Saturday, August 31, 2013

சர்க்கரை (நீரிழிவு ) நோயாளிகளுக்கு ஏற்ற பழவகைககள் !!!

 

,நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது. பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.

மாதுளை

அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

முலாம்பழம்

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பழம்

இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா(White Jamun)

நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நெல்லிக்காய்

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

ஒவ்வோருவரின் உடல்நிலையை பொறுத்தது அவரவர்கள் பழங்களை சாப்பிடவேண்டும் .எதையும் அளவாக சாப்பிடவேண்டும்

Wednesday, May 22, 2013

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

 

இரா.துரைரத்தினம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் சிங்கள ,முஸ்லிம்களால் தமிழர்கள் பட்ட கொடுமைகளை நேரடியாக பார்த்தவர் .இப்பொது புலம்பெயர்ந்து வாழும் அவரின் . ஒரு கட்டுரையினை இங்குஅவரது இணைய தளமாகிய தினக்கதிரிலிருந்து எடுத்து காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரித்துள்ளேன் .அவருக்கு எனது நன்றிகள்

 

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார் இப்போது உயிருடன் இருக்கிறார்களோ அவர்களை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும். 1990களில் பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பொறுப்பாளராகவும், இத்தாக்குதல்களுக்கு உத்தரவை வழங்கியவருமான கருணா உட்பட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

கிழக்கில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்திய கருணா உட்பட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  ஆனால் தற்போது பிரதியமைச்சராக இருக்கும் கருணா உட்பட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் கோரியதாக தெரியவில்லை.

ஆனால் வடபகுதியிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது பற்றியும் பள்ளிவாசல் படுகொலை பற்றியும் பேசுபவர்கள் கிழக்கில் முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி பேச ஏன் மறுத்து வருகிறார்கள்.  நடுநிலைவாதிகள், என தங்களை சொல்லிக்கொள்பவர்கள் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டது பற்றி பறையடித்து சொல்லி வருகிறார்கள். வருடாவருடம் ஆட்டத்துவசம் செய்வது போல மேடைபோட்டு பேசி வருகிறார்கள்.
ஆனால் 1981ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனசுத்திகரிப்பு பற்றி யாராவது ஒருவராவது பேசியதுண்டா?

முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி அல்லது முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி தமிழர் தரப்பில் உள்ள பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட அதன் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை பற்றி வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல சைவ ஆலயங்கள் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டிருக்கிறது. 40க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் தவறு என்பதை ஒரு முஸ்லீம் தலைவர்களாவது ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? முஸ்லீம் அரசியல் தலைவர்களை விடுவோம், சாதாரண ஒரு முஸ்லீம் நபராவது கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா?

போர் நடத்த காலத்தில் மட்டுமல்ல இன்று கூட கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் கிராமங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீபத்திரகாளி அம்;பாள் ஆலய முகப்பிலிருந்த பிள்ளையார் விக்கிரகம் மீண்டும் முஸ்லீம்களால் கடந்த வாரத்தில் சேதமாக்கப்பட்டிருந்தது. இரு மாதங்களுக்கு முதலும் இந்த விக்கிரகம் தகர்க்கப்பட்டிருந்தது. பின்னர் புனரமைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அது உடைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் கிராமம் ஒன்றிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டிருந்தால் தமிழ் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும். உலகம் முழுவதும் அது பேசப்பட்டிருக்கும். சைவ ஆலய விக்கிரகம் சேதமாக்கப்பட்டதால் முஸ்லீம்கள் மட்டுமல்ல, சுமந்திரன் போன்றவர்களும் வாய் திறக்கவில்லை.

இதேபோன்று கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தோடு இணைந்ததாக செயற்பட்டுவந்த தமிழரின் பிரபல நூலகம் கடந்த வாரம் முஸ்லிம் விரோதிகளாகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை, கல்முனை பகுதியில் சைவ கோவில்களை உடைத்து வந்த முஸ்லீம் தீய சக்திகள் தமிழர்களின் நூலகத்தையும் எரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதேபோன்று வீரமுனை தமிழ் கிராமத்தில் முஸ்லீம்கள் செய்து வரும் சட்டவிரோத செயல்கள் பற்றியும் சுமந்திரன் போன்றவர்கள் வாயே திறக்கவில்லை.

