Monday, June 18, 2007

ஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்!

எனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன்
பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல பெயர்களை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள். பெயர் வைப்பது
தொடர்பாக என்னையும் ஆலோசித்தார்கள்.நான் உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.

அவர்களுக்கு
தேவை நல்ல அழகான தமிழ் பெயர்,அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும்
எழுதும்போது சுருக்கமானதாக அதாவது குறைந்த எழுத்துக்கள் கொண்டதாக
இருக்கவேண்டும்.ஆங்கிலத்தில் உச்சரிக்க இலகுவாய் இருக்கவேண்டும்.
சரி நண்பர்களே எப்படியும் நல்லபெயர்களை உங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இதனை பதிந்துள்ளேன்.
நன்பர்களே உதவி செய்யுங்கள்.

நன்றி.

கரிகாலன்

9 comments:

Anonymous said...

கரிகாலன் நல்ல பெயர் தானே.

அருள் said...

தமிழ்ச்செல்வன்.

இளமாறன்.

இளம்பரிதி.

Anonymous said...

அன்பு கரிகாலன்,
இந்த பதிவில் தமிழ் பெயர் உள்ள சில தளங்கள் உள்ளன;
http://senpost.blogspot.com/2007/11/blog-post_04.html

நன்றி,
செந்தில்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏகன் - eghan(or) egan

Anonymous said...

கவின்.....[அழகு என்று பொருள்]
முகில்[லன்]
நவின்
விமல்

வி.சபேசன் said...

அப்படியே பெயர் எந்த நம்பரில் வரவேண்டும் என்பதையும் விசாரித்துச் சொல்லுங்கள்!

Anonymous said...

Mukil

Ahil

Aadith

Anba

Anbu

Nilan

Valan

குலவுசனப்பிரியன் said...

Adhi - ஆதி
Adison - ஆதீசன் - ஆதி ஈசன் -
Anbu - அன்பு
Cibi - சிபி
Malan - மாலன்
Maran - மாறன்
Mani - மணி
Kani - கனி
Vel - வேல்
Egan - ஏகன் - ஒரே கடவுள் -

மேலும் பல பெயர்கள் இங்கே கிடைக்கலாம்.
http://www.nithiththurai.com/name/male/01.html

Anonymous said...

nice site platform