பதினாறு வயது பெண்!, பேஸ்புக் அழைப்பு!! கலவரம் !
பேஸ்புக் இன்றைய நாளில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளம்.பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவன் கணக்கிலேயே எடுக்கப்படாத காலம்.பேஸ்புக்கினால் நன்மைகளா தீமைகளா அதிகம் விளைகிறது எண்டு பார்த்தால் நன்மைகளும் சரி தீமைகளும் சரி சரிக்கு சரி சசமாகவே இருக்கிறது.பேஸ்புக் மூலம் பெண்கள் ஏமாற்றம் ,மோசடி ,புரட்டு ,கள்ளக்காதல்,வதந்தி,பணமோசடி இப்படி பல இன்னோரன்ன சம்பவங்கள் ந்டைபெருவதாகவே பல தகவலகள் காண முடிகிறது.அண்மையில் நண்பர் இக்பால் செல்வன் பேஸ்புக்கினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்றைப்பற்றி எழுதியிருந்தார். இது அதற்கு எதிர்மாறானது
சரி நீட்டி முழக்கவில்லை .ஒரு பதினாறு வயது இளம்பெண் தனது . 16வது பிறந்த தினத்துக்கு பேஸ்புக் மூலம் விடுத்த அழைப்பு கலவரத்துக்கு காரணம் ஆகியது.தனது பிறந்த நாளுக்கு பேஸ்புக் முலமாக இப் பெண் அழைப்பினை விடுத்தபோது கிட்டத்தட்ட 240,000 பேருக்கு மேற்பட்டோர் அழைப்பினை பெற்றுக்கொண்டனர். 30000 பேர் பார்ட்டிக்கு வருவதாக உறுதிப்படுத்தினர் நெதர்லாந்தினை சேர்ந்த இப்பெண் இவ் அழைப்பானது தனது “உறவினருக்கும் நண்பர்களுக்கும்” மட்டுமானது என்பதனை கூறிப்பிட மறந்ததால் பிறந்த தினத்தன்று ஹாரேன் என்னும் ஊரில் உள்ள இப்பெண்ணின் விட்டிற்கு முன்னால் கிட்டத்தட்ட5000 பேர் கூடிவிட்டனர் .

தமது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு இந்தளவில் விருந்தினர்கள் வருகையினைக் கண்ட இப் பெண்ணின் பெற்றோர் வெலவெலத்து போய்விட்டனர் .இது மட்டுப்படுத்த வீட்டு விழா என்பதை செவிமடுக்காத பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட கூட்டம் எப்படியும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது என்று களம இறங்க வன்முறை வெடித்தது .பியர் போத்தில்களுடன் காணப்பட்ட இளைஞர் கூட்டத்தினால் கடைகள் சூறையாடப்பட போக்குவரத்து விள் க்குகள் ,மின்விளக்குகள் ,கார் இப்படி பல சேதமாக்கப்பட கலகம் அடக்கும் போலீசார் 500 பேர் வந்துசேர்ந்தனர் .
பின்னர் இளைஞர் கூட்டம் ஆனது போத்தில்கள்,கற்களை கொண்டு போலீசாருடன் மோதலில் ஈடுபடபோலீசார் பல மணிநேரம் போராட ஒருமாதிரி கலவரம் ஓய்ந்தது .ஆறு பேர் காயமடைந்தனர் ,34 பேர் கைது செய்யப்பட்ட்டனர்.
இது கடந்த வாரம் நெதர்லாந்தில் இடம்பெற்ற சம்பவம் ,இவ்வளவுக்கும் அப்பெண செய்த தவறு தனது அழைப்பில் பிரைவேட என் குறிப்பிட மறந்துதான் ,சிறிய ஒரு விடையம் எப்படி கலவரம் ஆக மாறியது பார்த்திரிகளா? “,ஒரு சமுக இணையதளத்தின் சக்தி எந்தளவுக்கு பரந்துவிரிந்துள்ளது பார்த்தீர்களா? அண்மையில் அரபு நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள் எப்படி வேகம் பெற்றன என்பது உங்களுக்கு தெரியும் தானே ?
இன்றைய தினம் பத்திரிகைகளில் வாசித்த செய்தி மனிதனின் இன்றைய தேவைகள் எவை என்பன தொடர்பாக
“காலத்துக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில் சினிமா மீது மக்களுக்கு அதிக மோகம் இருந்தது. இப்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பலருக்கு செக்ஸ், சிகரெட் போன்றவற்றை விட இவையே அதிக ஆசையை தூண்டுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் ஜெர்மனியில் ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 18 முதல் 85 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மது, சிகரெட், செக்ஸ் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களில் படங்களை பார்ப்பது, படிப்பது, கருத்துகளை எழுதுவது ஆகியவற்றை தவிர்க்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர். மது, செக்ஸ் போன்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தங்களின் ஆசையை தூண்டுவது இவை என்று தெரிவித்துள்ளனர்.”
என்னைப் பொறுத்த வரையில் வலைபதிவையும் இவற்றில் சேர்க்கவேண்டும் என்பேன் .நீங்களும் இதை அமோதிப்பிர்கள் என்பேன் அது கூட ஒரு போதைதான் .(நான் சொல்லவில்லை என் மனைவி )
சரி சொல்லவந்த விடையத்துக்கு வருகிறேன் .எதுவாக இருந்தாலும் பொது வெளியில் உங்கள் கருத்துகள்,எண்ணங்கள் ,அழைப்புகள்.பின்னுட்டங்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் பொது அவதானமாக பதிவிடுவீர்கள் என் நம்புகிறேன் ,நீங்களும் ஒரு கலவரத்துக்கு காரணமாக் இருக்கமாட்டிர்கள் என நம்புகிறேன்
எசகு பிசகாக பேஸ்புக்கில் பதிலளித்து மாட்டிகொண்டுள்ள இன்றைய உதாரணம் சோனியாவின் மருமகன் வதேரா. இவரது பேஸ்புக்கில் பக்கத்தில் தன மீதான ஊழலை விமர்சித்து கருத்திட்ட இவர் நாட்டின் ஜனநாயக அமைப்பினை விமர்சித்ததாக எழுந்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தினை முடக்கிவைத்திருக்கிறார்.
இதில் இருந்து தெரியும் சேதி .சனி நாக்கில் துள்ளி விளையாடினாலும் கூட.தேவை சாந்தியும் சமாதானமும் உங்கள் நாக்குக்கு மட்டுமல்ல ,முளைக்கு கூட.