சம்மாந்துறை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை வீரமுனை கிராமத்தின் வீதி ஓரங்களில் கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர். வீரமுனையில் நூறு வீதம் சைவமக்கள் வாழ்கின்றனர். அயல் கிராமமான சம்மாந்துறை போன்ற முஸ்லீம்கள் வாழும் இடங்களிலேயே மாட்டிறைச்சி கடைகளும் மாடு வெட்டுபவர்களும் உள்ளனர். தினமும் வெட்டப்படும் மாடுகளின் தலைகள், தோல், குடல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து வீரமுனை கிராம வீதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.

தினமும் காலையில் எழுந்து பார்த்தால் வீதிகளில் மாட்டு கழிவுகளை தான் காணமுடிகிறது, அதனை நாய்கள் சாப்பிட்டு இழுத்துக்கொண்டு வீடுகளுக்கு வருகின்றன, காகங்கள் குடல்களையும் கழிவுகளையும் கொண்டு வந்து கிணற்றிற்குள்ளும், வீட்டு முற்றத்திலும் போடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வீரமுனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வீரமுனை கோவில் கிணறுகளுக்குள்ளும் காகங்கள் மாட்டு குடல்களை போடுகின்றன என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாடு வெட்டும் முஸ்லீம்கள் திட்டமிட்ட இந்த அராஜகத்தையும் அநாகரிகம் மிக்க செயலையும் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் இதனை செய்து வருகின்றனர் என வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். தமிழர்களை வெட்டி கொலை செய்த கொடுமைகளை செய்த முஸ்லீம்கள் இன்று மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வீரமுனை கிராமத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர்.
முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதற்கோ குரங்குகளை வெட்டி சாப்பிடுவதற்கோ தமிழர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். நீங்கள் மாடுகளையோ குரங்குகளையோ வெட்டி தின்னுவதற்கு முதல் அதன் கழிவுகளை பக்குவமாக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில் புதைத்து விட்டு செல்ல வேண்டும், இதை விடுத்து கழிவுகளை அடுத்த ஊருக்குள் கொண்டு சென்று வீசிவிட்டு வரும் கழிவு வேலைகளை நிறுத்த வேண்டும் என வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை கிராமத்தில் இருந்த தமிழ் மக்கள் மீது 1990ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் சம்மாந்துறையை விட்டு வெளியேறி அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள தமிழ் கிராமங்களில் 23ஆண்டுகளாக அகதிகளாக உள்ளனர்.

சம்மாந்துறையிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தையும் அங்கிருந்து அகற்றுவதற்கு சம்மாந்துறையில் இருக்கும் முஸ்லீம்கள் முயற்சி எடுத்து வருகின்றனர் என்றும் ஆலய விக்கிரகங்களை சேதமாக்கும் நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஆலய பரிபாலசபையினர் தெரிவித்துள்ளனர்.
வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு எந்த ஒரு தமிழனும் தடையாக இருக்க முடியாது.

யாழ்ப்பாணத்திலும் சரி வன்னியிலும் சரி அவர்கள் வாழ்ந்த காணிகளில் அல்லது வீடுகளில் அவர்கள் வாழ்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.
முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழ் கிராமங்களை அபகரிக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.
சாவகச்சேரி வன்னி போன்ற இடங்களில் இருந்த முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்த பின்னர் தங்கள் காணிகளை விற்றிருந்தனர். தங்கள் காணிகளை விற்றுவிட்டு இப்போது புதிய காணி தருமாறு கோருவது எந்த வகையில் நியாயம்?

1977லும் 1981 , 1983 ஆண்டு காலப்பகுதியிலும் தென்னிலங்கையிலிருந்த தமிழ் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விற்றுவிட்டு வெளியேறியிருந்தனர். எனக்கு தெரிந்த தமிழர்கள் பலர் வெள்ளவத்தை பகுதியில் 1983ஆம் ஆண்டுக்கு பின் வீடுகளை சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விற்றுவிட்டு சென்றனர்.

