Friday, April 29, 2005

படுகொலை!

இலங்கையில் கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியருமான தராகி என்று அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்குக் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தகவல்களுக்கு
http://www.sankathi.com/index.php?option=com_content&task=view&id=383&Itemid=41
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14768

Thursday, April 28, 2005

பத்திரிகையாளர் கடத்தல்...

ன்றைய தினம் கொழும்பில் வைத்து பிரபல அரசியல் விமர்சகரும் தமிழ்நெட் இணைய தளத்தின் ஆசிரியரும், தராக்கி எனும் புனைபெயரில் எழுதிவந்தவருமாகிய திரு த.சிவராம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.
பல தடவைகள் இவருக்கு பொலிசாரினாலும் இராணுவத்தினாலும் பல அச்சுறுத்தல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்பட்டிருந்தன.அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் துனிச்சலாக தனது கருத்தினை வெளிப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தலைநகர் கொழுப்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர்
ஆங்கில பத்திரிகையிலேயே சிவராமின் கருத்துக்கள்,விமர்சனங்கள் வெளிவந்தன.இக்கடத்தல் தொடர்பாக சந்தேகம் இலங்கை அரச புலனாய்வு துறை மீதும் பொலிசாரின் மீதும் விழுந்திருக்கிறது.இது தொடர்பாக மேலதிக தகவல்கள் இனி வரும் தினங்களில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tuesday, April 26, 2005

முட்டாள் தினமும் முட்டாள்களும்....

ந்த ஏப்பிரல் மாத முட்டாள்கள் தினம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. சிலர் மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கி இருப்பார்கள். சிலர் முட்டாள்கள் ஆகி இருப்பார்கள்.

நான் இந்த முட்டாள்கள் விளையாட்டில் பங்கு பற்றுவதில்லை எனெனில் நான் புத்திசாலி என நினைத்து விடாதீர்கள் சரியாக சொல்வதானால் நான் மற்றவர்களை முட்டாள் ஆக்கும் போது எனக்கு வரும் சந்தோஷம் நான் மற்றவர்களால் முட்டாள் ஆக்கும் போது எனக்கு வருவதில்லை (நற....நற..). இது போல தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதால் தான்.எது எப்படியோ முட்டாள்கள் தினம் என்றாலே எல்லோருமே எச்சரிக்கையுடன் இருப்பது வழமை.

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இம் முட்டாள்கள் தினத்தில் பல கருத்து கணிப்புக்கள் எடுப்பார்கள். யார் அவ்வருடத்தின் சிறந்த முட்டாள் என்று அவ்வாறு அமெரிக்காவில் இந்த வருடத்துக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 80 சதவீத வாக்குடன் "மிகச் சிறந்த முட்டாள்"ஆக முதலாவது இடத்துக்கு
இந்த வருடமும் ? தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் "குழந்தை மனசு" மைக்கல் ஜாக்சன். அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. இது மூன்றாவது முறை.

6வது இடத்தினை அவரின் தங்கை ஜேனட் ஜாக்சன் பெற (இவர் விருது பெற இவரின் தொலைக்காட்சி மேலாடை அவிழ்ப்பு காரணமாக இருக்கலாம்),
5வது இடத்தினை ஜோர்ஜ் புஷ் பெறுகிறார்.எனக்கு என்னவோ சரியாகத்தான் அமெரிக்க மக்கள் தெரிவு செய்திருக்கின்றனர் என விளங்குது.

இந்த முட்டாள்கள் தினத்தில் ஒருவர் என்னொருவரை முட்டாள் ஆக்கினால் விடயம் இரண்டு பேருக்கு இடையில்தான். ஆனால் சில பத்திரிகைகள்,வானொலிகள் மக்களை முட்டாள் ஆக்க முனைகின்றன.சில உணர்வுபூர்வமான விடயங்களில் சில வேளைகளில் இவை மக்களை முட்டாள் ஆக்க முனைந்தால் பெரும் கலவரமே ஏற்படும் அல்லவா?
அப்படி ஒரு சம்பவம் இம் முட்டாள் தினத்தில்குரோசியாவில் ஏற்பட்டுள்ளது.
ஏப்பிரல் 01ந் திகதி (முன்பு யூகோஸ்லாவியாவில் அங்கம் வகித்த) குரோசியா எனும் நாட்டின் ஒரு இணையத்தள செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட ஆயிரக் கணக்கான மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யதொடங்கி விட்டார்கள்.

குரோசியா முன்பு யூகோஸ்லாவியாவில்அங்கம் வகித்ததாக சொன்னேன் அல்லவா? ரஸ்யாவின் உடைவிற்கு பின்னர் யூகோஸ்லாவியாவும் பல நாடுகளாக உடைந்து போனது.அப்படி உருவான நாடுகளில் ஒன்று தான் குரோசியா.உடைந்தது என்றால் கத்தி இன்றி ரத்தம் இன்றி இல்லை.கொடும் யுத்தத்தின் பின்னர் தான்.

