில் வனப்பகுதியில் ரிச்சார்ட் ஜோனஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சவாரி சென்றதை கண்டு அதிர்வுற்று அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார்.
கடந்த வாரம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது

.
முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி கலக்கி வருகிறது . பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த வாரத்தில் இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்ட் ஜோனஸ் அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறி உள்ளார்.
இது இப்படியே இருக்க இணையத்தில் கிடைத்த இன்னும் சில இதே மாதிரி படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் மனிதனின் படம் மட்டும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறேன் .மற்றவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் மனிதனை அடித்துக்கொள்ள உலகில் ஆளே கிடையாது .அதுவும் தேவைபட்ட இடம் வரை முதுகில் சவாரி செய்துவிட்டு தேவை முடிந்தவுடன் குதித்து ஓடுவது மட்டும் அல்லாமல் சவாரி செய்தவனின் காலை வாருவதிலும் மனிதனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
இன்னும் சில படங்களை கிழே தந்திருக்கிறேன் பார்த்து ரசியுங்கள்
நன்றி ! மீண்டும் சந்திப்போம்.