இப்பொழுது நிலமை சீரடைந்து விட்டது என கூறிக்கொண்டு நாங்கள் கொழும்பில் காலம் காலமாக இருந்தோம் எங்களுக்கு அங்கு காணி தாருங்கள் என தமிழர்களால் கேட்க முடியுமா?

தமிழர்களால் தான் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றும் முஸ்லீம்கள் தமிழர்கள் மீது ஒரு துன்பத்தை கூட கொடுக்கவில்லை என்பது போலவே சுமந்திரன் போன்ற தமிழர்களும், முஸ்லீம்களும் கூறிவருகின்றனர்.
நிரபராதிகள் மௌனமானால் குற்றவாளிகள் நீதிபதிகளாகி விடுவார்கள், அது போன்று தான் தமிழர்கள் மௌனமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களால் மீண்டும் தங்கள் இடங்களில் மீண்டும் குடியேற முடியும்.

ஆனால் சம்மாந்துறை, மீனோடைக்கட்டு, ஏறாவூர் என கிழக்கில் 43கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த கிராமங்களுக்கு தமிழ் மக்கள் கால் வைக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். இது பற்றி சுமந்திரனோ அல்லது முஸ்லீம் தலைவர்களோ பேசி இருக்கிறார்களா?

1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பின்னரும் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் தான் முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் கூறிவருகின்றனர்.

உண்மை அதுவல்ல. 1981ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 1986ஆம் ஆண்டில் நடந்த உடும்பன்குளம் படுகொலை தொடக்கம் கிழக்கில் நடந்த படுகொலைகளில் சிறிலங்கா படையினருடன் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இணைந்தே அத்தனை படுகொலைகளையும் செய்திருந்தனர்.

மிகக்கடுமையாக யுத்தம் நடைபெற்ற வன்னி பகுதிகளில் கூட இன்று மீள்குடியேற்றம் செய்யப்படுகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் என அடிக்கடி அங்கு சென்று வருகிறார்கள். அந்த மீள்குடியேற்றம் பற்றி அனைத்துலக சமூகமும் அக்கறை கொண்டிருக்கிறது. ஆயிரம் முஸ்லீம் குடும்பங்கள் சென்ற இடத்தில் இப்போது 10ஆயிரம் முஸ்லீம் குடும்பம் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

ஆனால் 23வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாது, தனது சொந்த வீட்டில் குடியேற முடியாது அகதி வாழ்க்கை வாழும் ஒரு பகுதி மக்கள் இருக்கிறார்கள், அதுவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பிறந்த சொந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் உங்களில் பலருக்கு நம்புவதற்கு கஸ்டமாகத்தான் இருக்கும்.

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம் கிராமங்களை அண்டியிருந்த தமிழ் கிராம மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த ஏறாவூர் 4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி கிராமமக்கள் கடந்த 23 வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாது, தமது சொந்த வீடுகளை முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று ஏக்கத்துடன் பார்த்து தினம் தினம் கண்ணீர் விடும் அவலநிலையை பற்றி ஏறெடுத்து பார்க்க இன்று யாரும் இல்லை.
4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 180 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட காணியை காவல்துறையினர் முட்கம்பி வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த காணியின் ஒரு பகுதியை ( தமிழரின் காணியை) 35 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிய அலிசாகிர் மௌலானா அரபு நாடு ஒன்றின் நிதி உதவியுடன் மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றையும் கட்டி முடித்திருக்கிறார்.
தமிழர்களை மீளக்குடியமர்த்த மறுக்கும் அரசாங்கமும் அரச படைகளும் தமிழர் காணியில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் எப்படி முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்கள். பாதுகாப்பு வலயம் என கூறி தமிழர்களை அந்த இடத்திற்கு செல்லவிடாது தடுத்து வரும் காவல்துறையினர் பள்ளிவாசலை கட்டுவதற்கும் எப்படி அனுமதித்தார்கள்?

