Sunday, March 23, 2025

கனடாப் பிரதமரும்! கனடாவின் எதிர்காலமும் !

மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு வசனம் ஒன்று எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிட்டு இருப்பேன் .உண்மையில் அமெரிக் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்கும் வரையில் இங்கே கனடாவில் பெருமளவில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த ஆளுங்கட்சியா வரும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லிக்கொண்டுருந்தன .

மற்றும் பிரதமர் ஸ்ரின் ரூடோவின் மீதான அதிருப்தியும் பெருமளவு காரணமாக இருந்தது .ஆனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதியாக பதவியேற்ற பின்பு இந்த கருத்துக்களை கனேடிய மக்கள் மாற்றிக்கொண்டு விட்டர் . இப்போது தற்காலிக கனேடிய பிரதமராக , முன்னாள் பேங்க் ஆப் கனடா கனடாவின் தலைவராக இருந்த மார்க் கானி பதவியேற்று இரு கின்றார் இவரின் தெரிவு பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது .ட்ரம்பை சமாளிக்க கூடிய திறமை இவரிடம் இருப்பதாகவே பல கனடியர்கள் நம்புகின்றனர் என்பதை வெளிப்படையாக தெரிகின்றது.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மார்க் கானி தனது மந்திரி சபையை அறிவித்துள்ளார் இதில் இரு தமிழர்களும் அமைச்சராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் ஒருவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் .அடுத்தவர் ஹரி ஆனந்த சங்கரி இதில் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ஒரு ஈழத் தமிழர் இலங்கைக்கு வெளியிலே உயர்ந்த பதவியில் இருப்பது சிங்கப்பூருக்கு பிறகு கனடாவில் தான் என்று நினைக்கின்றேன் .

அடுத்தது கடந்த இரண்டு தவணைகளாக பதவி வகித்த விபரல் கட்சி மீது மக்கள் கொண்டீ ருந்த அதிருப்தி .இதில் ஜஸ்டின் ரூடோ கடைபிடித்த ,குறிப்பாக அதிகளவான குடிவரவாளர்களை அனுமதித்தது, அடுத்தது கார்பன் வரி என்று ஒரு வரி கொண்டு வந்தது .இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வரி மார்க் கானியின் கருவில் உதித்து ரூடோவால் நிறைவேற்றப்பட்டது .இதன் மூலம் பெருமளவு பொருட்களின் விலை அதிகரித்தது .அதிக குடியேறிகள் ,அனைத்துலக மாணவர்களால் பெருமளவு பிரச்சனைகள் இங்கு ஏற்பட் .இவை யாவுமே ஜஸ்ட்டின் ரூடோவின் தலையிலேயே வீழ்ந்தன .

அடுத்தது ட்ரம்பை சமாளிப்பதற்கு மக்களின் தெரிவாக மார்க் காணி இருக்கலாம் .இவர் பாங் ஒவ் கனடாவின் தலைவராக இருந்தவர் ,பாங்க் ஒவ் இங்கிலாந்தின் தலைவராகவும் இருந்தவர் ஒரு சிறந்த பொருளியலாளர் இதன் காராணமாகவே லிபரல் கட்சிக்கான ஆதரவு மீண்டும் அதிகரித்து இருக்கிறது .இருந்தாலும் லிபரல் கட்சிக்கு அடுத்ததாக கன்சர்வேட்டிவ் கட்சி தான் இருக்கின்றது . இவரின் தலைவராக பியர் பொலிவியர் இருக்கிறார் . இருவருமே அரசியலுக்கு புதியவர்கள் .

எப்படியும் சில சில வாரங்களில் தேர்தல் ஒன்று நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மக்களைப் பொறுத்தவரையில் பல விடயங்கள் இன்று பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன .அமெரிக்காவை சமாளிப்பது அடுத்து சரிந்து வருகின்ற கனடிய பொருளாதரத்தை தூக்கி நிறுத்தி பழைய நிலைக்கு கொண்டு வருவது , விலைவாசி அதிகரிப்பு ,அதிக குடிவரவாளர்கள் வருகை ,சர்வதேச மாணவர்கள் தொடர்பான பிரச்சனைகள் , வேலை வாய்ப்பு,பணவீக்கம் வீட்டு வாடகை உயர்வுகள் ,வீடற்றோர் பிரச்னைகள் .போதிய வீடுகள் இன்மை போன்ற பல பிரச்சனைகள் சமாளிக்க வேண்டியுள்ளன .

இவற்றை மார்கானியால் திறம்பட திறம்பட சமாளிக்க முடியும் என்று மக்கள் நம்புவதாக தெரிகின்றது பொதுவாக கனடா படித்தவர்கள் நிறைந்த நாடு எனவே பெரும்பாலான மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சிந்திப்பதில்லை . எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்து தான் இங்கே பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன இப்போது ட்ரம்ப் பால் விடப்படுகின்ற பல நெருக்கடிகள் கத்தி போல கனடாவின் தலை மேலே தொங்கிக்கொண்டு கொண்டிருக்கின்றன மார்க் அணியின் முதலாவது விஷயம் கூட அமெரிக்காவை தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல ஒப்பந்தங்களை செய்திருக் கின்றார். அமெரிக்காங்களை உதாசீனம் செய்தாலும் ரோப் பியர்கள்ங்களுக்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவுக்கு சொல்லும் ஒரு உத்தி தான் .இங்கு இன்னொரு விடயம் என்றால் கனடா ஒரு கொமன்வெல்த் நாடு .

எது இருந்தாலும் வெகு விரைவில் நடைபெறும் தேர்தலிலே தெரிவு செய்யப்படுகிறவர் அமெரிக்காவை எதிர்த்து கனடாவை வழிநடத்த வேண்டும் .கனடாவின் 70 வீதமான உற்பத்திகள் அமெரிக்காவுக்கு போகும் நிலையில் வரி விதிப்பு என்பது இரு பகுதியினருக்குலி . கனடாவில் இங்கே பல அங்காடிகளில் இருந்துமெரிக்க பொருட்களை தூக்கி விட் டார்கள்.இருப்பவையும் மக்களால் வாங்கப்படுவதில்லை .மக்கள் கனேடிய தயாரிப்புகளையே பார்த்துப் பார்த்து வாங்குகின்றனர் .வரி விதிப்புக்கள் வரும் நாட்களில் தான் விளைவுகளை உண்டாக்க தொடங்கும் .புதிதாக தெரிவு செய்யப்படும் அரசு என்ன செய்யப்போகிறது இதுதான் மக்கள் முன்னர் உள்ள கேள்வி ?