இந்த குஷ்பு மேட்டருக்கு பின்பு பிரபலமாகிவிட்டது செருப்பு,துடைப்ப மேட்டர்.செருப்பை வைத்து தொழில் புரிவோரை அவமானப்படுத்தியது என்று பதிவுகள் வேறு. இதுவும் ஒருசெருப்பை பற்றிய பதிவுதான்.இணையத்தில் கண்ட ஒரு படத்தினைதான் இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள்.பல வரிகளில் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதேபோல இந்த படத்திலுள்ள செருப்பையும் அணிந்திருக்கும் கால்களையும்பார்த்தவுடன் ஒரு இனம்தெரியாத சோகம் எழுகிறது மனதில்.அத்துடன் உடனடியாக இந்த செருப்புக்கும்,கால்களுக்கும்சொந்தக்காரனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.வறுமையும் இயலாமையும் எப்படி மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதனை முகத்தில் அறையும் விதமாய்சொல்கிறார் இப் படப்பிடிப்பாளர்.ஒரு நல்லபுகைப்படபிடிப்பாளனின் வெற்றி இப்படியான விடயங்களில் தான்தங்கி இருக்கிறது. ஹவானாவில் இப்படம்பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.
செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.