இந்த பகுதியில் 4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி பகுதிகளை அண்டிய இடங்களில் இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் தொடர்ந்து தமது சொந்த இடங்களில் வசித்து வருகிறார்கள். ஆனால் தமிழ் மக்களை மட்டும் அங்கு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்காது படையினர் தடுத்து வருவதேன் என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்பொழுது ஏறாவூரில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் சிலர் தமிழ் மக்களின் காணிகளை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர்.
ஏறாவூர் தமிழ் மக்களின் இந்த காணிகள் முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் கொண்டு அபகரிக்கப்பட்டு வருகிறது.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி,நான்காம் குறிச்சி தமிழ் மக்களின் காணிகளை ஏறாவூர் முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் முஸ்லீம் நாடுகளின் நிதியுதவியை பெற்று இடைத்தரகர்கள் ஊடாக மிகப் பெரிய பணத்தொகையினை கொடுத்து நில அபகரித்து வருகின்றனர்.

ஒரு தமிழ் பாடசாலை, மூன்று பழமைவாய்ந்த இந்து ஆலயங்கள் உள்ள இந்த கிராமங்களைச் சுற்றியுள்ள காணிகளை முஸ்லீம்கள் கொள்வனவு செய்து வருவது எதிர்காலத்தில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில கலாசார மத ரீதியான இன முரண்பாடுகளை தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.

முஸ்லீம் பிரதேசங்களில் ஒரு அடி நிலத்தை கூட தமிழர்கள் வாங்கமுடியாது. இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகள் முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகளை முஸ்லீம் அரசியல்வாதிகளின் அடியாட்கள் சிலர் தீக்கிரையாக்கியுள்ளனர்.

கிழக்கில் நடந்த உடும்பன்குள படுகொலை தொடக்கம், கிழக்கு பல்கலைக்கழக படுகொலை,(05.09.1990) சத்துருக்கொண்டான் படுகொலை,(09.09.1990) சம்மாந்துறை படுகொலை,(10.07.1990) சித்தாண்டிப்படுகொலை( 20, 27யூலை 1990) பொத்துவில் படுகொலை,( 30.07.1990) கல்முனை படுகொலை (11.08.1990) துறைநீலாவணை படுகொலை( 12.08.1990) ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை (12.08.1990) கோராவெளி படுகொலை 14.08.1990) ஏறாவூர் படுகொலை (10.10.1990) நற்பிட்டிமுனை படுகொலை (10.09.1990) புல்லுமலை படுகொலை (1986, 1990) வீரமுனை படுகொலை (20.06.1990) என நீண்டு செல்லும் இந்த தமிழின படுகொலைகளில் சிறிலங்கா படைகளுடன் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினரே ஆகும். சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலைகளில் நேரடியாக ஏறாவூர், காத்தான்குடி முஸ்லீம்கள் ஈடுபட்டிருந்தனர்.

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது படுகொலை செய்யப்பட்டது பற்றியும் பேசுபவர்கள் கிழக்கில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தமிழின படுகொலை பற்றியும் பேச வேண்டும். 43க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் தமிழர்கள் பற்றியும் பேச வேண்டும்.

சம்பந்தன், மாவை போன்ற தமிழ் தலைவர்கள் முஸ்லீம் தமிழ் ஒற்றுமை குறித்து அடிக்கடி பேசி வருகின்றனர். வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான். ஆனால் ஒரு கை தட்டினால் சத்தம் வரப்போவதில்லை. இரு கைகளும் தட்டப்பட வேண்டும்.

இரா.துரைரத்தினம்

Monday, May 06, 2013

ஜென் கதை -கோபம்

 

“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது”

ரு ஊரில் ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான் அவனுக்கு  பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும் அவனிடம் கோபம்தான்.

அவன் தாயாரும் மகனின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார் . முடிவு ஒரு விதமான பிரயோசனமும் தரவில்லை.

அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று அந்த சிறுவனின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.

நேராக துறவியிடம் போய் “மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது. அதை நான் எப்படி சரி செய்வது?” என்று கேட்டான்.

