Monday, July 10, 2023

மாமனிதன் - வலி சொன்னானா?

 அண்மையில் பார்த்த படம் மாமனிதன் .திரைக்கு வந்து சில நாட்களே  ஆன இந்த படத்தினை வீட்டில்  இருந்தே பார்க்க முடிந்தது .. ஒரு படத்தை இவ்வளவு விரைவாக பார்த்தது இந்த முறைதான் என்று நினைக்கிறேன் .மாரி செல்வராஜின் கடந்த கால படங்களும், வடிவேலுவும் தான் இதற்கு காரணம் ...

மாறே  செல்வராஜின் இந்த படம்  பழைய அவரின் படங்களை போலவே ஒடுக்கப்பட்டவர்களின்   வலிகளை சொல்லும் ஒரு படமாக வந்து இருக்கிறது ...

அவரின் பழைய படங்கள் போலவே குறியீடுகளும் இங்கு உண்டு.. பன்றி வளர்க்கும் ஒரு எம்.எல்.எ  பையனை , பெரும்பாலான  காட்சிகளில் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் ஒரு எம் எல் .ஏ வை பார்ப்பது  என்பது  சராசரி தமிழ் படங்களை  பார்க்கும் யாருக்கும் புதிதாகவே இருக்கும் 


சாதிகளின் பெருமைகளை சொல்லும் பல படங்களை  சத்தமே இல்லாமல் பார்த்து ரசித்த பலரால் ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்லும் இப்படத்தை பார்க்க முடியவில்லை ,ஏற்றுக்கொள்ள முடியவில்லை  என்பது  அங்கங்கே காணும் காட்சி  ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது ..


வடிவேலு முன்னர் பார்த்த பரிணாமம் வேறு இப்படத்தில் அவர் எடுத்து இருக்கும் பரிணாமம் வேறு ,தமிழ் கூறும்   நல்லுலகுக்கு ஒரு குணச்சித்திர நடிகர் கிடைத்து  இருக்கிறார் ..அதை தமிழ் திரை உலகம்  பயன்படுத்துமா?

வடிவேலு ஒரு நல்ல ஒரு நடிகர் , பிறவிக் கலைஞன் .ஆனால்  நல்ல மனிதனா  என்றால் அது வேறு விடயம் .. வடிவேலு மட்டுமல்ல இன்னமும் சிலர்  இப்படி தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள்  இதே தகுதிகளோடு ..


படத்தில் இடம் பெற்ற வசனங்கள் அப்படியே மனதில் தைக்க கூடிய மாதிரி இருந்தன...நடிப்பில் பகத் பாசிலுக்கும் வடிவேலுவுக்கும் தான் போட்டியே .. உதயநிதி வருகிறார் போகிறார் ,கீர்த்தி சுரேசும் ஏனோதானோ என்று வந்து போகிறார் .

இந்த கதையில் உதயநிதியின் இடத்தில்  தனுஷ் நடித்து இருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும் .அவருக்காகவே எழுதியது என்றும் அவர் நடிக்க   மறுத்து  விடடார்  என்றும்  ஒரு தகவல் .