இன்னும் சரியா இரு மாதங்களில் அதாவது டிசெம்பர் மாதம் 31 திகதி இரவு மணி 11.59. க்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிக்கப்போகும் ஒரு பாடல் .கடந்த இருபது வருடங்களாக ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின் தமிழ் தேசிய கீதம் .ஆம் சகலகலாவலவனின்” இளமை இதோ இதோ”.இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள இசையாலும் சரி மேட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில் எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .
பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் ஆண்டுகளை கடந்தும் ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா இவர்களின் பெயரினை சொல்லும் என்பது மட்டும் நிச்சயம் .
ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக் காலத்திலும் ஈடு கொடுத்து நிர்ற்பதால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.
பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன் படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசசாட்டு ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.
No comments:
Post a Comment