“உன்னிடம் ஏதோ மிகவும் வித்தியாசமான ஒன்று இருக்கிறது. அதுதான் கோபம்! எங்கே, அதை சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்றார் துறவி.

`இப்பொழுது என்னால் காட்ட முடியாது.’- இது அச சிறுவன்

`எப்போதுதான் என்னிடம் காட்ட முடியும்’ – இது துறவி.

`அது எதிர்பாராமல் வரும். அப்போதுதான் கோபத்தை அடக்க என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்றான் சிறுவன்

“கோபம் என்பது உண்மையானது, இயல்பானது என்றால் எந்த சமயத்திலும் அதை என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது?” என்று கேட்டார்.

சிறுவன்  குழம்பினான்.

துறவியே விளக்கினார், “கோபம் என்பது ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்திலிருந்து கோபம் உண்டாகிறது” என்று புரியவைத்தார்.

நீதி: பொன், புகழ், செல்வம் என்று ஒவ்வொன்றின் மேல் எதிர்பார்ப்பு வைப்பதால் ஏமாற்றம் உருவாகிறது. ஏமாற்றம் கோபமாகிறது. வெறுங்கையுடன் வந்தோம். வெறுங்கையுடனேயே செல்கிறோம். இடையில் வந்து போகும் செல்வங்களின் மீது எதிர்பார்ப்பு வைக்காமல் வாழ்ந்தால் சலனமில்லாத நிம்மதியான வாழ்வு உருவாகும்.

Saturday, April 20, 2013

நீரிழிவு பற்றிய சில தவறான புரிதல்கள் !

 

லகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்து இருக்கிறேன் . சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!

உண்மை -1

"சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.

உண்மை - 2

"இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.

உண்மை - 3

"நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

உண்மை - 4

"நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

உண்மை - 5

"நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,

உண்மை - 6

"என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.

உண்மை - 7

"குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை - 8

"குழந்தைகளுக்கு டைப்-2  நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.

உண்மை - 9

"கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்.

உண்மை - 10

"நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நன்றி -இணையம்

Thursday, April 18, 2013

அழகாய் இருக்கிறீர்கள் !! பயமாய் இருக்கிறது!!!!!!!!திருவிழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண்கள்

 

அழகாக இருந்ததால் திருவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமீரக ஆண்கள்

வுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவின்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.

ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டதுடன் பல்வேறு பிரதிநிதிகளும் நிறுத்தப்பட்டனர்.

ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் பொலிசார் அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் செய்திகள் அறிய முடிகிறது.பேசாமல் கண்களையும் மறைத்து விடலாமே .

Sunday, April 14, 2013

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே ! ,கனேடியர்கள் வெளியே இந்தியர்கள் உள்ளே !!

 

ன்ன இது தலையங்கம் என் எண்ணுகிறீர்களா ?அண்மையில் உலகில் நடைபெற்ற இரு சம்பவங்களின்,,நிகழ்வுகளின் தலைப்பு தான் இது .இனி விடையத்துக்கு வருகிறேன்.

 

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே!

இது நடைபெற்றது இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் டோக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன .டோக்யார்ட்டில் கப்பல்கள் புதிதாக் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு அந்த இடங்களிற்கு இலங்கை பணியாளர்களை நியமிக்கப் போவதா இலங்கை சொன்னாலும் அந்த இடங்களில் சீனர்கள் வந்து அமர்வார்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகள் .அத்துடன் கொழும்பு துறைமுக விரிவாக்கப் பணிகளில் சீனர்களே ஈடுபடப்போகிறார்கள்.எனவே ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே .

 

கனேடியர்கள் வெளியே ! இந்தியர்கள் உள்ளே!

இது நடைபெறுவது கனடாவில் .இங்கு கனடாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று ரோயல் வங்கி .இங்கு பணியில் இருந்த பல கனேடியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களின் இடத்துக்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களைக் கொண்டு வந்து இருக்கிறது இந்த வங்கி  இந்த விடையமே கடந்த வாரங்களின் சூடான விவாத பொருளாய் இருக்கிறது கனேடிய  ஊடகங்களில் .அதுவும் இவர்களுகான பயிற்சியினை முன்னாள்  ஊழியர்களை கொண்டு செய்ய சொன்னது வேறு பெரும் பிரச்சனையை கிளப்பியது .கனேடிய மக்களின் பணத்தில் இலாபம் கொழிக்கும் இந்த கனேடிய வங்கிக்கு கனேடிய ஊழியர்கள் வேண்டாமா என்ற வகையில் விவாத சென்றது .

