தலைப்பை பார்த்து கண்ணை கட்டுதே என்று வடிவேல் பாணியில் புலம்புகிறி ரிகளா?தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம் .இதுவும் நடக்கலாம்.நடக்காது என்று யாரவது சொல்லமுடியுமா? எயர் அம்மா சில வேளைகளில் அம்மாவின் பிறந்த தினத்திலிருந்து பறக்க தொடங்கினால் பிளேனின் நிறம் பச்சையாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் அடித்து சொல்லமுடியும்.. விமான பணிபெணகளும் வேறு வழி பச்சைதான் சாரி, பச்சை சாரிதான் அதற்காக பச்சை பச்சையாக வீடியோ எல்லாம் போடுவார்களா என்று கேட்டக் கூடாது ?
சரி விடையம் இதுதான் கேரளா அரசு எயர் -கேரளா என்னும் பெயரில் ஒரு விமான நிறுவனத்தினை அடுத்த ஆண்டு ,மலையாள புதாண்டுடன் தொடங்க இருக்கிறது .வெளிநாடுகளில் நிறைய மலையாளிகள் வசிப்பதால் தமது விமானத்தில் பறந்தால் அரசுக்கு வருமானம் வரும் என்பதனால் இத்திட்டம்.
நல்லதொரு திட்டம் தான் அனால ஒரு சிக்கல் இந்திய சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் விதிப்படி வெளிநாட்டு சேவையில் ஈடுபட என்னும் எந்தவொரு நிறுவனமும் முதல் ஜந்து ஆண்டுகள் உள்ளூர் சேவையில் ஈடுபடவேண்டும் .அதன்பின்னரே வெளிநாட்டு சேவைக்கு அனுமதி.
அதாவது கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் எனும் பழமொழி நினைவுக்கு வருகிறதா? முதல் ஜந்து ஆண்டு உள்ளுரில் கேட்டிககாரதனமாக கோழி மேய்தால் பின்பு வெளியூரில் மேய்க்க அனுமதி .
அனால் கேரளா அரசு ஒரே அடியாக வெளிநாட்டுக்கு சேவைக்கு அடிஎடுக்க் நினைக்கிறது . ஒரு அரசு இயக்குவதால் தமக்கு அனுமதி கிடைக்கும் என் நம்புகிறார்கள்
சரி மலையாள விமான சேவை என்றபடியால் தமிழ்படங்களில் காட்டப்படும் தோற்றத்தில் விமானப் பணிப்பெண்கள் இருந்து சேவையாற்றுவார்கள் என் நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல !!!!!!!
1 comment:
/// நல்லதொரு திட்டம் தான் அனால ஒரு சிக்கல் இந்திய சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் விதிப்படி வெளிநாட்டு சேவையில் ஈடுபட என்னும் எந்தவொரு நிறுவனமும் முதல் ஜந்து ஆண்டுகள் உள்ளூர் சேவையில் ஈடுபடவேண்டும் .அதன்பின்னரே வெளிநாட்டு சேவைக்கு அனுமதி.////
சேட்டன்கள் மேலே உள்ள விதிகளை வளைக்க பார்த்தார்கள் வளையவில்லை அதனாலே இப்போது துபாயில் பதிவு செய்து துபாய் நிறுவனமாக இயக்க முயற்ச்சி நடக்கின்றது. சேட்டன்கள் எதையும் விட்டுக்கொடுத்து வளைந்து நெளிந்து காரியத்தை சாதித்து விடுவார்கள். அது தமிழனாலே நிச்சயமாக முடியாது.
செய்யது
துபாய்
Post a Comment