Saturday, November 11, 2006

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.

கதிரவெளிப் பகுதியிலிருந்து புதன்கிழமை புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை

* கண்காணிப்புக் குழு தெரிவிப்பு

இலங்கை அரசாங்கமும் படைத் தரப்பும் கூறுவதுபோல் கடந்த புதன்கிழமை கதிரவெளிப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் படை முகாம்களை நோக்கித் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியர் கூறுகையில்;

கதிரவெளியில் படையினரின் கடுமையான தாக்குதலுக்கிலக்கான பாடசாலைப் பகுதியில் புலிகளின் முகாம்கள் எதுவுமிருக்கவில்லை.
இதனை அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தியதுடன் அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினரும் புலிகளின் முகாம்கள் எதனையும் காணவுமில்லை.
புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான அறிகுறி எதுவுமில்லை.


பாடசாலையில் இருந்த அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தப் பாடசாலையின் மீதே தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தரப்பாயிருந்தாலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.


http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm

படுகொலை செய்யப்பட்ட தமிழ் M.Pயின் இறுதிப் பேட்டி.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்கள் சிங்களத் தரப்பின் பொய்மைகளுக்கு விளக்கமான சாடல்கள் என ஆணித்தரமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

"மாமனிதர்" ரவிராஜின் இறுதி நேர்காணல்":

ஏ-9 பாதை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இதனிடையே ஒக்ரோபர் 16 ஆம் நாள் வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டும் என்று அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அந்தத் தீர்ப்பில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. எமக்கு அரசியல் பிரச்சனை உள்ளது. வடக்கு -கிழக்கு மக்கள் இணைந்தே வாழ்கின்றனர். வடக்கு கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் அபிலாசையாகும். அந்த மக்களினது அடிப்படை மனித உரிமையும் அதுதான்.
முன்னைய காலத்தில் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் அரசுகள் இருந்தன. எங்கள் மக்களுக்கு இது புதியது அல்ல. வடக்கு - கிழக்கு பிரதேசங்கள் முன்னைய காலத்திலேயே தமிழ் பகுதிகளாக இருக்கின்றன. அதற்காக நாம் இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. வடக்கு கிழக்கு ஒரே அலகாக கருதப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் நிலையில் அதுதான் அடிப்படையானதாக இருக்கும்.

இந்த நாடு பிரிக்கப்படக்கூடாது என்று ஏன் நீங்கள் சொல்லுகிறீர்கள்?

ஏனெனில் இந்த நாடு பிரிக்கப்படாமல் இருக்கும்போது மக்களின் உணர்வுகள் வலுவானதாக இருக்கும் என கருதுகிறீர்கள். அதேபோல் வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கு வலுவானதாக கருதுகின்றனர். தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக அது இருக்கும். இரு மாகாணங்களும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும்.

அதே நேரத்தில் ஒற்றையாட்சி அரசாங்கக் கோட்பாடு என்பது நீண்டகாலமாக ஏற்கப்படாதது. அது பழைய நடைமுறை. அது இன்று செல்லுபடியாகாதது. நாம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தோம். எந்த ஒரு தமிழர் தலைவரும் தனியரசையோ கூட்டரசையோ அப்போது கோரவில்லை. ஆனால் ஏன் தற்போதைய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்?
பொன்னம்பலம் அவர்கள் 50-க்கு 50 விழுக்காடு கோரிக்கையை முன்வைத்தார் எனில் காரணம் உள்ளது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று மொகமெட் அலி ஜின்னா கோரினார். நாமோ 50-க்கு 50 விழுக்காடு மற்றும் கூட்டரசு கோரிக்கையை முன்வைத்து தற்போது தனியரசுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றனர். இருந்தபோதும் அரசியல்வாதிகளாகிய நாங்கள் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்று இப்போதும் நம்புகிறோம். யார் இந்த நிலைக்கு பொறுப்பு? சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டோம்.

சோல்பரி ஆணையத்தின் சரத்துகள் முதலில் நீக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கானது.

சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

அப்படியானால் எம்மை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?