பின்பு ரோயல் வங்கி பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து ஒரு அறிக்கை மூலம் விளக்கம் தந்தது இப்படி

45  கனேடிய ஊழியர்களின்  பணியிடங்களை IGATE என்ற இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருப்பதை உறுதி செய்ததுடன்  வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 கனடிய மக்களின் தகவல் தொழில்நுட்பப் பணிகளை இனி குறைந்த அளவிலான தற்காலிக இந்திய பணியாளர்களை கொண்டே செய்து முடித்து விட முடியும் என வங்கி கூறி உள்ளதுடன் .

இந்த நடவடிக்கையினை கனடியர்களின் பணிகளை பிற நாட்டினருக்கு கொடுப்பதாக விமர்சிப்பது பெருந்தவறு எனக் கூறியுள்ள றோயல் வங்கி , ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு மக்களை றோயல் வங்கியின் பணியாளர்களாக மாற்றவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

மேலும் தற்போது வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 பேருமே ஓய்வு பெறும் வயதினர் என்பதையும் , இவர்களில் சிலர் விருப்ப  ஓய்வு பெற சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதையும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் அரசு விதிமுறைப்படியே நடைபெறுவதை உறுதி செய்த பின்னரே மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது அந்த வங்கி. அதாவது பந்தினை தூக்கிப கனேடிய குடிவரவு துறையின் மீதே போட்டுள்ளது வங்கி .இதனால் கனேடிய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது கனேடிய குடிவரவு துறை .

இதற்கு இடையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு மகாநாட்டில் உரையாற்றிய iGATE  ன் தலைவர் ப .முர்த்தி என்பவர் தாங்கள் பல் நாடுகளில் பல சவால்களை சந்தித்தாலும் தாங்கள் தங்கள் தொழிலில் முன்னேறி வருவதாகவும் கனடாவில் 500 வேலை வாய்ப்புக்களை உருவாக்க்ப்போவதாகவும் சொல்லி இருக்கிறார் .

சரி அந்த 500 வேலைகளுக்கும் பணிக்கு அமர்த்த போவது வெளிநாட்டவரையா ?அல்லது கனேடியர்களையா?

அது சரி ஏன் வங்கி இப்படி  செய்யவேண்டும் என்கிறிர்களா?

கனேடியர்களுக்கு கொடுப்பதை விட குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் .தமது கொமிசன் போக மிகுதியைதான் IGATE பணியாளர்களுக்கு கொடுக்கும் அத்துடன் எந்த நேரமும் வேலை இல்லை என்று வீட்டிற்கு அனுப்பலாம் .அத்துடன் பணியாளர்,மருத்துவப காப்புறுதி இன்ன பிற விடையங்கள் தொடர்பாக வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை..இப்பொது புரிகிறதா விடையம் ?

இருந்தாலும் கனேடிய்ர்களால் இலாபம் ஈட்டும் இவ் வங்கி கனேடியர்கள் பணிக்கு தேவை இல்லை என சொல்லுவதாகவே  மக்கள் பலர் கருதுகிறார்கள் .சரி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ?

மீண்டும் வருவேன் ---கரிகாலன்---

Friday, April 12, 2013

மு.க .அழகிரியையும் விட்டுவைக்காத விக்கிலிக்ஸ்!!!!

 

திமுக தலைவர் கருணாநிதியின் மகனான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பற்றியும் அமெரிக்க தூதரக ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.

"தென்னிந்தியாவில் ஓட்டுக்குப் பணம்" என்ற தலைப்பிட்டு 2009 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

சென்னை மற்றும் ஹைதராபாத் நகரின் குடிசை பகுதிகளுக்கு நாங்கள் சென்ற போது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் ஏழை மக்கள் பணத்தை எதிர்பார்ப்பதை அறிய முடிந்தது.

அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுமே தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் என்று சென்னையில் குடிசைப் பகுதிகளில் தொண்டாற்றும் என்.ஜி.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதுவும் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்தான் இந்த பண பட்டுவாடா நடைபெறுகிறது. இது பற்றி எங்களிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கார்த்தி சிதம்பரம் பேசினார்.

 

சிவகங்கை தொகுதியில் அவரது தந்தை போட்டியிடுவதால் அவர்தான் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் இரண்டு விஷயத்தை எங்களிடம் எதிர்பார்ப்பாங்க.. சிலர் உள்ளூர் கோயில்களுக்கு நன்கொடை.. இன்னும் சிலர் சமூக நலக் கூடங்கள் கட்டித் தர கோரிக்கை விடுப்பாங்க.. இப்படி வரும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொடுக்க முடியாது..

இதனால சிலவற்றை கொடுத்து என்னுடைய தந்தைக்கு வாக்களிக்க வைப்போம். ஆனா ஓட்டுக்குப் பணம் கொடுக்கமட்டோம். கிராமங்களில் பணம் கொடுப்பது என்பது சாத்தியமானது அல்ல என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

ஆனால் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரோ, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பணி சிறப்பானதாக இருக்கிறது. கொஞ்சம் பணமும் மக்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார் என்றார். அண்மையில் தென் தமிழ்நாட்டில் மதுரைக்குப் போயிருந்தோம். அங்கு முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடுவது பற்றிதான் எங்கும் பேச்சாக இருந்தது. அவரது அடியாட்கள் பலம் பற்றி பேசுகின்றனர்.

சிறிதுகாலத்துக்கு முன்புதான் 2003 ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் அவர் விடுதலையாகி இருந்தார். 2007ஆம் ஆண்டு அழகிரியின் செல்வாக்கு பற்றி கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

அதில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்து எரித்ததில் மூன்று பேர் இறந்து போயிருந்தனர்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அழகிரி வாக்காளர்கலுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். மதுரையின் முன்னாள்மேயரும் அழகிரியின் நம்பிக்கைக்குரியவருமான எம். பட்டுராஜன் என்பவர் எங்களிடம்.

இதுல ஒன்னும் ரகசியம் எதுவும் இல்லை. ஒரு ஓட்டுக்கு திருமங்கலத்தில் ரூ5 ஆயிரம் கொடுத்தோம் என்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். கண்ணன் என்பவர் இ ஒரு ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுத்ததால் திருமங்கலத்தில் எல்லாமே மாறிப்போனது என்றார். மதுரையின் தி ஹிந்து ஆசிரியராக இருக்கும் எஸ். அண்ணாமலையும் ஓட்டுக்கு ரூ5 ஆயிரம் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார்.

அத்துடன் தி ஹிந்து பத்திரிகையில் பணியாற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுமே பணம் வாங்கியிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். திருமங்கலத்தில் செய்தததைப் போலவே பார்லிமென்ட் தேர்தலிலும் செய்யப்பட்டது. துக்ளக் வார இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்இ மதுரை லோக்சபா தொகுதியில் பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்கிறார்.

மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ1000 ஆயிரம் கொடுக்கவே அழகிரி விரும்பினார் என்கிறார் துக்ளக் பத்திரிகையாளர். ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த பத்திரிகையாளரை சந்தித்த போது மதுரையில் ஒரு ஓட்டுக்கு ரூ500 கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஓட்டுக்குப் பணம் பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கோடீஸ்வரரான அனில் அம்பானியே தேர்தலில் நின்றாலும் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும் என்கிறார் என்று அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஏராளமானோரிடம் அமெரிக்க அதிகாரிகள் பேசி அவர்களது கருத்தையும் மேற்கோள் காட்டி அறிக்கையைத் தயாரித்திருக்கின்றனர் என விக்கிலீக்ஸ் தகவல் குறிப்பிடுகின்றது.

நன்றி -----தமிழ்வின்