அப்படி நடந்த யுத்தத்தில் குரோசியா சார்பாக போர்குற்றங்கள் புரிந்ததாக அண்ட் கொற்ரோவினா என்னும் ஒரு தளபதி மேல் குற்றம் சாட்டப்பட்டு அவர் ஜரோப்பிய ஒன்றியத்தினால் தேடப்பட்டுவந்தார்.இந்த அண்ட் கொற்ரோவினாவை குரோசியா ஒப்படைக்காவிட்டால் 2006 ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள குரோசியா மீது தடை விதிக்கப்ட்டுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக மேற்படி இணையதளம் செய்தி வெளியிட உடனடியாக அண்ட் கொற்ரோவினாவுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் ஆரம்பமாகி கலவரம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அந்த இணையத்தளம் முட்டாள்கள் தினத்தில் மக்களை முட்டாள் ஆக்கவே அச் செய்தி வெளியிட்டதாக கூறியதுடன் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

நான் முன்னரே கூறியபடி மக்களின் வாழ்வினில் பெரும்
தாக்கத்தினை செய்யும் இப்படியான ஊடகங்கள் மக்களை முட்டாள்கள் ஆக்க முனைவது வரவேற்கத்தக்கது அல்ல.
இது என்ன விடயம்? எங்கள் நாடுகளில் வருடத்தில் 365 நாட்களும் இந்த ஊடகங்கள் மக்களை முட்டாள்கள் என நினைத்தே செய்திகளை தருகின்றனவே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Thursday, April 21, 2005

சொன்னாங்க.. சொன்னாங்க....

இன்று இணையத்தில் உலாவிய போது ஒரு கவிதையினை படிக்க முடிந்தது. தமிழனின் நிலை உணர்ந்து படைக்கப்பட்டஇக் கவிதை, பலரின் கோபத்தினை சம்பாதிக்கலாம் இருந்தும் தமிழர்களின் நிலை உணர்த்த இது ஒரு வழி என்பதால் இங்கு தந்திருக்கிறேன்.

http://www.tamilnatham.com/poems/soosai20050422.htm

Saturday, April 16, 2005

ரொரண்டோவில் இருந்து ஒரு நேரடி ஒளிபரப்பு

இன்று மாலை கனடாவின் ரொரன்ரோ மாநகரில் கனேடிய தமிழோசை வானொலி நடாத்தும் "அன்பின் அலைகள்"நிகழ்ச்சியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன் நிகழ்ச்சியானது ஈழத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டதாயக உறவுகளின் துயர்துடைக்கும் பொருட்டுநிதி சேகரிப்பின் பொருட்டு நடைபெறுகிறது.

ரொரண்டோவின் முன்ணனி இசைக்குழுக்களான வானம்பாடிகள் மற்றும் மெகாடியூனேர்ஸ் இசை வழங்க,இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட்தொகுத்து வழங்க, சிறப்பு விருந்தினராக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் இன் நிகழ்வானது கனேடிய தமிழோசை வானொலியின் இணையத்தளம் மூலமாக உலகெங்கும் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.அன்பர்கள் பார்த்து மகிழ இதோ சுட்டி.
http://www.thamilosai.ca/

Tuesday, April 05, 2005

கனேடிய தொலைக்காட்சிக்கு இலங்கை அரசின் கட்டுப்பாடு.

னடாவில் சனல் 3 இல் இயங்கி வரும் குளோபல் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் இலங்கையில் சுனாமியின் பின்னரான மீளமைப்பு முயற்சிகள் குறித்து விவரணம் ஒன்றினைத்தயாரிப்பதற்காக இலங்கை விஜயம் செய்ய வீசாவுக்கு விண்ணப்பித்தபோது கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவருக்கு வீசா வழங்க கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

அவர் தயாரிக்கும் விவரணத்தினை அவர் இலங்கையினை விட்டு வெளியேறும் முன்னர் இலங்கைரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் ,இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திலும் கொடுத்து அனுமதிபெற வேண்டும் என்பதுடன் விவரணத்தின் இறுதிப் பிரதியினை கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சமர்பித்து அவர்களின் அனுமதியினை பெறவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

சுனாமி தாக்கத்தின் பின்பு கனேடிய ஊடகங்களில் இலங்கை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன் அதைவிட பாதிக்கப் பட்ட தமிழ் பகுதிகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளிவந்து விடலாம் என்பதுமே காரணமாக இருக்கலாம். குளோபல் தொலைகாட்சியின் இச் செய்தியாளர்ஒரு நடுநிலையான பக்கச்சார்பற்ற செய்தியாளர் என்பதினை இதைக் கொண்டே ஊகிக்கலாம்.இலங்கை அரசுக்கு சார்பான செய்திகளை கொடுப்பவராக இருந்தால் இப்படி நிபந்தனைகளுக்கு இடமே இருந்திருக்காது. இலங்கை அரசினை பொறுத்தவரை வெளிநாட்டு பணம் வேணும் ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தேவையில்லை அவை நடுநிலையாக இருக்கும் பட்சத்தில்.

Sunday, March 27, 2005

தமிழீழ தேசத்தின் தேசிய தொலைக்காட்சி

நேற்றைய தினம் தாயகத்தில் இருந்து NTT எனும் பெயரில் கார்த்திகைப் பூவை இலட்சினையாக கொண்டு தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது தனது ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது.தற்போது ஜரோப்பாவில் இருந்து இயங்கிவரும் தமிழ் தொலைக்காட்சி இணையத்தினூடாக(TTN) தனது சேவையை ஆரம்பித்திருக்கிறது.விரைவில் உலகின் பல பாகங்களிலும் ,ஆசியாஉட்பட தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவையினைக் கண்டு களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.