உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான இலவச டிக்கட் என்று மின் அஞ்சல் வந்தால் திறந்து விடாதீர்கள் அவற்றில் மோசமான வைரஸ் இருக்கின்றன. அடுத்த வருடம் ஜேர்மனியில் நடைபெறஇருக்கும் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள இலவச ரிக்கட் என்று சொல்லி பலருக்கும் இப்படியான மின் அஞ்சல்கள் கிடைத்திருக்கின்றன.
இலவச ரிக்கட் கிடைகிறதே என்று ஆசைப்பட்டு மின் அஞ்சலைத் திறந்தவர்களின் கணினி அதோ கதிதான்.மிக மோசமான வைரஸ் அவர்களின் கொம்பியூட்டரின் சகல தகவல்களையும் அழித்துவிட்டது. பலரும் இப்படி பாதிக்கப்பட்டதினைத் தொடர்ந்து உலக கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் உலக கிண்ண போட்டி அமைப்பாளர்கள் அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றனர்.
இலவச ரிக்கட் தருவதாக சொல்லி Ticket@fifa.de, Gewinm@ fifa.de
போன்ற பெயர்களில் மின் அஞ்சல்கள் வந்தால் திறக்கவேண்டாம் என்று அதில் எச்சரித்துள்ளனர். நீங்களும் இப்படியான இலவச ரிக்கட் தொடர்பான மின் அஞ்சல்களில் அவதானமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்,
Thursday, May 05, 2005
Tuesday, May 03, 2005
யப்பா ஆதிகேசவா! ஏழுமலையானுக்கே"லட்டா"?
தமிழ் நாட்டில் ஒரு தொழில் அதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் பலகோடி ரூபாய் மோசடி காரணமாக.சாதாரணவங்கி ஊழியராக இருந்த இவரின் பின்னணி மிகவும் அதிர்ச்சியூட்டும்படியாகஉள்ளது.இவரைக் கைது செய்த பொலிஸார்இவரிடம் இருந்து மீட்ட வங்கி கணக்கு புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 90.கிரடிட் காட்களின் எண்ணிக்கை 80.நகைகள் மட்டும் 20 கிலோ.

பல தொழில்அதிபர்களை கடன் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றியே பல கோடிகளை சம்பாதித்திருக்கிறார்.நகைக் கடை போல நகைகள் அணிந்தே தோற்றம் அளிப்பாராம்.இதில் என்ன விசேடம் என்றால் திருப்பதிக்கே லட்டு கொடுக்க முனைந்திருக்கிறார்.எப்படி எண்டால் திருப்பதி ஏழுமலையானுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஒரு தங்ககிரீடத்தினை அளித்திருக்கிறார் 3கோடி ரூபாய் பெறுமதியானது என்று இது பத்திரிகைகளிலும் பரபரப்பாக செய்தி வந்திருக்கிறது.பின்னர் திருப்பதிகோயில் அதிகாரிகள் சோதித்த போது அந்த கிரீடத்தின் பெறுமதி 3 இலட்சம் ரூபாதான் வரும் என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.

இப்படிபலரையும் ஏமாற்றிய இவர் கடைசியாக பொலிஸ் கையில் மாட்டியிருப்பது சிலவெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஏமாற்றிய விடையத்தில்.அது என்னவோ சினிமா படங்களில் தான் காண்பிப்பார்கள் எதை எதையோ செய்து திடீர் பணக்காரர் ஆவதை ஆனால் இவரைப் போன்றவர்கள் நிஜத்திலும் செய்து காட்டியிருக்கின்றனர்.இன்றைய உலகில் பணத்தினை சேர்க்க எந்த வழியாக இருந்தாலும்பரவாயில்லை பணம் தான் முக்கியம் என நினைத்து பலர் இப்படிதான்செயற்படுகின்றனர்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இவரிடம் ஏமாந்த படித்தவர்கள்,தொழிலதிபர்கள் போன்றவர்களால் கூட இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையா?அல்லது பொலிஸ் வழமை போல பணத்தினை வாங்கிக் கொண்டு இவருக்கு உடந்தையாக இருந்ததா?
என்னவோ போங்கள்.இந்த வெள்ளைவேட்டி,வெள்ளை சட்டை கழுத்தில் துண்டு,கையில் தங்ககலர் கடிகாரம் கட்டியவர்களைகண்டால் மரியாதை வருவதற்காக பதிலாக மனதில் பயம்தான் வருகிறது.
முன்பு பொது வாழ்க்கையில் இருந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள்பெரிய மனிதர்கள் போன்றோரே இப்படி வெள்ளைவேட்டி ,வெ.சட்டை அணிந்திருந்தனர்.பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தாம், அணிந்திருக்கும் வெள்ளைவேட்டி ,வெ.சட்டை போலவே தூய்மையானவர்கள்,கறைபடியாதவர்கள்,ஒழுக்கமானவர்கள், நடுநிலையானவர்கள் என்பதனை உணர்த்தவே இதனை அணிந்தனர்.ஆனால் இன்று?
நான் நினைக்கிறேன் இன்றைய கால கட்டங்களில் மற்றவர்களுக்கு தாம் சாத்தும்"பட்டை நாமத்தினை"சிம்பாலிக்காக உணர்த்தவே இப்படி அணிகின்றனர் போலும்.!

Subscribe to:
Posts (Atom)