Sunday, April 14, 2013

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே ! ,கனேடியர்கள் வெளியே இந்தியர்கள் உள்ளே !!

 

ன்ன இது தலையங்கம் என் எண்ணுகிறீர்களா ?அண்மையில் உலகில் நடைபெற்ற இரு சம்பவங்களின்,,நிகழ்வுகளின் தலைப்பு தான் இது .இனி விடையத்துக்கு வருகிறேன்.

 

இந்தியர்கள் வெளியே ! சீனர்கள் உள்ளே!

இது நடைபெற்றது இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் டோக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன .டோக்யார்ட்டில் கப்பல்கள் புதிதாக் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு அந்த இடங்களிற்கு இலங்கை பணியாளர்களை நியமிக்கப் போவதா இலங்கை சொன்னாலும் அந்த இடங்களில் சீனர்கள் வந்து அமர்வார்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகள் .அத்துடன் கொழும்பு துறைமுக விரிவாக்கப் பணிகளில் சீனர்களே ஈடுபடப்போகிறார்கள்.எனவே ஒன்றும் ஒன்றும் இரண்டு தானே .

 

கனேடியர்கள் வெளியே ! இந்தியர்கள் உள்ளே!

இது நடைபெறுவது கனடாவில் .இங்கு கனடாவில் உள்ள பிரபல வங்கிகளில் ஒன்று ரோயல் வங்கி .இங்கு பணியில் இருந்த பல கனேடியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களின் இடத்துக்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களைக் கொண்டு வந்து இருக்கிறது இந்த வங்கி  இந்த விடையமே கடந்த வாரங்களின் சூடான விவாத பொருளாய் இருக்கிறது கனேடிய  ஊடகங்களில் .அதுவும் இவர்களுகான பயிற்சியினை முன்னாள்  ஊழியர்களை கொண்டு செய்ய சொன்னது வேறு பெரும் பிரச்சனையை கிளப்பியது .கனேடிய மக்களின் பணத்தில் இலாபம் கொழிக்கும் இந்த கனேடிய வங்கிக்கு கனேடிய ஊழியர்கள் வேண்டாமா என்ற வகையில் விவாத சென்றது .

பின்பு ரோயல் வங்கி பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து ஒரு அறிக்கை மூலம் விளக்கம் தந்தது இப்படி

45  கனேடிய ஊழியர்களின்  பணியிடங்களை IGATE என்ற இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருப்பதை உறுதி செய்ததுடன்  வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 கனடிய மக்களின் தகவல் தொழில்நுட்பப் பணிகளை இனி குறைந்த அளவிலான தற்காலிக இந்திய பணியாளர்களை கொண்டே செய்து முடித்து விட முடியும் என வங்கி கூறி உள்ளதுடன் .

இந்த நடவடிக்கையினை கனடியர்களின் பணிகளை பிற நாட்டினருக்கு கொடுப்பதாக விமர்சிப்பது பெருந்தவறு எனக் கூறியுள்ள றோயல் வங்கி , ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு மக்களை றோயல் வங்கியின் பணியாளர்களாக மாற்றவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 

மேலும் தற்போது வேலை நீக்கம் செய்யப்படவுள்ள 45 பேருமே ஓய்வு பெறும் வயதினர் என்பதையும் , இவர்களில் சிலர் விருப்ப  ஓய்வு பெற சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதையும் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் அரசு விதிமுறைப்படியே நடைபெறுவதை உறுதி செய்த பின்னரே மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது அந்த வங்கி. அதாவது பந்தினை தூக்கிப கனேடிய குடிவரவு துறையின் மீதே போட்டுள்ளது வங்கி .இதனால் கனேடிய மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளது கனேடிய குடிவரவு துறை .

இதற்கு இடையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு மகாநாட்டில் உரையாற்றிய iGATE  ன் தலைவர் ப .முர்த்தி என்பவர் தாங்கள் பல் நாடுகளில் பல சவால்களை சந்தித்தாலும் தாங்கள் தங்கள் தொழிலில் முன்னேறி வருவதாகவும் கனடாவில் 500 வேலை வாய்ப்புக்களை உருவாக்க்ப்போவதாகவும் சொல்லி இருக்கிறார் .

சரி அந்த 500 வேலைகளுக்கும் பணிக்கு அமர்த்த போவது வெளிநாட்டவரையா ?அல்லது கனேடியர்களையா?

அது சரி ஏன் வங்கி இப்படி  செய்யவேண்டும் என்கிறிர்களா?

கனேடியர்களுக்கு கொடுப்பதை விட குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும் .தமது கொமிசன் போக மிகுதியைதான் IGATE பணியாளர்களுக்கு கொடுக்கும் அத்துடன் எந்த நேரமும் வேலை இல்லை என்று வீட்டிற்கு அனுப்பலாம் .அத்துடன் பணியாளர்,மருத்துவப காப்புறுதி இன்ன பிற விடையங்கள் தொடர்பாக வங்கிக்கு எந்த பொறுப்பும் இல்லை..இப்பொது புரிகிறதா விடையம் ?

இருந்தாலும் கனேடிய்ர்களால் இலாபம் ஈட்டும் இவ் வங்கி கனேடியர்கள் பணிக்கு தேவை இல்லை என சொல்லுவதாகவே  மக்கள் பலர் கருதுகிறார்கள் .சரி பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ?

மீண்டும் வருவேன் ---கரிகாலன்---

No comments: