Saturday, June 01, 2019

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவன் .


கனடாவும் நாடுகடத்தப்படும் இந்திய மாணவனும் !!

கனடாவில் கடந்த வாரம் செய்திகளில் அடிபட்ட ஒரு  விடையம் இது .கனடாவுக்கு இந்தியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர் .மாணவர் அனுமதியுடன் வந்தாலும் பலருக்கு இங்கேயே படித்து வேலை எடுத்து இங்கு தங்கி விடவேண்டும் என்பதே  பலருடைய எண்ணமும் கூட .இப்படி மாணவர் விசாவில், கனடாவில் கல்வி கற்க இந்தியாவில் இருந்து வரும் பலர் சாதாரண குடும்பங்களை

சேர்ந்தவர்கள் .தமது சொத்துக்களை விற்று பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர் .சிலர் படித்து இங்கு வேலைகள் எடுத்து இங்கு தங்குகின்றனர் .சிலர் இங்கே உள்ள நடைமுறைகள் ,வாழ்க்கைமுறை ,குளிர் இன்னபிற காரணிகள் பிடிக்காமல் மீண்டும் இந்தியா திரும்புவதும் நடக்கிறது
.
இங்கு பொதுவாக எனது அனுபவத்தில்  இந்தியாவில் இருந்து குஜராத்திகள் ,பஞ்சாபிகள் ,அதிகமாக வந்த நிலையில் தற்போது மலையாளிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து அதிகமானோர்  வருகின்றனர்.

இனி கடந்த வாரம் என்ன நடந்தது என்று பார்ப்போம் .
பஞ்சாபை சேர்த்த ஜோபன் தீப் சிந்து ஒரு மாணவராக கனடாவுக்கு வந்துள்ளார் .கடந்த வாரம் இவர் ஓடடிச்சென்ற பாரவூர்தி நெடுஞ்சாலையில் மறிக்கப்பட்டு சோதனை இடப்பட்ட போது இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் .காரணம் பின்னர் தான் வெளியாயிற்று ..கனடாவை பொருத்தவரை மாணவர்களாக வருபவர்கள் வாரத்துக்கு இருபது மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் .அனால் இந்த அளவை மீறி வேலை செய்ததற்காகவே இந்த மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளார் .

இது தொடர்பான அதிகாரிகள் என்ன சொல்கின்றனர் என்றால் மாணவர்களாக  மாணவர் விசாவில் வருபவர்கள் படிப்பையே முக்கியமாக கருத வேண்டும் .வேலை அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான் என்று .அதற்க்கு அந்த மாணவர் தனது குடும்பத்தினர் தனது கல்விக் கட்டணத்தினை செலுத்த சிரமப்படுவதால் தான் மேலதிக வேலை செய்ததாகவும் சொல்கிறார் .

இங்கு என்ன முக்கிய விடையம் என்றால் இங்குள்ள மாணவர்களுக்கும் ,வெளிநாடுகளில் இருந்து  கல்வி கற்க வருவோருக்கும் இடையில் கல்வி கட்டணங்களில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன .வெளிநாட்டு  மாணவர்களுக்கு கல்வி கட்டணங்கள் பலமடங்கு அதிகம் .
ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்து வரும் மாணவர்கள் பின்பு கல்வி தொடர்பான கட்டணங்கள் செலுத்த சிரமப்படுவதால் இப்படியான
நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .சிலர் களவாக வேலை செய்கிறார்கள் .குறைந்த சம்பளங்களில் பலர் அவர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் .என்னைப் பொறுத்த வரை படிப்பதற்காக சட்டதிடங்களுக்கு உட்பட நடப்பேன் என்று வருபவர்கள் அந்த சட்டதிடங்களுக்கு உட்பட்டு   நடக்கத்தான் வேண்டும்

இந்த இந்திய மாணவரை ஜீன்15 திகதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசு உத்தரவு இட்டு இருக்கிறது .

இதற்கிடையில் அவரை நாடு கடத்தவேண்டாம் என்று நாற்பதாயிரம் பேர் கையெழுத்திட்டு ஒரு மகஜர் அனுப்பிவைத்திருக்கிறார்கள் அரசுக்கு .இனி என்ன  நடக்கப்போகிறது  என்பது வரும் நாட்களில் தெரியும் .Tuesday, April 10, 2018

அண்ணாவின் தந்திரம் ! .... பெரியாரின் கோபம் !.....

திராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப்  பணிசெய்து  கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்கவேண்டும் என ஒரு நாள் அண்ணா தெரிவித்தார்.

“சரி  நாளை ஒரு நல்ல ஆளாக பார்த்து அழைத்து வா!”  என்றார் பெரியார் .மறுநாள் அது போல ஒரு ஆளுடன் போய் நின்றார் அண்ணா .

வெள்ளை அடிக்க வந்தவருக்கு முதலில் கட்டிடத்தை முழுவதும் சுற்றிக்காட்டி விட்டு “என்ன கூலி கேட்கிறாய்?” என்றார் பெரியார் .


வந்தவர் “ஜந்து ரூபா தாருங்கள்” என்றவுடன் கோபமடைந்த பெரியார் “நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார் .


“படிச்சிருந்தா நான் ஏன் இந்த வேலைக்கு வருகிறேன் “படிக்கலிங்க. என்றார் அண்ணா அழைத்து வந்தவர்.


உடனேயே பெரியார் அண்ணாவை சுட்டிக்காட்டி “ இதோ நிற்கிறாரே , இவர் எம்.ஏ படித்தவர்.இவருக்கே மாதச்சம்பளம் ஜந்து ரூபா தான் தருகிறேன் .கூலியை பார்த்துக் கேள் !” என்றவர்  பின்பு “இரண்டு ரூபா தருகிறேன்! “  என்றார் .


“கட்டாதுங்க!” என்று கூறிப்போய் விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர் .


இப்படி அண்ணா அழைத்து வந்த பலராலும் ,கூலி தகராறினால் வெள்ளை அடிக்கமுடியாமல் போகவே பல மாதங்களாக காரியாலயத்துக்கு வெள்ளை அடிக்க முடியாமல் காரியாலயம் மிகவும் அவலட்சணம் அடைந்து வருவது கண்டு யோசித்த அண்ணா ஒரு உபாயம் மேற்கொள்ள தீர்மானித்தார் .


ஒரு தொழிலாளியிடம் போய் “ஜயா ஒரு பெரியவரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் .அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்யுங்கள் . உங்களுக்குரிய மீதிப் பணத்தினை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூறி அவரை அழைத்து வந்தார் .


அவரும் அண்ணா கூறியபடி வந்து காரியாலயத்துக்கு வெள்ளை அடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா இல்லாத உணவு இடைவேளையில் அங்கு வந்த பெரியார் அந்த தொழிலாளியை ஏற இறங்க பார்த்துவிட்டு “ஏம்பா! நீ நன்றாக வெள்ளை அடிப்பாயா?” என்று கேட்டார்.


“ஏன் ஐயா இப்படி கேட்கிறீர்கள்?” என்று திடுக்கிட்டவாறு கேட்டார் வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவர் .


அதற்கு பெரியார்” அதில்லைப்பா; உனக்கு முன்னர் வந்த பலர் இந்த கூலிக்கு முடியாது என போய்விட்டார்கள். நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய் ? அனேகமாக உனக்கு வேலை சரியாக தெரியாது என நினைக்கிறேன்!” என்றார்  பெரியார் .


உடனே தன்மான உணர்வு மேலிட “ நான் ஒன்றும் கற்றுக்குட்டி அல்ல” என்று தொடங்கி அண்ணா அழைத்து வந்த விடயங்களையும் சொல்லி பணத்தினை  வெளியே வாங்கும் படியான ஏற்பாட்டையும் கக்கி விட்டார் .


இதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பெரியார் “ அப்படியா விடயம் ! “ சரி நீ வேலை செய்தது போதும் .பூச்சு மட்டையை கிழே வைத்து விட்டு முழுப்பணத்தையும் அவரிடமே வாங்கிகொண்டு  போ !” என்று அவரை அனுப்பியதும் அல்லாமல் அவருடன் சேர்த்து அண்ணாவையும் வெளியே அனுப்பி விட்டார் .


அதன் பின்பு நீண்டகாலத்தின் பின்னர் தான் அண்ணாவை மன்னித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் பெரியார் .அண்மையில் வாசித்த ஒரு நூலில் ரசித்த பகுதி உங்களுக்காக இங்கு தந்திருக்கிறேன் . நீங்கள்  படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மறு பதிவில் சந்திக்கிறேன் .
நன்றி

Sunday, April 08, 2018

பயனுள்ள தகவல்கள் ……. பகுதி 351. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


கிட்னியைக் கவனியுங்கள்....


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.


பல்லுக்கு உறுதி...!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

முக்கிய குறிப்பு :-

ஆரோக்கியம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முறையையும் பின் பற்ற முன்னர் மருத்துவரிடம் கேட்டுவிட்டே பின்பற்றவேண்டும் .சில உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது கூட சில பக்க விளைவுகளை உண்டாக்கும் .எனவே சொந்த பொறுப்பில் ,அனுபவம் பெற்றவர்களிடம் கேட்டுவிட்டே  செய்து பார்க்கவேண்டும் . இது எனது கருத்து .நன்றி


Tuesday, April 03, 2018

பயனுள்ள தகவல்கள் --- பகுதி 2


இங்கே சில பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறேன் .இதன் முதல் பகுதி  முன்பே எனது வலைதளத்தில் தந்திருந்தேன் ,அதன் தொடர்ச்சியே இது ….


26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து....!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்....!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

படியுங்கள் ,கருத்துக்களை பகிருங்கள் .தொடரும் பதிவில் சந்திப்போம் ,,,

Monday, March 19, 2018

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்–60 நிகழ்வு கனடா

புகழ்பெற்ற ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகில் ஈடுபட்டு அறுபது வருடங்கள் ஆவதை ஒட்டிய ஒரு  பாராட்டு நிகழ்வு இங்கு கனடாவில் ஏற்பாடாகி இருக்கிறது .அதன் அழைப்பே இது .அவருடைய நண்பர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் .நான் கலந்து கொள்ளவே எண்ணியிருக்கிறேன் .கலந்து கொண்டால் விபரங்கள் பின்னர் தருகின்றேன் .Wednesday, December 20, 2017

நோயாளியிடம் மாட்டிய டாக்டர் ----- நகைச்சுவை

உண்மையில்  வாய்விட்டு  சிரிக்கக்கூடிய  நல்லதொரு  நகைச்சுவை  இது . படித்து சிரித்துவிட்டு   உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் .


நோயாளியிடம் மாட்டிய டாக்டர்


Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!


Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி... சாப்ட்டானா?


Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.
இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான்   ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?


lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி...

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?


Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.


Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?


Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?


Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.

Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேளை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....


Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?
சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.


Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காட்டுங்கன்னு சொன்னேன்.புரிஞ்சதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.


Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!

Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.

Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?


Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.

Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!


(நர்ஸ்…..லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு.)


இன்னுமொரு கொசுறு ……


cartoon


வருகின்ற வாரம் கிறிஸ்மஸ் ,புது வருட விடுமுறை  அதில் உங்களை  மீண்டும் புது பதிவுகளுடன் சந்திப்பேன் என்ற  நம்பிக்கையுடன்