இந்தியா சுதந்திரமடைந்தது 1947. இப்போது 22 மாநிலங்கள் உள்ளன. இருந்தபோதும் ஐக்கிய நாடாகத்தானே இருக்கிறது. ஏனெனில் அங்கே நிர்வாக அமைப்பு அப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
கூட்டரசு முறை என்பது நாட்டை பிளவுபடுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். நாம் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் கொள்ளலாம்.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியரசு அதிகாரங்கள் கோரப்பட்டன. இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களை கேட்டால் நாங்கள் இந்தியர்கள் என்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பட்டினிச்சாவில் உள்ளனர்.

நாம் ஒரே குடும்பத்தவர். ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட அல்லது இளையவர்கள் மீது அனுதாபம் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். ஆனால் ஏ-9 மூடப்பட்டதால் என்ன செய்துள்ளனர்?

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தினால் திறக்க முடியவில்லை என்று கூறப்பட்டால் அந்த மக்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்கிற தோற்றம்தானே வெளிப்படும். நாங்கள் கப்பலில் உணவுப் பொருட்களை தருகிறோம் எனில் எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது?

ஏ-9 பாதை மூடப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் அறவிடுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. என்னே ஒரு பொய்? ஏ-9 பாதை திறப்பு என்பது 2002 ஆம் ஆண்டு நடந்தது. அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தனர்? ஏ-9 திறப்புக்கு முன்னர் அவர்கள் நிதி பெறவில்லையா? அவர்களிடம் போதுமான உணவும் இதர வசதிகளும் இருந்தது இல்லையா? அரசாங்கத்தின் கீழ்த்தரமான பொய் இது.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று தான் திரும்பினேன். மக்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வரி விதிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் 1995 ஆம் ஆண்டு முதல் யாழ். மேயராக இருந்தபோது கப்பல்களில் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம். பெற்றோலின் விலை அப்போது 1இ000 ரூபாயாக இருந்தது. அப்போது வரி யாருக்குப் போனது?

நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ஏழை மக்களுக்கான இலவசமாக பிரதேச செயலகங்களினூடே விநியோகிக்கப்படுகின்ற அரசாங்கம் தருகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரி விதித்தது இல்லை. மேலும் எந்த மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்துகின்றனர்? மகிந்த ராஜபக்சவா? கேகலிய ரம்புக்வெலவா? ஏன் இந்த ரவிராஜ் கூட இல்லை... அவர்கள் பிரதேசத்தில் வாழும் மக்கள்தானே..
ஏ-9 பாதை திறக்கப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரி விதிப்புடன் கூட பெற்றோல் விலையின் விலை 10 ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது.

பூநகரிப் பாதையினூடாக கிளிநொச்சி செல்வது என்பது அதிக தொலைவும் கடினமான சாலையும் கொண்டதாகும். கடலிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில்தான் அந்தப் பாதை உள்ளது. இருந்தபோதும் அந்தப் பாதையை பார்வையிடச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? கண்காணிப்புக் குழுத் தலைவர் மயிரிழையில் உயிர்தப்பி பதுங்கு குழிக்குள் பதுங்க வேண்டியதாயிற்று? பூநகரிப் பாதையினூடாக சென்றால் வரி இருக்காதா?

மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்....

அம்பந்தோட்டைக்குச் செல்லும் பிரதான பாதையை மூடிவிட்டு கொழும்பிலிருந்து கப்பலினூடே பொருட்களை எடுத்துச் செல்லுங்களேன்...

அம்பந்தோட்டையில் பயங்கரவாத பிரச்சனை என்கிறீர்களே... ஏன் எப்போதுமே பயங்கரவாதம் தொடர்பிலான விவகாரத்தையே பேசுகிறீர்கள்?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.1. சரத்தில் தெளிவாக ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை அரசாங்கம் விரும்பவில்லை எனில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று அரசாங்கம் ஏன் சொல்லவில்லை?

யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிந்து போனால் யுத்தம் தொடங்கிவிடும். அப்பகுதி மக்களுக்கு அதனால் எதுவும் இல்லை. ஏ-9 பாதை மூடப்பட்டமையால் அப்பாவி மக்கள் சொல்லமுடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி விலங்குகள் கூட பட்டினியால் சாகின்றன.

