Thursday, August 30, 2012

அப்பாவுக்கு என்ன தெரியும்?---தந்தையைப் பற்றி மகன் சொல்கிறார்!!!

 

சில தினங்களுக்கு முதல் என்றொரு விபரம் ஒன்றை பெறுவதற்காக எனதுபழைய டயரியை புரட்டினேன்.தேடிய விபரம் கிடைத்ததுடன் நான் அதில் எழுதி வைத்திருந்த சில விடயங்களையும் காணமுடிந்தது.டயரி எழுதுவது என்றால் ஒவ்வொரு வருடமும் டயரி வாங்கி ஒவ்வொரு நாளும் எழுதி வந்திருக்கும் ஒரு நல்ல ஒரு மனிதராக என்னை கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல .2000 ம் ஆண்டில் வாங்கிய டயரி. முக்கியமான விடையங்கள் .திகதிகள் , முக்கியமான்வ்ர்களின் பிறந்த நாட்கள் .சில வங்கி விபரங்கள் இவையே அதில் உள்ளவை அத்துடன் நான் ரசித்த சில குறிப்புக்கள்,பெரும்பாலும் பத்திரிகைகளில் வந்தவை .

அப்படியான ஒரு குறிப்புதான் . இப்பொது நான் குறிப்பிடப்போவது .பொதுவாக தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகள்தான் பொதுவாக எல்லோராலும் குறிப்பிடப்படும் .அரிதாகவே தகப்பனுக்கும் மகனுக்குமான உறவுகள்  பேசப்படும்.

அப்படிபட்ட  சிலருக்கு வரும் ஒரு உணர்வே இது படித்து விட்டு சொல்லுங்கள்

 


5 வயது

என் தந்தையால் செய்ய முடியாது ஒன்றும் இல்லை

7 வயது

என் தந்தைக்கு பல விடையங்கள் பற்றி நன்கு தெரியும் 

10 வயது

என் தந்தைக்கு எல்லா விடயங்களைப பற்றியும் தெரியாது 

12 வயது

என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

14 வயது

அவரா!  அவருக்கு காலம் மாறியது எங்கே புரிகிறது?

21 வயது

கிடக்கிறது கிழம்.  அவரிடம் போய் யோசனை கேட்பதா?

30 வயது

எதோ கொஞ்சம் தெரியும் .


40 வயது

அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில்
தப்பில்லை

55 வயது
 
அவரின் யோசனைகளை கேட்டு பின் முடிவு
எடுக்கலாமே .

60 வயது

என் தந்தையர் இது போன்ற விடையங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுப்பார் தெரியுமா?

65 வயது

அவர் இல்லாதது உண்மையிலே பெரிய கஷ்டமாக இருகிறது .அவரின் ஆலோசனையைக் கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம்.

70 வயது

அவருடைய அறிவும் அனுபவமும் எங்கே? நான் எங்கே?

நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கு எனக்கு ஒரு காலத்திலும் வந்ததில்லை .அதற்கு எனது தந்தையின் படிப்பு ,உத்தியோகம் ,வசதி அந்தஸ்து.அனுபவம் ,உலக அறிவு காரணமாக  இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .மேற்படி காரணிகள் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட எண்ணம் எனக்கும்  வந்திருக்குமோ?

கடந்த தந்தையர் தினம் ,இங்குள்ள வானொலி ஒன்றில தந்தையர் தின சிறப்பு நிகழ்வாகக் நேயர்கள் வந்து தமது தந்தை எப்படி தமக்கு ஒரு வழிகாட்டியாகக் இருந்தார் என்று  தமது கருத்துக்களை சொல்லி தந்தைக்காக பாடலகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு நேயர் வந்தார் .அறிப்பாளர் கேட்டார் உங்ககள் தந்தைபற்றி சொல்லுங்கள்  என்று.நேயர் சொன்னார் .எது என்றாலும் போட்டு அடி அடி என்று அடிப்பார் என்றார்.துணுக்குற்ற அறிவிப்பாளர் சொன்னார் குழப்படி என்றால் உங்களை திருத்த தந்தை தண்டித்திருப்பார்.அதற்கு அந்த நேயர் சொன்னார் அபப்டி அல்ல எதுவென்றாலும் போட்டு விளாசு விளாசு என்று விலாசிவிடுவார் என்று .இப்படி ஒரு தந்தையர் தின உரையாடலை எதிபாராத அறிவிப்பாளர் கேட்டார் .சர இப்பொது உங்கள் தந்தை எங்கே என்று?

மிகவும் வெறுப்பான தொனியில் வந்தாது பதில் ,வேறு வழியில்லாமல் இப்பொது வந்து என்னோடுதான் இருக்கிறார்.என்று.

உண்மையில் அறிவிப்பாளர் மட்டும் அல்ல நானும் திடுக்குறேன் அன் நேயர் பதில் கண்டு .அன்று  நித்திரை வரவில்லை ,ஒரு மகன் தனது தந்தையை பற்றி தந்தையர் தினநிகழ்வில் இப்படி கதைப்பாரனால் எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் தந்தைமேல் ,இங்கு யார் மேல் பிழை ,யார் சரி என்றுஎன்னால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.அனால் அன்று இரவு முழுவதும் அர்த்த நேயரின் அந்த வெறுப்பை கக்கும் குரல் என்னை துங்க விடவில்லை என்பதே நிஜம்.

மீண்டும் சந்திப்பேன்.