அங்கே உள்ள இராணுவ முகாமிலிருந்து கொழும்புக்கு விசா வாங்கி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஏ-9 பாதையை தங்கள் பகுதிகள் புலிகள் மூடியிருப்பதாக சொல்வது என்னே ஒரு முட்டாள்தனம்! ஏன் நான் கிளிநொச்சிக்கும் பளைக்கும் அண்மையில்கூட சென்று வந்தேனே... எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்பியும் வந்திருக்கிறேன்.

யார் தாக்கியது என கேட்கிறீர்கள்?

வெளிப்படையாக....யுத்த காலத்தில் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நான் இருந்தபோது பதில் தாக்குதல் என்ற பெயரில் 50 முதல் 60 எறிகணைகளை இராணுவம் அடிக்கும்... தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒன்றிரண்டு எறிகணைகள் வந்து விழும்.

ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என சர்வதேச பார்வையாளர்கள் தலையீட்டுடன் விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
பொதுமக்களை கப்பலில் ஏற்றிச் சென்றபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக சொல்கிறீர்களே... ஏன் பொதுமக்களை கடலினூடே கப்பலில் அரசாங்கம் அழைத்துச் செல்ல வேண்டும்?

ஒரே கப்பலில் 1000 பேர் பயணித்தனரே..யார் அவர்கள்?

300 பேர்தான் பொதுமக்கள். மற்ற அனைவருமே பாதுகாப்புத் தரப்பினரே. பாதுகாப்புத் தரப்பினர் தங்களது உற்றார் உறவினர்களைப் பார்க்கச் செல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இராணுவத்தினரை கொண்டு செல்வதற்காக மகளையும் ஏற்றிக்கொண்டு அரசாங்கம் சென்றது. ஏ-9 பாதையை திறந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லையே.

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக "ஜயசிக்குறு" நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அரசாங்கம் ஏ-9 பாதையை மூடி வைத்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கான தீர்வு எனில் தனிப்பட்ட நபர்கள் பிரச்சனை உள்ளது... என்னுடைய நண்பர் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜாதிக ஹெல உறுமய ஏன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா என....
பௌத்தர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கின்றனர்.

இருந்தபோதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்த பிக்குகள் யாழ்ப்பாண மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏ-9 பாதையூடாக எடுத்துச் செல்ல எதிர்க்கின்றனர்.

ஏ-9 விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவது என்பது இந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும் என்று விமல் வீரவன்ச கூறுகின்றார்... இறைமையைப் பற்றி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? 1971 ஆம் ஆண்டு ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக யார் ஆயுதம் தூக்கியது? 1988-89 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்ணெணெய் விளக்கைக் கூட அவர்கள் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆகையால் அவர்களால் இன்று எப்படி இறைமையைப் பற்றி பேச முடிகிறது?

இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்திய பஞ்சாயத்து முறை பற்றி பேசப்படுகிறது. இந்தியப் பஞ்சாயத்து முறை என்பது ஒரு கிராம நிர்வாக அமைப்பு. உயர்நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர்... கிராமங்களுக்கு- சுயாட்சி அளிப்பது போன்றதானது. இலங்கையில் அது நடைமுறைப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படவில்லை.

சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம்- இரத்தக் களறியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை. நான் பேச்சுக்களை ஆதரிக்கிறேன். இதை நான் மட்டுமே சொல்லவில்லை. கலிங்கத்துப் போருக்குப் பின்னர் அசோக சக்கரவர்த்தி கூறியதுதான் இதற்கு முதல் உதாரணம்.

பட்டினியால் வாடும் மக்களுக்கு முதலில் உணவுப் பொருட்களை அனுப்பி நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை அளிக்கும் என்றார் ரவிராஜ்.

நன்றி-----புதினம்.

Sunday, November 05, 2006

சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும்.......

ஆடுகள் நனையுதெண்டு சில ஓநாய்கள் கவலைப்படுது.அனால ஓநாயின்
ஆட்டின் மீதான அக்கறை எப்படிப்பட்டது எண்டது எல்லோருக்கும் தெரிந்ததே.இந்த ஓநாய் இதைப்பற்றி என்ன சொல்லுது?

http://www.timesonline.co.uk/article/0,,3-2421834,00.html